Pages

October 06, 2009

குந்தவையின் கட்டளை

கொஞ்ச காலம் பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் இருந்தாலும், நம்ம ரசிகப்பெருமக்கள் விடமாட்டேன்றாங்க (டேய் டேய் அடங்குடா! வேற யாராவது சொல்வதற்கு முன், நானே சொல்லிக் கொள்கிறேன்)
குந்தவை அக்கா, திடீர்னு ஒரு கட்டளை இட்டிருக்காங்க. இந்த நாலுக்கும் என்ன சம்பந்தம்’னு தெரியலை. ஆனால் எல்லாமே கொஞ்சம் விவகாரமான விஷயமாத்தான் இருக்கு. ஏதோ என் மனசுல பட்டதை எழுதியிருக்கேன். நீ என்னடா சொல்லுறதுன்னு, நீ பெரிய *()$%*(#$(%(#’ங்கியா’ன்னு கேட்டு ஆட்டோ கீட்டொ அனுப்பிடாதீங்க.

காதல்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வார்த்தைக்கான அர்த்தம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. பள்ளிப்ப்ருவத்தில், ஒரு ஆணும் பெண்ணும் கட்டிக்கொண்டு ஆடிப்பாடி கல்யாணம் செய்து கொள்வதற்குப் பெயர் தான் காதல் என்றிருந்தது. விடலைப் பருவத்தில் ஒரு தலைக் காதல். ஸ்டெஃபி கிராஃப், மாதுரி தீக்ஷித், ஸ்ரீ தேவி இப்படியாக என் ஒரு தலை ராகத்தின் ஆலாபனை ரொம்பவே நீளம். விவரம் தெரிந்த பிறகு, எதன் / யார் மீதாவது பற்று அல்லது ஈர்ப்பு அதிகமாகி அதோடு / அவரோடு ஏற்படும் உறவு தான் காதல் என்று புலப்பட்டது. அப்படிப் பார்க்கையில், வாழ்வின் எந்நாளிலும் குறுக்கிடாமல் இருந்ததில்லை. கிரிக்கெட், தாய் நாடு, தாய் மொழி, புத்தகம், வேலை, தாய், மனைவி இப்படியாக நான் காதலிக்கும் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

எலேய் கேட்ட கேள்விக்கு டகால்டி வேலையெல்லாம் காட்டாமல் ஒழுங்கா பதில் சொல்லுனு என் மனசாட்சி உள்ளேயிருந்து கத்துவதால், எல்லோருக்கும் தெரிந்த காதல் பற்றியே இரண்டு வரி போனால் போகுது, எழுதித் தொலைக்கிறேன்.

கல்யாணத்திற்கு முன்பே காதல் வயப்பட்டிருக்கேன். அவளை நினைத்து உருகாத நாளில்லை. அவளைக் காண வேண்டும் என்று ஏங்காத தருணங்கள் இல்லை. அவளையே நினைத்து அவளோடு வாழ்வதாக கற்பனை செய்து கொண்ட தினங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. பார்க்கும பெண்களில்லாம் அவள் ஒளிந்திருக்கிறாளா என்று நோட்டம் விட்ட அந்த தினங்கள் மறக்க முடியாதவை. என்னை ஆட்கொண்ட அந்த உணர்வை காதல் என்று தான் சொல்ல வேண்டுமானால் ஆம், நானும் காதல் வயப்பட்டேன். என்ன நான் காதலிச்ச பொண்ணு 1000 வருஷத்துக்கு முன்னால் வாழ்ந்தவள். நான் காதல் வயப்பட்டவளைப் பற்றி இதொ நான் ஏற்கனவே எழுதியது.

கடவுள்

ஆம் இருக்கிறது. என்னடா இப்படி மரியாதையில்லாமல் சொல்கிறானே என்று வெகுண்டு எழ வேண்டாம். அண்ட சராசரத்தையும் கட்டிக் காத்து, அந்த உருவமற்ற, பிறப்பு இறப்பு எதுவுமில்லாத, கால நேரமில்லாத, எங்கும் வியாபித்திருக்கும் சக்தியை வேறெப்படி அழைப்பது?? கடவுள், என்ற வார்த்தைக்கு காஞ்சி பெரியவர் ஒரு முறை கொடுத்த விளக்கம் தான் ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு உயிருக்கும் உள்ளே கிடக்கும் சக்தியே, ‘கடவுள்’. மனிதன் தன்னை மீறி எதுவும் இல்லை, யாரும் இல்லை என்ற கர்வம் கொள்ளாமலிருக்கவே கடவுள் என்றொரு சக்தி இருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போ பிரம்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், லக்ஷ்மி சரஸ்வதி, முருகன், அல்லாஹ், இயேசு இவங்கள்’லாம்?? எல்லோரும் ஒரே பரம்பொருளுக்குள் ஐக்கியமாகியிருக்கின்றனர் என்று தான் நம்புகிறேன். கஷ்டகாலம் வரும் போதெல்லாம், கடவுளிடம் முறையிடுவேன். கஷ்டம் நீங்குகிறதோ இல்லையோ, அதைத் தாங்கும் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கிறது, மனது இதமாயிருந்திருக்கிறது. கடவுளைக் கண்டதில்லை, ஆனால், அப்படியொரு சக்தி இருப்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

