Pages

July 31, 2010

கணவன் மனைவி கணினி

சக்தியில்லையேல் சிவமில்லை; சிவமில்லையேல் சக்தியில்லை.
ஆபரேடிங்க் சிஸ்டம் இல்லையேல், அப்ளிகேஷன் இல்லை.
அப்ளிகேஷன் இல்லையேல், ஆபரேடிங்க் சிஸ்டத்துக்குப் பயனில்லை.
ஆபரேடிங்க் சிஸ்டம் சிவம். அப்ளிகேஷன் சக்தி.

அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் புல்லரித்துப் போவது நிச்சயம்
பக்கத்தில் அரிப்பு மாத்திரை வைத்துக் கொள்வது உசிதம்.

அப்பா, எதுகையும் மோனையும் போட்டுத் தாக்கும் புல்லரிக்குதே !!

புல்லரிக்கும் அனுபவம் ஏற்படுவதற்கு, கணினியும் அது சார்ந்த சில கலைச் சொற்கள் பற்றி ஒரு சிறு பாடம் நடத்தி விடுகிறேன்.

எந்த கணினியிலும் ஹார்ட்வேர் சாஃப்ட்வேர் என்று இரண்டு வேர்கள் இருக்கும் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட தெரிந்து விட்டது. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இந்த சாஃப்ட்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

கணினியை வாஞ்சையோடு அழுத்தினால், விண்டோஸ் (Windows) என்று ஒன்று ஓடுகிறதே, அதன் பெயர் ஆபரேடிங்க் சிஸ்டம்(Operating System OS) (இயக்கு தளம்). இந்த சாஃப்ட்வேர் தான், கணினியின் அஸ்திவாரம். இது ஆட்டம் கண்டுவிட்டால், கணினியே ஆட்டம் கண்டு விடும்.

ஆனால் இந்த ஆபரேடிங்க் சிஸ்டம் மட்டுமே இருந்தால், அந்தக் கணினி காலணா காசுக்குப் பிரயோசனப் படாது. அதன் மீது செலுத்தப்படும் வோர்ட், எக்ஸல், பவர் பாயிண்டு, பிரௌசர், மீடியா பிளேயர் இவையெல்லாம் தான் கணினிக்கு கண் காது மூக்கு நாக்கு போன்றவை. இவைகளுக்கு அப்ளிகேஷன் (செயலி) என்று பெயர். இந்தச் செயலிகள் இல்லாத இயக்கு தளம், உயிரற்ற பிரேதம் மாதிரி. ஆனால், இயக்கு தளம் இல்லாத செயலிகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவை உடலற்ற பேய்கள் மாதிரி.

ஆக ஒரு கணினி சீராகச் செயல் பட வேண்டுமென்றால், பிரேதம் போன்ற இயக்குதளமும், பேய்கள் போன்ற செயலிகளும் அவசியம் வேண்டும். இது வரை ஓரளவு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த ஆபரேடிங்க் சிஸ்டம் (இயக்கு தளம்) இருக்கிறதே, அது ஒரு வீட்டுல கணவன் மாதிரி. இந்த அப்ளிகேஷன் (செயலிகள்) எல்லாம் இருக்கே, அதெல்லாம் மனைவி மாதிரி. கணினி ஒரு குடும்பம் மாதிரி.

ஒரு செயலி இயங்குவதற்கு விண்டோஸ், லினக்ஸ் (Linux) போன்ற இயக்கு தளம் தேவை. இந்தச் செயலிகளெல்லாம் ஓடுவதற்கு, முக்கியமானது மெமொரி (RAM). அதைக் கொடுப்பது இந்த இயக்கு தளங்கள் தான். மனைவிகள் சந்தோஷமாக இயங்குவதற்கு முக்கிய தேவை, பணம். “கதவைச்சாத்தடி. கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி” என்று சிறு வயதிலிருந்தே பெண்கள் புத்தியில் புகுத்தப் பட்டிருக்கிறது. இந்த கணவன் என்ற இயக்கு தளம் தான், செயலி என்ற மனைவியின் மெமொரி தேவையை பூர்த்தி செய்யும். எப்போ கேட்டாலும் கொடுக்கணும்.

