Pages

October 09, 2009

கமல்ஹாசனும் தெளிவற்ற தமிழ் ரசிகர்களும்

மிழ் சினிமா ரசிகர்களுக்கென்றுமே நிழலையும் நிஜத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பார்த்துவிட்டு பல பேர், (நிறைய வலைத்தளங்களில் கூட) கம்ல்ஹாசன் வன்முறையைத் தூண்டும் விதமாக படமெடுத்திருக்கிறார், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவோருக்கெதிராகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது, வன்முறைக்கு வன்முறக்கு தான் பதிலா, அப்படியென்றால் ஹே ராம், அன்பே சிவம் போன்ற படங்கள் எடுத்த கமல்ஹாசனின் சமூக நிலைப்பாடு மாறி விட்டதா, அப்படி இப்படி என்று காமா சோமா என்று கேள்விகள். இத்தனைக்கும் உ.போ ஒ. உண்மையிலேயே ஒரு தமிழ்ப் படம் கூட இல்லை. வெட்னெஸ்டே என்ற ஹிந்திப் படத்தின் ரீ-மேக்.

சினிமா பார்ப்பவர்கள் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பார்ப்பது ஒரு கதையை. அதில் வரும் நடிகர்கள் கதாபாத்திரங்கள். அவர்கள் அதில் செய்யும் காரியம் எல்லாமே அந்தந்த கதாபாத்திரங்களின் செயல்கள். கமல்ஹாசன் போன்ற சினிமாக்காரர்கள், என்றுமே தனது சொந்தக் கருத்தை முன் வைக்க சினிமா என்னும் ஊடகத்தைப் பயன்படுத்தியதில்லை. நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் என்ற நிஜ மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் தனது நாத்திக வாதத்தை என்றைக்குமே முழு மூச்சாக சினிமா மூலமாகப் பரப்பியதில்லை. தசாவதாரத்தில் கோவிந்த் பேசும் சில வசனங்கள் நாத்திகத் தன்மையுடையது என்று வாதிட்டால், என்னால் கடவுளைக் காப்பாற்ற வேண்டி உயிரையே கொடுத்த அந்த நம்பியைச் சொல்ல முடியும். தேவர் மகன் படத்தில் தனது பகுத்தறிவைப் பரப்பும் விதமாக, கல்யாணக் காட்சிகளை ரெஜிஸ்டர் ஆபிஸிலே வைத்து நடப்பது போல் காட்டியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஒரு கதாபாத்திரத்திற்கு என்னென்ன அம்சங்கள் இருக்கின்றனவோ, அதைத்தான் காட்டிருப்பார்.

அவருக்கு திருமணத்திலே கூட நம்பிக்கை கிடையாது என்று எங்கோ படித்ததாக ஞாபகம். ஆனால் எந்தப் படத்திலும் திருமணத்திற்கெதிராகப் பகிரங்கமாக பிரசாரம் செய்ததில்லை. பி.கே.எஸ்’இல் கூட கடைசியில் திருமணம் கொள்வார். எல்லாமே ஒரு கதையில் வரும் நிழல் கதாபாத்திரங்கள்.

உ.போ.ஒ. படத்தில் அவர் உருவாக்கியது ஒரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு நாட்டில் மந்தமாக நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையைப் பார்த்து ஆத்திரம் வருகிறது. அவன் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். அதை அத்தோடு நிறுத்தி விட வேண்டும். அதை விட்டுவிட்டு கமல்ஹாசன் வன்முறைக்கு வன்முறை தான் பதில். கண்ணுக்கு கண் ரத்தத்திற்கு ரத்தம் என்னும் தனது கருத்தைத்தான் உ.போ.ஒ. மூலம் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் குதிப்பதில் அர்த்தமில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே ஒரு பேட்டியில், “என் படங்கள் மூலம் நான் யாருக்கும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் இந்தப் படத்தில் என்ன செய்தி சொல்லியிருக்கீங்க என்று கேட்கிறார்கள். செய்தி சொல்ல நான் என்ன போஸ்ட்மேனா” என்று அவரே சொல்லியிருக்கிறார்.

உண்மையில் தமிழ் ரசிகர்கள் இன்னும் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து மீளவில்லையென்று தான் சொல்ல வேண்டும். படத்தில் எம்.ஜி.ஆர் ரஜினி என்ன பேசுகிறார்களோ, அப்படியே, நிஜத்திலும் நிகழ வேண்டும் என்ற மனப்பான்மை இன்னும் நீங்கவில்லை. “நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன்” என்று ஆடிப்பாடி வசனம் பேசிய எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களைப் பார்த்து பார்த்தே பழகிவிட்ட நம் மக்களுக்கு (அதிலே நானும் அடக்கம்) கமல் போன்றவர்கள் செய்யும் நிழல் படத்தையும் நிஜம் என்றே நம்புகிறார்கள்(றோம்). அதனால் தானோ என்னவோ ரஜினி, விஜய் போன்றவர்களும் மாஸ் ஹீரோயிசம் என்ற ஸ்டேடஸ்ஸிற்க்காக பன்ச் டயலாக் பேசுகிறார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான சிம்பு, தனுஷ், விஷால் வரை இந்த பன்ச் டயலாக் கலாசாரம் பரவி விட்டது.

