ஔவையார் இருந்திருந்தால் இப்படித் தான் கொடியது எது என்ற கேள்விக்குப் பதிலளித்திருப்பார். இப்படித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற வெவஸ்தையே இல்லாமல் மாநில அரசும் மத்திய அரசும் நடந்து கொள்கின்றன. இவர்கள் நடத்துவது ஆட்சி அல்ல அராஜகம். 1984’ல் நடந்த போபால் விஷவாயுக் கசிவில் 15000 பேர் உயிரிழந்தார்கள். உலகிலேயே தொழிற்சாலை விபத்துக்களிலேயே பெரிய அளவில் மக்கள் உயிரை வாங்கியது இது தான் என்ற அவப்பெயரை வாங்கியிருக்கி்றது. 26 ஆண்டுகளுக்கு மு்ன்னர் நடந்த இவ்விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும், எவ்வளவு நச்டஷ் ஈடு வழங்கவேண்டும் என்று இப்போது தான் துப்பு துலக்குகிறார்கள். அன்றே யூனியன் கார்பைடு முதலாளியை பத்திரமாக அரசு மரியாதையுடன் விமானமேற்றிவிட்டு விட்டு, இப்போது அதை யார் செய்தது என்று சண்டை. ஒரு பெரிய நிறுவனத்தின் அதிபரை அரசு செலவில் வழியனுப்பு வைக்கிறார்கள், ஆனால் அது பிரதம மந்திரிக்குக் கூட தெரியாதாம். இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கிறது, அந்த நிறுவனத்தின் முதலாளி முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்கிறார், ஆனால் இது எதுவுமே அன்றைய பிரதம மந்திரி ராஜீவுக்குத் தெரியாதாம். சரி நடந்தது நடந்து விட்டது. தப்பிச் சென்ற வாரன் ஆண்டர்சன் இனி வரப்போவதில்லை. ஆனால் இன்னார் தான் குற்றவாளி, நஷ்ட ஈடாக இவ்வளவு தர வேண்டும் என்று ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு 26 ஆண்டுகளா?? Justice delayed in Justice Denied. அன்றே வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க விட்டுவிட்டு இப்போது அவருக்கு 94 வயசான பிறகு அவரை திரும்ப இந்திய நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்களாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறாராம், வெளியுறவுத்துறை அமைச்சர். நம் நாட்டின் கையாலாகாத்தனத்தை நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள், அமெரிக்கர்கள்.
சரி மத்திய அரசுதான் சரியில்லை என்றால், மாநில அரசு செய்யும் படாடோபங்களுக்கு ஒரு அளவே இல்லை. ஒரு மனிதனால் எப்படித்தான் இவ்வளவு புகழ்ச்சியை வாங்கிக் கொள்ள முடியும், தெரியவில்லை. தன்னை விட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேறு கதியில்லை என்று 90களில் எப்படி ஜெயலலிதா நடந்துகொண்டாரோ, அப்படியிருக்கிறது, கருணாநிதியின் இப்போதைய நடத்தை. சென்னையில் ஒரு தெரு, சுவர் விடாமல் அனைத்திலும் ஏதாவதொரு அரசியல்வாதியாவது சி்ரித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலையோரங்களில் விளம்பரப்பலகைகள் வைத்தால் வாகனவோட்டுவோரின் கவனத்தைக் குலைத்து விபத்துகள் பல ஏற்படுகின்றன என்பதால் பல விளம்பரப் பலகைகளை நீக்க நீதிமன்றம் ஆணையிட்டது. அரசியல் விளம்பரங்களுக்கு இந்தத் தீர்ப்பு செல்லாது போலும்.
பொழுது போகவில்லையென்றால் கருணாநிதிக்கு ஏதாவது விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். அவர் புகழ் பாட ஒரு புலவர் படையையே அரசு செலவில் வைத்திருப்பார் போலும். எல்லாத்திலும் ஜெகத்ரக்ஷகன் வாலி வைரமுத்து போன்ற அடிபொடிகள் ஆஜர்.
800 கோடி செலி்ல் புதிய சட்டசபை. ஏதேது, பழைய சட்டசபயில் வாஸ்த்து சரியில்லை என்று புதிய கட்டிடம் கட்டினார்களா? அல்லது 300 வருட பழைய கட்டிட இருக்கையில் கருணாநிதியின் பிருஷ்டபாகம் அமர மறுக்கின்றதா? இந்தச் செலவில் பல கிராமங்களில் சாலைகள் அமைத்துக் கொடுத்திருக்கலாம், எத்தனையோ அரசு பள்ளிகள் கட்டியி்ருக்கலாம், மருத்துவமனை கட்டியிருக்கலாம். ஆனால் இது பற்றியெல்லாம் கேள்வி கேட்க ஒரு நாதி கூட நாட்டில் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
ஆங்கிலேயருக்கு எதிராகத் தைரியமாகக் குரல் கொடுத்த ஹிந்து போன்ற பத்திரிகைகள் கூட கண்டுகொள்ள மறுக்கின்றன. “பெரிசு” கடைசி காலத்தில் ஏதோ சௌகர்யம் செய்து கொள்கிறார், போனால் போகட்டும் என்று விட்டுவிட்டார்களோ, தெரியவில்லை. அட அரசுக்கெதிராக ஆசிரியருக்கு வரும் கடிதங்கள் கூட பிரசுரிக்கப் படுவதில்லை.
