Pages

July 21, 2008

கதை கேளு கதை கேளு - 2

கதை கேளு கதை கேளு - 1

சுரேஷ்,

என் எண்ணங்கள் அனைத்துக்கும்

வண்ணங்கள் பல கொடுத்தாய்!

உன்னை நான் கடந்து

சென்ற போதெல்லாம்

என் மனதை கடத்திச் சென்றாய்

வேகமாயிருந்த என்னுள்

வெட்கம் வரவைத்தாய்

புயலாயிருந்த என்னை, உன்

புன்னகையால் பணியச் செய்தாய்

இவ்வளவும் செய்த நீ,

என்னிரு கன்னங்களில் பல,

சின்னங்கள் பதிப்பதெப்போது?

தனியாகப் பிறந்த நாள்

கொண்டாடும் நீ

என்னோடு சேர்ந்து மணநாள்

கொண்டாடுவதெப்போது?

அனு,
BE Electrical Engineering,

Final Year Electrical Engineering,

Anna University

இதைப் படித்தபோது தான் சுரேஷ் சப்த நாடியும் ஒடுங்கி வெலவெலத்துப் போய் நின்றான். என்னடா பேந்தப் பேந்த முழிக்கிறே என்று அம்மா மறுபடியும் கேட்டதும் தான் நினைவுக்கு வந்தவன், "This is all rubbish. என்னை யாரோ வேணும்னே இப்படி பண்ணறாங்க. இதை நான் சும்மா விடமாட்டேன்" என்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டான்.

"என்னாச்சும்மா" என்று வினோத்தும் நுழைய, சுரேஷுக்கு வந்த கார்டை அவனிடம் நீட்டினாள். அதை படித்த வினோத்துக்கு அதிர்ச்சியைவிட சிரிப்பு தான் வந்தது.

"டேய் கண்ணா, இந்த பூனையும் பாலக் குடிக்குமான்னு இருந்துட்டு,இப்படி ஒரு காரியம் வேற பண்ணியிருக்கியா. சொல்லவே இல்லை. அம்மா, காலேஜுல எல்லா பசங்களும் அந்தப் பொண்ணு அனு கூட இரண்டு நிமிஷம் பேச மாட்டோமான்னு அலையறாங்க. பையன் என்னடானா, சைலன்டா இருந்து வேலை பார்த்திருக்கானே"என்றவுடன், சுரேஷுக்கு கோபம் மூக்கின் நுனிக்கே வந்து விட்டது.

சுரேஷ், "டேய் நாயே, தினமும் நீயும் நானும் தானே சேர்ந்து போயிட்டு வரோம். என்னிக்காவது அந்தப் பொண்ணு கிட்ட நான் பேசறதைப் பார்த்திருக்கியா சொல்லு"

அம்மா, "டேய் அவன் கிட்ட ஏன் சாடறே? வினோத், இப்போ இதைப் பற்றி ஒண்ணும் பேச வேண்டாம்.எல்லோரும் முதல்ல போகட்டும்". வெளியில் வந்து, "என்னப்பா சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது. எல்லோரும் நல்லா சாப்பிட்டீங்களா?" ஒரு நண்பன், "அம்மா, சாப்பாடு சூப்பர் மா. நாங்கள்லாம் கிளம்பறோம். சுரேஷ், பார்க்கலாம்டா"

எல்லோரும் போன பிறகு, "ம்ம் இப்போ சொல்லு, யாரிந்த பொண்ணு"

சுரேஷ், "அம்மா அந்தப் பொண்ணு பழவந்தாங்கல் ஸ்டேஷன்ல ஏறுவா. அதுவும் லேடீஸ் கம்பாட்மென்டில் தான் ஏறுவா. அவ்வளவு தான் தெரியும்"

அம்மா, "ஓ இவ்வளவு நோட் பண்ணி வச்சிருக்கியா"

சுரேஷ், "அம்மா என்ன நீ. எல்லாப் பசஙளும் தான் அவளுக்கு லுக் விடறானுங்க"

அம்மா, "ஆனா, அவள் உனக்கு தானே லவ் லெட்டர் எழுதியிருக்கா"

சுரேஷ், "அம்மா படுத்ததேம்மா. இது அந்தப் பொண்ணு எழுதியிருக்கறது இல்லை. அவ்வளவு தான்"

அம்மா, "ஏன் உனக்கு அவளோட எழுத்து எப்படி இருக்கும்னு தெரியுமா?"