கமல்ஹாசன் என்ற தனி மனிதனின் கருத்துக்கள் அவருடையது. (Thankfully) அதை அவர் ஒரு சினிமா கதாபாத்திரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு அதைச் சொன்னதில்லை. அந்தத் தனி மனித கருத்துக்களோடு பேதம் இருப்பின் அதை விவாதிக்கலாம், ஏன் குற்றம் கூட சொல்லலாம். அவரது நிறைய கருத்துகள் எனக்குப் பிடிக்காது. அதற்காக அவர் படைக்கும் கதாபாத்திரங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்த்தனம்.

“கமல்ஹாசன் போன்ற celebrity திரையில் என்ன சொன்னாலும் செய்தாலும், அதை தமிழ் நாட்டு மக்கள் அதை அவரே நிஜ வாழ்க்கையிலும் சொல்வார் செய்வார் என்று தான் நம்புவோம்” என்று வாதிட்டால், மக்களுக்கு எது நிழல் எது நிஜம் என்று educate செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அடிப்பிடிடா பாரதவட்டா என்று மீண்டும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தால், நல்ல படைப்புகளைப் பார்ப்பது அரிதாகி விடும்.

பி.கு. நான் மேலேயெழுதியிருப்பது உ.போ.ஒ’வின் விமர்சனம் இல்லை.

20 comments:

முகுந்தன் said...

I totally agree with you Vijay.


//“கமல்ஹாசன் போன்ற celebrity திரையில் என்ன சொன்னாலும் செய்தாலும், அதை தமிழ் நாட்டு மக்கள் அதை அவரே நிஜ வாழ்க்கையிலும் சொல்வார் செய்வார் என்று தான் நம்புவோம்” என்று வாதிட்டால், மக்களுக்கு எது நிழல் எது நிஜம் என்று educate செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அடிப்பிடிடா பாரதவட்டா என்று மீண்டும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தால், நல்ல படைப்புகளைப் பார்ப்பது அரிதாகி விடும்.
//

Super. I enjoyed this movie.

Divya said...

\\நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான சிம்பு, தனுஷ், விஷால் வரை இந்த பன்ச் டயலாக் கலாசாரம் பரவி விட்டது.\\

LOL:)))

Divya said...

Very well written Vijay!!!

Kudos:)))

kanagu said...

nalla padhivu anna...

enoda karuthum ithe than... avar oru kalaingan... cinema avarathu thozhil... avar yerkum ovvoru paathirathukkum arasiyal vannamum matha vannamum poosa aarambithal... athu engum nirkathu...

silar avarathu inathaiyum kathapathirathaiyum inaippathil enakku udanpadilliai enbathai vida athai naan vanmaiyaaka kandikkiren...

Divyapriya said...

நல்ல பதிவு விஜய்...உ.போ.ஒ படம் நிஜமாவே நல்லா இருந்துச்சு...

Rajalakshmi Pakkirisamy said...

//கமல்ஹாசன் போன்ற celebrity திரையில் என்ன சொன்னாலும் செய்தாலும், அதை தமிழ் நாட்டு மக்கள் அதை அவரே நிஜ வாழ்க்கையிலும் சொல்வார் செய்வார் என்று தான் நம்புவோம்” என்று வாதிட்டால், மக்களுக்கு எது நிழல் எது நிஜம் என்று educate செய்ய வேண்டும்//

:) :) :)

VISA said...

அன்பரே. உங்கள் கருத்துக்கள் சிலவற்றை நான் எதிர்க்கிறேன். என்னுடைய பதிவு ஒன்றில் உ.போ.ஒ. பற்றி எழுதியிருக்கிறேன். அதில் திரைப்படத்தை திரைப்படமாக பார்த்து தான் எழுதியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் எடுத்துக்கொள்ளவில்லை. சினிமாவை உற்று பார்த்தால் உங்களுக்கு புரியும். அந்நியன் என்றொரு படத்தில் ஒரு வசனம் வரும். ஒரு கொலை நடந்த பிறகு "இது கொலை அல்ல ஒரு வாக்குமூலம்" எ ஸ்டேட்மென்ட். ஒரு திரைப்படத்தின் திரைக்கதை கதைக்கொத்தோ திரைக்கதைக்கு ஒத்தோ போகாமல் அதில் நடிக்கும் நடிகனின் கண்ணோட்டத்தில் போகிற போது அந்த திரைப்படம் ஒரு வாக்குமூலம் ஆகிறது. அப்படி ஒரு பிழை இந்த திரைப்படத்தில் நடந்திருப்பதால் தான் மக்களுக்கு இது கமலின் வாக்குமூலமாக தெரிகிறதே தவிர திரைப்படமாக தெரியவில்லை. இந்த திரைப்படத்தை ஒரு புதிய முன்னணி இயக்குனரிடம் கொடுத்திருந்தால் அவர் கமல் மோகன்லால் என்று எந்த தனிநபர் குறுக்கீடும் இல்லாமல் வெறும் தி வெட்னஸ்டே என்ற திரைப்படத்தை மட்டும் தமிழில் கதை ஆக்கியிருப்பார். அப்போது யாருக்கும் கேள்விகள் வராது. நான் கடவுள் திரைப்படத்தின் திரைக்கதை தோய்வால் படத்தின் ஒரு கட்டத்தில் அது ஒரு வகையான ஸ்டேட்மென்ட் மோடுக்கு போய்விட்டது. எனவே இறுதியில் நடக்கும் சம்பவங்கள் பாலா சொல்வதாக அமைய போனது. அவைகள் சந்தர்ப்பங்களின் மித்தம் அந்த கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகளாக அமையாமல் போனதால் இட் பிகம்ஸ் எ ஸ்டேட்மென்ட். திரைக்கதை தான் காரணம். மக்கள் இந்தியன் படம் பார்த்துவிட்டு கமல் குற்றம் செய்பவர்களை கொலை செய்ய சொல்கிறார் என்று முழங்கமாட்டார்கள். ஏனென்றால் அந்த திரைக்கதையை வடிவமைத்தது ஒரு கதாபாத்திரம் கமல் அல்ல.

