Pages

August 30, 2008

மூட நம்பிக்கையும் பட்டர்ஃப்ளை எஃபக்டும்

பி.கு. நான் பெரிய பகுத்தறிவாளருமல்ல, எல்லா நம்பிக்கிகளையும் நம்பும் முட்டாளுமல்ல. நமது முன்னோர்கள் மீது அதீத பக்தியும் மதிப்பும் வைத்திருப்பவன். அவர்கள் எது செய்திருந்தாலும், அதில் ஓர் அர்த்தம் இருக்ககூடும் என்று நம்புபவன்.

சக நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு உண்டு. இது தசாவதாரம் படத்தின் அடித்தளம். மேற்கத்தியச் சிந்தனையில், இதை கேயாஸ் தியரி என்று சொல்கிறார்கள். ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புக்கும், ஒரு புயல் வழித்தடம் மாறிப் போவதற்கோ, தாமதமாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்ககூடும் என்கிறார்கள்.
மேற்கத்திய விஞ்ஞானிகளான எட்வர்ட் லோரென்ஸ் என்பவர் தான் இந்த பட்டர்ஃப்ளை எஃபக்டின் காரணகர்த்தா. இந்த தத்துவத்திற்கு அவர் mathematical equation சொல்லிவிட்டதால் அது விஞ்ஞானம் ஆனது.

இந்த பட்டர்ஃப்
ளை எஃபடோடு நமது நாட்டில் பரவலாக இருந்து வரும், நம்பிக்கைகளிலும் அப்படியென்ன வித்தியாசம் இருந்து விட்டது.
எங்கள் வீட்டில் வெளியே கிளம்பும் போது, பூனை குறுக்கே சென்றால், சகுனம் சரியாக இல்லை, கொஞ்சம் உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போ என்று பாட்டி சொல்லக் கேட்டிருக்கேன். பாவம் பூனை, அதற்கென்னவோ அவசரமான வேலை போலிருக்கு, அது பாட்டுக்கு போறது. போயிட்டுப் போகட்டும். அதுக்காக நாம ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கேன். அதே மாதிரி தான் கிளம்பும் போது கால் தடுக்கும் போது. ஆனால் இந்த பட்டர்ஃப்ளை எஃபக்ட் பற்றித் தெரிந்தவுடன், பூனை குறுக்கே செல்வதற்கும் நான் வெளியே செல்வதற்கும் ஏதோ தொடர்பு இருக்கலாமோ? சாரி சாரி தொடர்பு இருக்கச் சாத்தியம் இருக்கலாமோ?

மீண்டும் பட்டர்ஃப்ளை எஃபக்டுக்கே போவொம். ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்பு ஒரு புயலின் வழித்தடத்தையோ அல்லது அதை தாமதப்படுத்தவோ சாத்தியக்கூறு இருக்கிறது என்று தான் சொல்கிறது. இவ்விரண்டிற்கும் சம்பந்தம் இருக்கிறதென்று சொல்லவில்லை. அப்படியிருக்க ஒரு பூனை நம் குறுக்கே செல்வதற்கும், ஒரு கெட்ட காரியம் நம் முன்னே நிகழ்வதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்ககூடாதா? அந்த கெட்ட காரியம் நம் முன்னே நடக்க வேண்டாம் என்ற காரணத்திற்க்காகத்தான், உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போகும் படி நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்களோ? ஏன் இதுவும் ஒரு பட்டர்ஃப்ளை எஃபக்டாக இருக்க முடியாது.
மேற்கத்தியச் சிந்தனையாளர் சொன்னால் அது விஞ்ஞானம், அதையே நம் முன்னோர்கள் சொல்லிருந்தால் அது மூட நம்பிக்கையா?
இந்திய கணித மேதைகள் தான் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தனர் என்று மார் தட்டிக் கொள்ளும் நாம், ஏன் அன்றே இந்த பட்டர்ஃப்ளை எஃபக்டையும் கண்டு பிடித்திருக்க முடியாது? என்ன அதற்கொரு mathematical equation கொடுத்திருந்தால், நமது பகுத்தறிவு பகலர்கள் அதையும் பாராட்டியிருப்பார்கள்.