வினோத், "இது girls எழுத்து மாதிரிதான் இருக்கு"

சுரேஷ், "ஐயோ அம்மா, ஓவெரா பில்ட் அப் கொடுத்துண்டே போகாதே. சத்தியமா சொல்லறேன், அந்தபொண்ணு கூட நான் பேசினதே கிடையாது"

வினோத், "ஆ ஆ, யார் கிட்ட பொய் சொல்லறே, போன மாசம் கூட அந்தப் பொண்ணு கூட கல்சுரல் பிரொகிராம் காம்பியர் பண்ணினியே. அதுக்குள்ள பேசினதே கிடையாதுன்னு சொல்லறே"

சுரேஷ், "டேய் வினோத், சேம் சைட் கோல் போடாதே டா. சேர்ந்து காம்பியர் பண்ணினோம். ஆனால் ஒண்ணும் பேசலை"

"ஆமாம், அவளும் உன் கிட்ட பேசினது மாதிரி எழுதலியே. நீ அவளைப் பார்வையாலேயே மயக்கியிருக்கறதாத் தானே எழுதியிருக்கா?" என்று அம்மாவும் கலாய்க்க ஆரம்பித்தாள்.

"என்ன யார் என்ன எழுதியிருக்கா?" என்று கேட்டுக் கொண்டே சுரேஷின் அப்பா வந்தார். "அம்மா அம்மா ப்ளீஸ் ப்ளீஸ்" என்று சுரேஷ் சொல்லச் சொல்ல அப்பாவிடம் அவனுக்கு வந்த வாழ்த்து கார்டை நீட்டினாள். அப்பா ஒரு பார்வை பார்த்து விட்டு, "ஹ்ம்ம் எனக்கெல்லாம் இந்த மாதிரி யாராவது அனுப்பியிருந்தா, உங்க அம்மாவை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம். All the Best சுரேஷ்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

சுரேஷ், "அம்மா அந்தப் பொண்ணு கூட ஒரு இரண்டு மூன்று தடவை காலேஜ் ஃபங்ஷன்'ல பேசியிருக்கேன். அவ்வளவு தான்"

வினோத், "முதல்ல பேசினதே கிடையாதுன்னு சொன்னே, இப்போ இரண்டு மூணு தடவை தான் பேசியிருக்கேன்னு சொல்லறே. எது உண்மை. அம்மா, இவன் எதையோ மறைக்கிறான்"

சுரேஷ், "நான் எதையும் மறைக்கலை. இது யாரோ வேணும்னே என்னை கலாய்க்கறதுக்காக இப்படி அனுப்பியிருக்காங்க"

அம்மா, "அப்போ நாளைக்கே இதை கன்ஃபர்ம் பண்ணிடுவோம். அந்தப் பொண்ணு கிட்டே போய் கேளு. எனக்கு இந்த மாதிரி கார்ட் அனுப்பினியான்னு?"

சுரேஷ், "அவ்வளவு தான். அந்தப்பொண்ணு ப்ரின்சிபால் கிட்ட புகார் கொடுத்ததுன்னா, இவ்வளவு நாள் கட்டிக்காத்த மானம் எல்லாம் கப்பலேறிடும். எனக்கு தெரியும், இதை எப்படி விசாரிக்கணும்னு. மறுபடியும் சொல்லறேன், இது அந்தப் பொண்ணு எழுதினது இல்லை" என்று பொறிந்து தள்ளி விட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.


படுக்கையில் படுத்தவனுக்கு தூக்கம் வருமா? "யார் இப்படி செய்திருப்பார்கள்? எவ்வளவோ கலாய்த்திருக்கும் நண்பர்கள், ஒரு பெண்ணின் பெயரை உபயோகப்படுத்தும் அளவிற்குப் போக மாட்டார்கள். தெரிந்து விட்டால் பிரச்னையாகிவிடும். அனுவைப் பற்றி தெரிந்த யாரோ தான் செய்திருக்க வேண்டும். காலேஜ் நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் அவளைத் தெரியாது. ஒரு வேளை அனுவே தான் இதை அனுப்பியிருப்பாளோ? இந்த எண்ணம் மனதிற்குள் வர, தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். இப்படியெல்லாம் கூட எழுதும் பெண்ணா? அவளைக் கவரும் படி அப்படி என்ன செய்து விட்டேன். போன வருஷம் Quiz போட்டியில் நான் ஜெயித்ததை முதல் வரைசியிலிருந்து பார்த்தாளே, அப்போது impress செய்திருப்பேனோ? மாணவர்கள் கோரிக்கையை ப்ரின்சிபாலிடம் எடுத்துறைத்து எல்லா மாணவர்களாலும் பாராட்டப்பட்டேனே, அப்போது என்னைப் பிடித்திருக்குமோ? இல்லை நானும் அவளும் கல்ச்சுரல் ப்ரோகிராம் காம்பியர் செய்தோமே, அப்போது கவர்ந்திருப்பேனோ.