சில இயக்கு தளங்கள் ரொம்ப கெட்டிகாரத்தனமாக இருக்கும். இந்தச் செயலிகள் அப்பப்போ வந்து நொய் நொய்யென்று இன்னும் கொஞ்சம் மெமொரி தா, என்று கேட்டுக் கொண்டே இருக்கும். அதனால் முதல் முறை கேட்கும் போதே, “சும்மா
வந்து வந்து தொந்தரவு பண்ணாதே. இந்தாப் பிடி. தொலை” என்று சொல்லி கேட்டதை விட நிறையவே கொடுத்து விடும். சில கணவன்மார்களும் இப்படித்தான். சும்மா சும்மா அவர்களிடம் பணம் கேட்டால் பிடிக்காது. முதல் முறை கேட்கும் போதே, கேட்பதை விட அதிகமாகக் கொடுத்து தன்னை தொந்தரவு செய்யாத படி பார்த்துக் கொள்வார்கள்.

சில சமயம் கணினி அப்படியே ஸ்தம்பித்துப் போனதொரு நிலைமையைப் பார்த்திருப்பீர்கள். அது வேறொன்றுமில்லை. கணவன் என்ற இயக்குதளம் இயங்குவதை சற்று நேரம் நிறுத்தியிருக்கும். இயக்கு தளம் நின்று போதற்கு எல்லோரும் அதைத்தான் குற்றம் சொல்வார்கள். ஆனால், இயங்காமல் நின்றதற்கு பெறும் காரணம், மனைவி என்ற இந்தச் செய்லிகள் தான் என்று நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

கணவன் என்ற இயக்கு தளம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகிறது. இந்த விதிமுறைகள் மனைவிகளான செயலிகளுக்கும் தெரிந்து தான் இருக்கின்றது. “இப்படிச் செய்யாதே” என்று கணவன், சாரி இயக்குதளம் உத்தரவு போட்டால், “நீ என்ன எனக்குச் சொல்வது. நான் இப்படித்தான் செய்வேன்” என்று மனைவியென்ற செயலிகள் அகம்பாவத்துடன் நடந்துகொள்ளும் போது பாவம் கணவன், ஐ மீன் இயக்குதளம் என்ன தான் செய்ய முடியும்? தன் வேலையையும் செய்யாமல் செயலியின் தேவையையும் பூர்த்தி செய்யாமல் சும்மா இருந்துவிடுகின்றன. அதனால் குடும்பம் என்ற கணினியும் ஸ்தம்பித்து விடுகிறது.

பல நேரங்களில் இந்தச் செயலிகளின் தேவை பணம் போன்ற மெமொரி. பாவம் இயக்கு தளத்தினால் எவ்வளவு தான் தர முடியும். ”உன்னுடையது பேராசை”, என்று மனைவி என்ற செயலியிடம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் மேலும் மேலும் கேட்டால், இல்லாத மெமொரியை (பணத்தை) எங்கிருந்து கொண்டு வர முடியும். செயலி இயக்குதளத்தின் விதிகளை மீற, இயக்குதளம் ஸ்தம்பிக்கிறது.

இது யார் குற்றம்? இது தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று சொல்வது. செயலியின் பேராசை தான் காரணமென்றாலும், தான் ஸ்தம்பித்ததற்கு செயலிதான் காரணம் என்று காட்டிக் கொடுக்கமாட்டான். பெருந்தன்மையுடையவன், தன் மீது தான் பழி, இயக்குதளம் தான் ஏதோ தவறு செய்துவிடடது என்று வெளியுலகிடம் பிரகடனப் படுத்திக் கொள்வான்.

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும், நிலமை மோசமாயிருப்பது மனைவி என்ற செயலியால் தான் என்று. பல நேரங்களில் மனைவிமார்கள் ரெஸ்பான்ஸ் எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த கணவன் என்ற இயக்குதளமும் விடாக்கொண்டன் தான். மனைவி என்ற செயலி மூட் அவுட் ஆகியிருந்தாலும், ஒன்றுமே நடக்காதது மாதிரி ஆளேயில்லாத கடையில் டீ ஆற்றுவது மாதிரி தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

இருந்தாலும் இந்த லினக்ஸ் போன்ற இயக்குதளங்கள் கொஞ்சம் சாமர்த்தியமான கணவர்கள். செயலி என்ன தில்லு முல்லு செய்தாலும், அவர்கள் போக்குக்கே போய் அவர்களை சந்தோஷப் படுத்துவார்கள். வெளியுலகிற்கு அந்தக் குடும்பம், ஐ மீன், அந்தக் கணினி சீராக இயங்குவது போல் இருக்கும். ஆனால் அம்மாதிரியான குடும்பங்களைக் காண்பதரிது.