VISA said...

இந்த படத்த பொறுத்த வரைக்கும் கதை திரைக்கதை காமன் மேன் இதை எல்லாத்தையும் முந்திகிட்டு நிறைய கமல் தெரியுறாரு. அதான் பிரச்சனை. திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் மக்களை அப்படி உணர வைத்துள்ளது.

Karthik said...

எனக்கு வெட்னஸ் டே படத்தின் க்ளைமேக்ஸ் அவ்வளவா ஏத்துக்க முடியலை. அதேதான் இந்தப் படத்துக்கும். மற்றபடி கமல் எடுத்தார்ங்கிறதுக்காக சிலர் எழுதிய விமர்சனங்கள் ....

தமிழ்நாட்டில் சிலரை திட்டுவது ஃபேஷன் ஆயிடுச்சு. :(

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப சரியாய் சொல்லியிருக்கீங்க நண்பா. இன்னமும் நம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கலைஞனையும், ஒரு கதாபாத்திரத்தையும் பிரித்து பார்க்கும் தன்மை வரவில்லை என்றுதான்தோன்றுகிறது.

Vijay said...

கமெண்டடித்த எல்லா நண்பருக்கும் நன்றி.

Ravi said...
This comment has been removed by the author.
RAMYA said...

கமல்ஹாசன் படம் பற்றி அருமையா சொல்லி இருக்கீங்க!

அவர் நல்ல மனிதர்.

நான் பெரியவன் என்ற தம்பட்டம் எல்லாம் அடிச்சுக்க மாட்டார்.

அமைதியா வந்து அமர்க்களமாக நடிச்சு அசத்திடுவார்.

திரைப்படத்தின் கருத்துக்களை பார்ப்பவரின் கண்ணோட்டத்தில் தான் விமரிசனம் இருக்கிறது. இந்த படத்திலும் நல்லா நடிச்சிருக்கார்.

கமலின் நடிப்பும் அபாரம், உங்களின் புரிதல் கமலைப்பற்றி அதுவும் அருமை விஜய்.

மேவி... said...

நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.....

(எம்ஜியார் ஒரு படத்தில் கத நாயகியை தனது உடல் முழுவதும் எண்ணெய் தடவ சொல்லுவர்...... அதற்க்குன்னு நிஜத்திலும் அதை தான் எம்ஜியார் விரும்புகிறார் என்று ஏன் யாரும் சொல்லவில்லை ன்னு தெரியல)

Anonymous said...

படத்த பாத்தோமா... ரசிச்சோமா..... சிரிச்சோமான்னு இல்லாம கொஞ்சபேரு ஓவராக் குழம்பி அடுத்தவங்களையும் நிம்மதியா இருக்க விடமாட்டாங்க. அதுக்கெல்லாம் வருத்தபடக்கூடாது.

kanagu said...

விருது வாஙக, வாங்க அண்ணா,

http://enadhu-ularalgal.blogspot.com/2009/10/blog-post_15.html

Ravi said...
This comment has been removed by the author.
Ravi said...

Guys,

Check this out if you were a common man

http://www.indianexpress.com/news/pm-security-stops-patient-leads-to-death-family/536689/

But there was a later apology and compensation.

compensation enough for the glaring error on part of the state?

These things happen in every part of our country.

We think as a common man once you take a Movie :) i really don't appreciate this :)

We always keep forgiving/forgetting for everything from 1991 blast.

Anyway my comment entirely irrelevant to this blog.But i strongly disagree this is not only common man problems in INDIA.

குந்தவை said...

கண்மணி பள்ளிக்கூடத்திர்க்கு போகிற மாதிரி ஒரு போட்டோ கேட்டீங்களே போட்டிருக்கேன் வந்து பாருங்க.

குந்தவை said...

Helloooooooooooo....