அவளை ஒரு ஐந்தாறு முறை நேருக்குநேர் பார்த்திருப்பேன். பெரிசாக எதுவும் பேசியது கூட கிடையாது. அப்புறம் எப்படி இவள் இப்படியொரு கார்ட் அனுப்பியிருக்கிறாள். அதுவும் என் கைபேசிக்கோ மெயிலுக்கோ அனுப்பாமல் வீட்டுக்கு அனுப்பியிருக்காளே. ஒரு வேளை, நிஜமாகவே என்னை விரும்புகிறாளா? என்னைவிட personality'யானவர்கள் கல்லூரியில் நிறைய பேர் இருக்கும் போது, என்னை ஏன் விரும்ப வேண்டும்?

சீ சீ, என்ன இது இப்படியெல்லாம் நினைக்கிறேனே. என்னா ஆச்சு எனக்கு. இது அவள் அனுப்பிய கார்ட் இல்லை. இது யாரோ என்னை கலாய்ப்பதற்காகத் தான் செய்திருக்கிறார்கள்" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு புரண்டு படுக்கையில், அவன் கைப்பேசி மணியொலித்தது. "யாரிந்த வேளையில் என்று எடுத்துப் பார்த்தவனுக்கு, புதிதாக ஒரு நம்பரிலிருந்து அழைப்பு. படுத்த படியே ஹலோ என்று சொன்னவன், தூக்கிவாரிப் போட்டு எழுந்து உட்கார்ந்தான்" .
மறுமுனையிலிருந்து, "Is this சுரேஷ்" என்று ஹஸ்கியாக ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு.


தொடரும்...




30 comments:

Ramya Ramani said...

அட சூப்பரா போறதே கதை...அசத்தல்

அனுவின் வரிகள் அருமை :))

ஆனா ஒரு பொண்ணு டமால்னு வீட்டுக்கு கார்ட் அனுப்பறாளா!! இதை நீங்க எப்ப்டி கொண்டுபோறீங்கனு பாக்க ஆவலுடன் வெய்டிங்ஸ்.....

Ramya Ramani said...

சுரேஷ் அம்மா,அப்பா Dialogues எல்லாம் சூப்பர்...பெற்றோர்கள் இவ்வளோ Friendly-ah இருக்கனும்..அப்போ தான் பசங்க என்ன விஷயம்னாலும் துணிவா சொல்வாங்க..அவங்க தப்பு பண்ணாலும் திருத்த வசதியா இருக்கும்...

Ramya Ramani said...

நல்லா போகுது விஜய் வாழ்துக்கள் :)))

Divya said...

சான்ஸே இல்லீங்க......ரொம்ப ரொம்ப நல்லா கதை எழுதுறீங்க:))

டயலாக்ஸ் எல்லாம் சும்மா பட்டய கிளப்புது!!!

Divya said...

\\என் எண்ணங்கள் அனைத்துக்கும்வண்ணங்கள் பல கொடுத்தாய்!உன்னை நான் கடந்து சென்ற போதெல்லாம் என் மனதை கடத்திச் சென்றாய்வேகமாயிருந்த என்னுள்வெட்கம் வரவைத்தாய்புயலாயிருந்த என்னை, உன் புன்னகையால் பணியச் செய்தாய்இவ்வளவும் செய்த நீ,என்னிரு கன்னங்களில் பல,சின்னங்கள் பதிப்பதெப்போது?தனியாகப் பிறந்த நாள் கொண்டாடும் நீஎன்னோடு சேர்ந்து மணநாள் கொண்டாடுவதெப்போது?\\


ஆஹா........இப்படி எல்லாம் கூட ப்ரோபோஸ் பண்ணலாமா??

சூப்பரு!!!

Divya said...

\\அப்பா ஒரு பார்வை பார்த்து விட்டு, "ஹ்ம்ம் எனக்கெல்லாம் இந்த மாதிரி யாராவது அனுப்பியிருந்தா, உங்க அம்மாவை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம். All the Best சுரேஷ்" \\

சுரேஷின் அப்பா எங்கிருந்தாலும் வாழ்க!!!