மனைவிக்கு தீடீரென்று ஒரு ஆசை வரும். ஆகாசத்தையே ஏட்டிப் பிடிக்கணும் என்பாள். கணவனுக்கு வேறு வழியே இல்லை. அவளது ஆசையை பூர்த்தி செய்தேயாக வேண்டும். பாவம் தன் ஆசையை கணவன் எப்படி நிறைவேற்றுவான் என்பது பற்றியெல்லாம் மனைவிக்கு அக்கறையில்லை. தன் ஆசை நிறைவேறணும். அவ்வளவு தான்.

இந்த இயக்கு தளமும் ஒரு கணவனைப் போல் தான் இப்போது செயல் படும். செயலி என்ற மனைவி திடீரென்று தான் இயங்க வேண்டும் என்று ஆசை வைப்பாள். “மனைவியின் ஆசையை எப்படி நிறைவேற்றினேன் என்று கணவன் சொல்ல மாட்டானோ (மனைவிக்கும் அது பற்றி அக்கரையில்லை என்பது வேறு விஷயம்)” அது மாதிரி தான் இயக்குதளமும் relocatable address என்ற விதியின் மூலம் செயலி இயங்க வழி வகுப்பான்.

சில சமயம், குடும்பத்தில் பணம் நிறைய இருக்காது. மனைவிக்கோ கணவன் சம்பாதிப்பதை விட அதிகம் தேவை. எந்தக் கணவனுக்குத்தான் மனைவியிடம் போய், “என்னிடம் பணம் இல்லை. சிக்கனமாக இரு” என்று சொல்ல தைரியம்?

பணம் இல்லாவிட்டாலும் இருப்பது போல் ஒரு பாவலா காட்டுவார்கள். அது மாதிரி தான் இந்த இயக்கு தளங்களும். என்ன தான் வைப்பு நிதி என்ற மெமொரி இருந்தாலும் விர்ச்சுவல் மெமொரி (virtual memory) என்ற இல்லாத மெமொரியை இருப்பது போல் காட்டி, செயலிகள் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

”அப்ப கணினியை வைரஸ் அடிக்கறதெல்லாம்?”

இந்த வைரஸ் சமாசாரமெல்லாம் கில்மா பார்டி மாதிரி. தொட்டா சுடும்னு தெரிந்தும் அதைத் தொட்டுத் தவிக்கறதில்லையா? அது மாதிரி, கில்மா பார்டியிடம் போனால் ஆபத்து என்று தெரிந்தும் விண்டோஸ் போன்ற இயக்குதளங்கள், வைரஸ்களை அணைத்துக் கொள்கின்றன. தானும் கெட்டு குடும்பத்தையும் கெடுத்துவிடுகின்றன இந்த கில்மா பார்டி. ஆனாலும் லினக்ஸ் போன்ற ஸ்டெடி இயக்குதளங்கள் இந்த கில்மா பார்டிகளிடம் மாட்டிக் கொள்வதில்லை.

14 comments:

Divya said...

Hilarious post....with a wonderful flow of writing!!!

\\இந்த கணவன் என்ற இயக்குதளமும் விடாக்கொண்டன் தான். மனைவி என்ற செயலி மூட் அவுட் ஆகியிருந்தாலும், ஒன்றுமே நடக்காதது மாதிரி ஆளேயில்லாத கடையில் டீ ஆற்றுவது மாதிரி தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்.\\


LOL:))

Subbu said...

super!!!!

ஆபரேடிங்க் சிஸ்டம் இல்லையேல், அப்ளிகேஷன் இல்லை.
அப்ளிகேஷன் இல்லையேல், ஆபரேடிங்க் சிஸ்டத்துக்குப் பயனில்லை
எதுகை மோனைககு "பீரும் பிரியாணியும் " மாதிரி சொன்ன எங்களுக்கு நல்ல புரியும் :)

இந்த ஆபரேடிங்க் சிஸ்டம் (இயக்கு தளம்) இருக்கிறதே, அது ஒரு வீட்டுல கணவன் மாதிரி. இந்த அப்ளிகேஷன் (செயலிகள்) எல்லாம் இருக்கே, அதெல்லாம் மனைவி மாதிரி
இப்ப புரியுது ஏன் அவன் அவன் 2-3 பொண்டாட்டி வெச்சுகிட்டு இருக்கானு
அமாம் சித்தப்பா பெரியப்பா எல்லாம் யாரு ?

