Pages

July 08, 2008

புத்தம் புதுக்காலை, இன்று மப்பான வேளை

காலையில் 8 மணிக்கெல்லாம் ஆஃபீஸ் வந்துவிடவேண்டும் என்று சீக்கிரமாகவே அலாரம் எல்லாம் செட் செய்து தூங்கினால், வழக்கம் போல் அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு 7 மணி வரை தூங்கி விட்டேன். அலரல் குரல் கொடுப்பதால் அதற்கு அலாரம் என்று பெயர் வந்ததோ? எழுந்து பார்த்தால் ஆதவனும் உரங்கி விட்டானோ என்றொரு எண்ணம். வெளிச்சமே இல்லை. பலகணியில் வந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது, வானம் மப்பும் மந்தாரமுமாக இப்பவோ அப்பவோ, எப்ப வேணாலும் மழை பெய்யலாம் என்றிருந்தது.
எனக்கு விழித்தெழும் போதே மழை பெய்து கொண்டிருந்தாலோ, பலமான காற்று அடித்துக் கொண்டிருந்தாலோ ரொம்பப் பிடிக்கும். இன்று அந்த மாதிரி ஒரு சீதோஷணநிலை. வானத்தில் மேகக்கூட்டம் ஒன்றையொன்று துரத்திச்செல்ல, அதற்கு தென்னை மர ஓலைகள் பின்னணி இசை கொடுக்க, அடா அடா அடா அங்கேயே நின்று ரசித்துக் கொண்டிருக்க மனம் துடித்தது.
ஊருல குற்றால சீஸன் சமையத்தில் இப்படித்தான் இருக்கும். இந்தக் காட்சியை கார்த்திகா பார்த்திருந்தா 'மேகங்கள் தொட்டுப்பிடிச்சு கண்ணாமூச்சி விளையாடுது'ங்கற மாதிரி ஒரு சூபர் கவிதை எழுதியிருப்பாங்க.
பலகணியிலே நின்றவாறு இயற்கையின் எழிலை ரசிக்க முடியாமல், ஆஃபீஸ் செல்லத் தயாரானேன். வெளியிலே காரெடுத்ததும் ஒரு லேசான சாரல் மழை. அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை விரித்த மாதிரி ஒரு effect. அவ்வளவு அழகான மழை.
ஆனால் அப்படியே ஓட்ட முடியுமா? பெங்களூர் சாலைகளில் சென்டிமீட்டர் தூரக்கணக்கில் எல்லோரும் ஓட்டுகிறார்கள். வேறு வழியின்றி கொஞ்சம் கூட இரக்கமில்லாமல், ரசனை என்பது கொஞ்சம்கூட இல்லாதவனாய் இயற்கை செய்யும் ஜாலங்களை ரசிக்க முடியாமல், கண்ணாடி மேல் படிந்திருக்கும் அழகான மழைச் சாரல் திட்டுக்களை, கார் வைப்பர் போட்டு துடைத்து விட்டுத்தான் ஓட்ட முடிந்தது.
"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை
என்வானிலே தினந்தோறும் தோன்றும்
புரியாத வாசம் எந்நாளும் ஆனந்தம்"

என்ற அலைகள் ஓய்வதில்லை பாடலை சி.டியில் ஒலிக்கவிட்டவாறே வந்தேன். இந்த மாதிரி இயற்கை விளையாட்டெல்லாம் ஆஃபீஸ் செல்லும் நாளில் தான் வந்து தொலைக்கணுமா?

13 comments:

முகுந்தன் said...

என்ன செய்வது? இயந்தரதனமாகிவிட்ட வாழ்க்கையில இதெல்லாம் ரசிக்க நேரம் கிடைப்பதில்லை.

Divyapriya said...

//அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு... அலரல் குரல் கொடுப்பதால் அதற்கு அலாரம் என்று பெயர் வந்ததோ?//

LOL :-D

Divyapriya said...

//அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை விரித்த மாதிரி ஒரு effect//

பெங்களூரு trafficla இப்டி எல்லாம் தோனுச்சே உங்களுக்கு...hats off...

Vijay said...

\\ Divyapriya said...
//அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை விரித்த மாதிரி ஒரு effect//

பெங்களூரு trafficla இப்டி எல்லாம் தோனுச்சே உங்களுக்கு...hats off...\\
எங்க வீடு ஔடர் ரிங் ரோட்டில் உள்ளதால் காலை 7:45 க்கு அவ்வளவா டிராஃபிக் இருக்காது. அதனால தான் இப்படியெல்லாம் தோணித்தோ என்னவோ?

Ramya Ramani said...

இந்த நாள் இனிய நாளாக தொடங்கி இருக்கு போல...

Divya said...

\வழக்கம் போல் அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு 7 மணி வரை தூங்கி விட்டேன்.\\


அலாரத்துக்கும் அல்வா வா?????
திருநெல்வேலி காரர்ன்னு நிருபிச்சுட்டீங்க:))

Divya said...

\\அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை விரித்த மாதிரி ஒரு effect. அவ்வளவு அழகான மழை. \\

அட அட.....அட!!!

இந்த வரிகளை அப்படியே மடக்கி மடக்கி நாலு வரியா எழுதியிருந்தா......அதுக்கு பேரு தான் கவுஜ.....ஸாரி......கவிதை, தெரியுமோ??

Vijay said...

\\ Ramya Ramani said...
இந்த நாள் இனிய நாளாக தொடங்கி இருக்கு போல...\\
அம்மணி,
காலங்கார்த்தால 8 மணிலேர்ந்து ராத்திரி 9 மணி வரை ஆஃபீசுலயே குந்திகினுகிறேன், இது நல்ல நாளா. ஆனாலும் காலையிலே இந்த மாதிரி ஃப்ரெஷா வந்ததால வேலை எவ்வளவு இருந்தாலும் பெரிசாவே தெரியலை.

Vijay said...

\\divya said...
இந்த வரிகளை அப்படியே மடக்கி மடக்கி நாலு வரியா எழுதியிருந்தா......அதுக்கு பேரு தான் கவுஜ.....ஸாரி......கவிதை\\
ஓ அம்மணி நிறைய கவிதை எழுதும் ரகசியம் இது தானா?
சொல்லீட்டீங்கள்ல, அடுத்த பதிவிலிருந்து 'விஜய் முத்து'ன்னு பெயரை மாற்றிட வேண்டியது தான்.

Shwetha Robert said...

வழக்கம் போல் அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு 7 மணி வரை தூங்கி விட்டேன்.
--------

same blood:))

Selva Kumar said...

பெங்களூர் சாலைகளில் சென்டிமீட்டர் தூரக்கணக்கில் எல்லோரும் ஓட்டுகிறார்கள்.//

அவ்ளொ கொடுமையா விஜய் ?

:-((

Vijay said...

வழிப்போக்கன்,
வருகைக்கு ரொம்ப நன்றி.

\\Blogger வழிப்போக்கன் said...

பெங்களூர் சாலைகளில் சென்டிமீட்டர் தூரக்கணக்கில் எல்லோரும் ஓட்டுகிறார்கள்.//

அவ்ளொ கொடுமையா விஜய் ?

:-(( \\
ஐயோ இங்கு வந்து பார்த்தால் தெரியும். நிஜமாகவே பீக் ஹவர் டிராஃபிக் ரொம்ப கொடுமையாக இருக்கும்.

கார்த்திகா said...

Lovely words about the lovely morning. Today morning, raining here in Tirunelveli. And noon I've read ur post about rain. :)