இப்படி ஃப்ரண்டிலியா அப்பா & அம்மா இருந்துட்டா எவ்வளவு நல்லாயிருக்கு:))

Divya said...

\\என்னைவிட personality'யானவர்கள் கல்லூரியில் நிறைய பேர் இருக்கும் போது, என்னை ஏன் விரும்ப வேண்டும்?\\

பெர்சனாலிட்டி மட்டும் பார்தெல்லாம் 'காதல்' வராதுப்பா சுரேஷ்!!!

Divya said...

நிஜம்மா ரொம்ப நல்லாயிருக்கு நீங்க கதையை கொண்டு போகும் விதம்......அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டீங்ஸ்:)))

Divyapriya said...

கவித செம சூப்பர், அதுலயும் இந்த வரிகள் chance ஸே இல்ல…பின்றீங்க விஜய்….நடத்துங்க…

//உன்னை நான் கடந்து

சென்ற போதெல்லாம்

என் மனதை கடத்திச் சென்றாய்//

Divyapriya said...

//ஹ்ம்ம் எனக்கெல்லாம் இந்த மாதிரி யாராவது அனுப்பியிருந்தா, உங்க அம்மாவை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம். All the Best சுரேஷ்//
ஹ்ம்ம்…இப்டி ஒரு அப்பாவா??? எங்க இருக்கரு சொல்லுங்க…ஒரு கோவில கட்டிடுவோம் :-)

Divyapriya said...

இன்னிக்கும் கதைல twistaa??? கலக்குங்க…

Vijay said...

\\Ramya Ramani said...
நல்லா போகுது விஜய் வாழ்துக்கள் :)))

Divya said...
டயலாக்ஸ் எல்லாம் சும்மா பட்டய கிளப்புது!!!

Divyapriya said...
இன்னிக்கும் கதைல twistaa??? கலக்குங்க…\\

I am literally flattered. இன்னிக்கு காலையிலிருந்து ஒரே water infection, அதாவது ஜலதோஷம்

Vijay said...

\\Ramya Ramani said...
சுரேஷ் அம்மா,அப்பா Dialogues எல்லாம் சூப்பர்...\\

\\Divya said...
சுரேஷின் அப்பா எங்கிருந்தாலும் வாழ்க!!!\\

\\ Divyapriya said...
ஹ்ம்ம்…இப்டி ஒரு அப்பாவா??? எங்க இருக்கரு சொல்லுங்க…ஒரு கோவில கட்டிடுவோம் :-)\\

எல்லா பொண்ணுங்களும் இப்படியொரு அப்பா இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைக்கிறதைப் பார்த்தா எங்கேயோ ஏதோ இடிக்குதே :)

முகுந்தன் said...

//நம்ம கற்பனைக்குதிரியும் எவ்வளவு தூரம் தான் போகிறதென்று பார்த்து விடலாம் என்ற தைரியம் வர, இதோ நான் நானே எழுதும் கதை.
//
சும்மா பிச்சிட்டீங்க விஜய்...

//தனியாகப் பிறந்த நாள் கொண்டாடும் நீஎன்னோடு சேர்ந்து மணநாள் கொண்டாடுவதெப்போது//

அசத்தறீங்க...

//அனு,
BE Electrical Engineering, //

நீங்களும் Electrical Engineering, அவங்களும் Electrical Engineering ?
எங்கியோ உதைக்குதே,
இதுவும் சுய புராணமோ ?:-)


எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கொஞ்சம் வேலை இருந்ததால [ஆபீஸ் வேலை இல்லைங்க :-)] உடனே படிக்க முடியல .
இப்போ அடுத்த பகுதிக்காக
ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Vijay said...

\\நீங்களும் Electrical Engineering, அவங்களும் Electrical Engineering ?
எங்கியோ உதைக்குதே,\\

எனக்கே அல்வாவா?முகுந்தன் நான் அண்ணா யுனிவர்சிடி இல்லையே!!

Divya said...

@vijay
\\எல்லா பொண்ணுங்களும் இப்படியொரு அப்பா இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைக்கிறதைப் பார்த்தா எங்கேயோ ஏதோ இடிக்குதே :)\\

கற்பூர மூளை விஜய் உங்களுக்கு.....கப்புன்னு 3 கமெண்ட்ஸும் சேர்த்து வைச்சு கண்டு புடிச்சுட்டீங்க:)))

Ramya Ramani said...