செயலி என்ற மனைவியின் மெமொரி தேவையை பூர்த்தி செய்யும். எப்போ கேட்டாலும் கொடுக்கணும்
" system fault அல்லது கிராஷ் ஆகுவதற்கு காரணம் என்ன ? :) "

Vidhya Chandrasekaran said...

செம:))))))

Nimal said...

Superb...

கணவன்/மனைவி - ஆபரேடிங்க் சிஸ்டம்/அப்ளிகேஷன்: எது உவமானம் எது உவமேயம் ;-)

Ramachandranwrites said...

இந்தச் செயலிகள் இல்லாத இயக்கு தளம், உயிரற்ற பிரேதம் மாதிரி. ஆனால், இயக்கு தளம் இல்லாத செயலிகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவை உடலற்ற பேய்கள் மாதிரி.
ஆக ஒரு கணினி சீராகச் செயல் பட வேண்டுமென்றால், பிரேதம் போன்ற இயக்குதளமும், பேய்கள் போன்ற செயலிகளும் அவசியம் வேண்டும். இது வரை ஓரளவு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

மிக நல்ல கோர்வை. ஆனால் காயத்ரிக்கு தமிழ் தெரியுமா ? இந்த லீவ்ல வரும்போது நேரில் வந்து சொல்லனுமா ?

முகுந்தன் said...

//“இப்படிச் செய்யாதே” என்று கணவன், சாரி இயக்குதளம் உத்தரவு போட்டால், “நீ என்ன எனக்குச் சொல்வது. நான் இப்படித்தான் செய்வேன்” என்று மனைவியென்ற செயலிகள் அகம்பாவத்துடன் நடந்துகொள்ளும் போது பாவம் கணவன், ஐ மீன் இயக்குதளம் என்ன தான் செய்ய முடியும்? தன் வேலையையும் செய்யாமல் செயலியின் தேவையையும் பூர்த்தி செய்யாமல் சும்மா இருந்துவிடுகின்றன. அதனால் குடும்பம் என்ற கணினியும் ஸ்தம்பித்து விடுகிறது//

wonderful!!

Unknown said...

Hey Vijay

wanted to explain it to Gayathri ..in details ..and wanted to know about "UT-KARUTHU" ..sooper
/Jay

Ravi said...

Vijay,

Yennada Olarae Ambi

I am totally against your blog.

Because the Application is entirely depends on the decision who is installing the apps.OS is not only responsible for the core dump / Memory Overflow.

As Vadivel says " Yellathukum Muthalla Plan Pannanum " as we never do in SDLC :)

To me really a confused POST :)

Vijay said...

\\Because the Application is entirely depends on the decision who is installing the apps.OS is not only responsible for the core dump / Memory Overflow. \\
Consider this code:
funcA()
{
int *p = malloc(10);
free(p);
funcb(p)
}

funcb(int *ptr)
{
int a=p[10]; --> This is where the OS does a Core Dump.
}

The OS is responsible for running this piece of code as an app. Now tell me who is responsible for creating the core dump?

Ravi said...

Again the function will not call by itself.

who is invoking the code dude ???

-Ravi

Vijay said...

நன்றி திவ்யா. அடிக்கடி கடைப்பக்கம் வாங்க :)
சுப்பு, சும்மா ஒரு கற்பனை தோன்றிற்று. அவ்வளவே. இதையெல்லாம் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது

நன்றி வித்யா

கருத்துக்கு நன்றி நிமல்.

ஸ்ரீராம் அண்ணா, நான் எழுதுவதைப் படிப்பதற்காகவே காயத்ரி மெனக்கெட்டு தமிழ் படிக்கிறாள்.

நன்றி முகுந்தன்.

ஜெய், ஒரு உள்குத்தும் இல்லை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அப்படி... உங்க எதுகை மோனை சூப்பரா தான் இருக்கு... ஹா ஹா ஹா

எஸ்.கே said...

மிக மிக நன்றாக உள்ளது தொழிற்நுட்ப விஷயங்களை எவ்வளவு சகஜமாக சாதாரணமாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!

Karthik said...

Boss epdi? Neenga Project Manager ah?