ஜோசியம் கூட அது மாதிரி தானே. இப்படியெல்லாம் நிகழும் என்று ஜோசிய சாஸ்திரம் சொல்வதில்லை. இப்படியெல்லாம் நிகழச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றது என்று தானே சொல்கிறது. இந்த ஜோசிய சாஸ்திரம் தானே, எந்த செயற்கைக் கோளும் இல்லாமல், இந்த வருடம் எவ்வளவு மழை பொழியும், என்றைக்கு சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம், அம்மாவாசை, பௌர்ணமியென்றெல்லாம் தகவல் கொடுக்கிறது?

ஆக நம் முன்னோர்கள் ஏதோ காரணத்திற்காகவே சில நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை என்னும் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது.

டிஸ்கி: அப்பாடா, வெட்டிவம்பில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனது ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தாச்சுப் பா. நிம்மதியா தூங்கலாம்.


11 comments:

Ramya Ramani said...

\\பட்டர்ஃப்ளை எஃபக்ட் பற்றித் தெரிந்தவுடன், பூனை குறுக்கே செல்வதற்கும் நான் வெளியே செல்வதற்கும் ஏதோ தொடர்பு இருக்கலாமோ? சாரி சாரி தொடர்பு இருக்கச் சாத்தியம் இருக்கலாமோ?
\\

:))

\\மேற்கத்தியச் சிந்தனையாளர் சொன்னால் அது விஞ்ஞானம், அதையே நம் முன்னோர்கள் சொல்லிருந்தால் அது மூட நம்பிக்கையா?
\\
அதானே!!

\\ஆக நம் முன்னோர்கள் ஏதோ காரணத்திற்காகவே சில நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை என்னும் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது\\

Exactly

Vijay said...

Again Ramya, the firstuuuu

MSK / Saravana said...

இதுலலேலாம் நமக்கு நம்பிக்கையெல்லாம் இல்லங்கீங்கோ..

MSK / Saravana said...
This comment has been removed by the author.
MSK / Saravana said...

//ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்பு ஒரு புயலின் வழித்தடத்தையோ அல்லது அதை தாமதப்படுத்தவோ சாத்தியக்கூறு இருக்கிறது என்று தான் சொல்கிறது.//

பூனை குறுக்கே போகும் போது கெட்டது நடக்க சாத்தியம் இருக்கும் போது,

அதேமாதிரி ஒரு பூனை குறுக்கே போகும் போது, ஒரு நல்லது நடக்கவும் சாத்தியம் இருக்குமல்லவா??

நல்லதை நம்பி வெளியே செல்ல வேண்டியதுதானே..

MSK / Saravana said...
This comment has been removed by the author.
மங்களூர் சிவா said...

\\மேற்கத்தியச் சிந்தனையாளர் சொன்னால் அது விஞ்ஞானம், அதையே நம் முன்னோர்கள் சொல்லிருந்தால் அது மூட நம்பிக்கையா?
\\
அதானே!!

Divyapriya said...

என்னனவோ சொல்றீங்க...பிரச்சனை என்னன்னா, காரணமே சொல்லாமே, இத செய், அவ்ளோ தான்னு நம்ம பெரியவங்க சொல்லிட்டு போனது தான்...

Divyapriya said...

நானும் prisoner of birth படிச்சிட்டேன்..chance less book, thanks for the recommandation...நேத்து மூணு மணி வரைக்கும் உக்காந்து படிச்சு முடிச்சிட்டு தான் தூன்கினேன் :-)

முகுந்தன் said...

//அவர்கள் எது செய்திருந்தாலும், அதில் ஓர் அர்த்தம் இருக்ககூடும்
என்று நம்புபவன்.
//

அட எனக்கும் கூட அந்த நம்பிக்கை உண்டு.

//அந்த கெட்ட காரியம் நம் முன்னே நடக்க வேண்டாம் என்ற காரணத்திற்க்காகத்தான், உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போகும் படி நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்களோ? //

ரொம்ப சரி


//என்ன அதற்கொரு mathematical equation கொடுத்திருந்தால், நமது பகுத்தறிவு பகலர்கள் அதையும் பாராட்டியிருப்பார்கள்.
//


இது ரொம்ப முக்கியம். அவர்கள் சும்மா இத பண்ணாதே என்று சொல்லிவிட்டதால் எல்லோரும் குதர்க்கம் பேசிக்கொண்டு சில விஷயத்தை ஏளனம் செய்து கொண்டு திரிகிறோம் :-)

Ramya Ramani said...

உங்களுக்கு ஒரு குட்டி வேலை இருக்கு விஜய்.வந்து என் ப்ளாக் பக்கம் எட்டி பாருங்க..