விஜய் உங்க ப்ளாக்-ல இருக்கும் "அஞ்சறைப்பெட்டி" லிங்க ரொம்ப உபயோகமான லிங்க்...நன்றி !!

Vijay said...

\\Divya said...
கற்பூர மூளை விஜய் உங்களுக்கு.....கப்புன்னு 3 கமெண்ட்ஸும் சேர்த்து வைச்சு கண்டு புடிச்சுட்டீங்க:)))\\

ஹா ஹா :)
Actually, அப்பாக்கள் எல்லோரும் பையன் விஷயத்தில் அவ்வளவு ஸீரியஸா இருக்கா மட்டாங்க. ஆனா, பொண்ணு விஷயத்துல ரொம்பவே உஷாரா இருப்பாங்க :)

Vijay said...

\\Ramya Ramani said...
விஜய் உங்க ப்ளாக்-ல இருக்கும் "அஞ்சறைப்பெட்டி" லிங்க ரொம்ப உபயோகமான லிங்க்...நன்றி \\
ஏதோ நம்மாலான ஒரு சிறு சேவை. ஆனால் அஞ்சரைப்பெட்டி ஓனர் கிட்ட இன்னும் பெர்மிஷன் வாங்கலை. நாளைப்பின்ன என் மேல் கேஸ் போட்டா காப்பாத்துங்க :)

Divyapriya said...

என்ன 3rd பார்ட் கானோம்???

Divyapriya said...

@விஜய்
//Actually, அப்பாக்கள் எல்லோரும் பையன் விஷயத்தில் அவ்வளவு ஸீரியஸா இருக்கா மட்டாங்க. ஆனா, பொண்ணு விஷயத்துல ரொம்பவே உஷாரா இருப்பாங்க :)//

என்ன உலகமடா இது :-((

Vijay said...

\\Divyapriya said...
என்ன 3rd பார்ட் கானோம்???\\
அம்மணி,
அடுத்த பார்ட்'ல என்ன எழுதறதுன்னு இனிமேல் தானே யோசிக்கணும் :)

தாரணி பிரியா said...

இயல்பான வசனங்கள் சூப்பரான டுவிஸ்ட்ன்னு பின்னறிங்க விஜய். வாழ்த்துக்கள்.


//@விஜய்
//Actually, அப்பாக்கள் எல்லோரும் பையன் விஷயத்தில் அவ்வளவு ஸீரியஸா இருக்கா மட்டாங்க. ஆனா, பொண்ணு விஷயத்துல ரொம்பவே உஷாரா இருப்பாங்க :)//

ஆமா ஆனா அம்மாக்கள் எல்லாம் பசங்க விசயத்தில சீரியஸாதான் இருப்பாங்க.

Vijay said...

\\ தாரணி பிரியா said...
இயல்பான வசனங்கள் சூப்பரான டுவிஸ்ட்ன்னு பின்னறிங்க விஜய். வாழ்த்துக்கள். \\
Thanks a lot Dharani Priya :)

ஜி said...

thodar kathai ezuthura thotru viyaathi ungalukkum vanthidichaa...:))))

vaazththukkal... kalakkunga... kathai nalla poikittu irukkuthu

ஜி said...

Ippo technical mistakes.. :))

Anna university - Principal

ஜி said...

//என்னிரு கன்னங்களில் பல,

சின்னங்கள் பதிப்பதெப்போது?

//

Class!!!

Vijay said...

\\ஜி said...
Ippo technical mistakes.. :))

Anna university - Principal\\
Agreed Anna University has got only Dean. No Principal. :(

Vijay said...

\\ஜி said...
thodar kathai ezuthura thotru viyaathi ungalukkum vanthidichaa...:))))\\
ஆcடுஅல்ல்ய், இந்த கதைக்குண்டான கரு ரொம்ப நாட்களுக்கு முன்னாடியே என் மனசுல இருந்து வந்திருக்கு. ஆனா, அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க இவ்வளவு நாளாகியிருக்கு. நாம கதையெழுதி அதை ஒரு இரண்டு பேராவது படிக்க வேன்டாமா. அதனால் கொஞ்சம் பொறுத்திருந்து இப்போது எழுதுகிறேன்.

ஜியா said...

//நாம கதையெழுதி அதை ஒரு இரண்டு பேராவது படிக்க வேன்டாமா. அதனால் கொஞ்சம் பொறுத்திருந்து இப்போது எழுதுகிறேன்//

:))) Superaa ezuthureenga... menmelum pala kathaigal koduththu asaththa vaazththukkal....