பணம்

பணம் பத்தும் செய்யும்
பணம் பாதாளம் வரை பாயும்
சமீபத்தில் படித்த புதினத்தில் இவ்வரிகளைக் கண்டேன்.
Money is Freedom
Money is Power
முற்றிலும் உண்மையான வார்த்தைகள். வசதியான வாழ்க்கைக்கும், பிறர்க்கு உதவுவதற்கும், பணம் மிக மிக அவசியம். ஆனால் பணம் மட்டுமே எல்லாம் இல்லை. பணத்தால் எப்போதும் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்பதும் மனதில் இருக்க வேண்டும்.

அழகு

அழகைப் பற்றி கவிப்பேரரசு, பாட்டே எழுதியிருக்கார். எதோ, எனக்குத்தெரிந்த அழகைப் பற்றிச் சொல்கிறேன்.
அழகு என்றால் நினைவுக்கு வருவது, ஐஷ்வர்யா ராய், அசின், மாதுரி தீக்ஷித், தீபிகா படுகோன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். (காயத்ரி அவள் பெயரைச் சேர்த்துக் கொள்ளுமாறு கண்களால் ஆணையிடுகிறாள்) ஆனால் இந்த புற அழகெல்லாம் சில காலத்துக்குத்தான். என்னைப் பொறுத்தவரை அழகு என்பது பார்ப்பவர் கண்களிலும் இல்லை, பார்க்கப்படுபவர் உடலிலும் இல்லை. அது பார்ப்பவர் எண்ணத்திலும், பார்க்கப்படுபவரின் மனதிலும் தான் இருக்கிறது. எனக்கு நெல்சன் மண்டேலா கூட அழகாகத்தான் தெரிகிறார்.
அதற்காக அழகாகத் தோற்றமளிக்கக் கூடாது என்பது என் கருத்தல்ல. ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் பார்ப்பவர் கண்கள் கூசாமலும், நெளியாமலும் இருந்தாலே அழகாகத் தான் இருக்கும்.
அப்பாடா!! கொடுத்த வேலையை ஒரு வழியா செய்து முடிச்சாச்சு. யார் யாருக்கு இந்த நாலு மேட்டர் பற்றியும் எழுதணும்’னு தோணுதோ, எழுதலாம். நான் யாரையும் வம்புக்கு இழுக்கலை!!

8 comments:

kanagu said...

me the first :)

kanagu said...

nalla vilakkangal anna..

epdi ovvoru topic alyum ivlo matter therinju vachi irukkenga,...

ennala rendu line ku mela poga mudiyala... :))

குந்தவை said...

ஹா...ஹா...ஹா.... தலைப்பை பார்த்து சிரித்துவிட்டேன்......

கதவு கட்டளையை தவிர எல்லாக் கட்டளையும் கடவுள் கட்டளையாக பாவித்து கருமத்தை காலம்தாள்த்தாது செய்துமுடித்த விஜய்க்கு நன்றி.

Karthik said...

nice one vijay..:)

மேவி... said...

nalla irukku ..... detail cmd piragu podugiren

Divyapriya said...

வனவாசம் முடிஞ்சு வந்தாச்சா? :))
நல்ல பதிவு, எல்லாமே தெளிவான விடைகள் விஜய்...

இந்த வரி எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சுது...

//கஷ்டம் நீங்குகிறதோ இல்லையோ, அதைத் தாங்கும் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கிறது//

முற்றிலும் உண்மை...

முகுந்தன் said...

எப்பொழுதும் போல் மிகவும் ரசித்தேன்:)

Vijay said...

\\ kanagu said...
nalla vilakkangal anna..

epdi ovvoru topic alyum ivlo matter therinju vachi irukkenga,...

ennala rendu line ku mela poga mudiyala... :))\\
நன்றி கனகு :-)

\\ குந்தவை said...
கதவு கட்டளையை தவிர எல்லாக் கட்டளையும் கடவுள் கட்டளையாக பாவித்து கருமத்தை காலம்தாள்த்தாது செய்துமுடித்த விஜய்க்கு நன்றி.\\
கொடுத்த கட்டளையை ஒழுங்கா செய்யணும்லா. அதேன் :-)

\\ Karthik said...
nice one vijay..:)\\
நன்றி கார்த்திக்

\\டம்பி மேவீ said...
nalla irukku ..... detail cmd piragu podugiren\\
அப்படியா. நிறைய திட்டப் போறேன்னு பாலிஷ்டா சொல்லறீங்க :)

\\ Divyapriya said...
வனவாசம் முடிஞ்சு வந்தாச்சா? :))
நல்ல பதிவு, எல்லாமே தெளிவான விடைகள் விஜய்...

இந்த வரி எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சுது...\\
வனவாசத்தை முடிச்சுரலாம்’னு சொல்லறீங்களா!!!

\\முகுந்தன் said...
எப்பொழுதும் போல் மிகவும் ரசித்தேன்:)\\
ரொம்ப நன்றி முகுந்தன் :-)