இவ்வளவு கொட்டம் அடித்தது போதாது என்று இப்போது மீண்டும் பல கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடாம். தமிழை வாழ வைக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் சௌகர்யமாக வாழ் வேண்டும். தமிழ் தான் இந்திய மொழிகளுக்கனைத்தும் தாய். 5000 வருடம் பழமையானது. சும்மா பழங்காலப் பெருமை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் இவர்களைப் போல் யாருமே இருக்க முடியாது.
இந்த மாநாட்டில் பேசப் படும் விஷயங்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. கவிஞர் (??) கனிமொழியின் கவிதைத் தொகுப்பை ஒரு ஆர்வக்கோளாறர் ஆய்வு செய்திருக்கிறாராம். இலக்கியம் என்ற பெயரில் கருணாநிதி அண்ணா பெரியார் எழுதிய குப்பைகளையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறார்களாம். இன்று சானல் மாற்றிக் கொண்டிருக்கும் போது சன் நியூஸில் மாநாட்டு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பில் வாலி கருணாநிதியைப் பாராட்டி ஏதோ உளறிக் கொட்டிக்கொண்டிருக்கிருந்தார். போறபோக்கைப் பார்த்தால் இந்தியாவிலிருந்து கருணாநிதியின் குப்பைகளை நோபல் பரி்சுக்குகூட பரிந்துரை செய்வார்கள் போலிருக்கு.
இம்மாநாட்டிற்காக கோவையே விழாக்கோலமாய் இருக்கிறது என்று கொலைஞர் டிவியும் சன் டிவியிலும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையென்னவோ, கடந்த 3 மாதங்களில் காணாத மதுபான விற்பனை கடந்த மூன்று நாட்களில் நடந்திருக்கிறது.
இந்த மாநாட்டினால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை. டாஸ்மாக் விற்பனையால் அரசுக்கு சில கோடிகள் கிடைக்கலாம். செம்மொழி ஆராய்ச்சி என்ற பெயரில் சில கோடிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திலிருந்து வாங்க முடியும். அதுவும் சில கழகக் கண்மணிகளின் பாக்கெட்டுக்குத்தான் போகப் போகின்றன. கருணாநிதியை வாழ்த்தி ஆய்வறிக்கைகள் சமர்ர்ப்பிப்பவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கலாம்.
அப்படியே தமிழின் தொன்மையைக் கொண்டாட வேண்டுமென்றால சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொண்டாட வேண்டியது தானே. இந்தக் கட்டிடத்தை மறந்தே போன மக்களுக்கு இந்த மாநாடு வள்ளுவர் கோட்டத்துக்கு ஒரு விளம்பரமாகவாவது அமையும். அவிநாசி ரோட்டில் 100க்கும் மேற்பட்ட மரங்களை மாநாடு ஊர்வலம் நடத்துவதற்காக கொஞ்சம் கூட மூளையே இல்லாமல் வெட்டித் தள்ளியி்ருக்கிறார்கள்.
மாநாட்டில் பேசப்போகும் விஷயங்களைப் பாத்தால் தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும். ஔவையார் ஒரு பௌத்தத் துறவியா என்ற பெயரில் ஒருவர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் போகிறாராம். யாரப்பா அந்த அறிவுக்களஞ்சியம். தனது ஹிந்து தர்மக் காழ்ப்புணற்சியைக் காட்டிக் கொள்ள இப்படியெல்லாமா பேச வேண்டும்? விநாயகர் அகவல் எழுதிய ஔவையார் பாவம் நொந்து போயிருப்பார்.
தமிழ் இலக்கியத்திற்கே பெருமை சேர்ப்பது ஆழ்வார்களும் நாயன்மார்களும் எழுதிய பதிகங்களும் சைவத் திருமறைகள் தான். அவைகளுக்கெல்லாம் ஒரு நாளாவது ஒதுக்கி்யிருக்கிறார்களா? சித்தர்கள் எழுதியுள்ள பதிகங்களை ஆய்வு செய்தால் இன்றைய ஆங்கிலேய மருந்துக்களை தூக்கிப் போட்டு்விடும் தன்மையுடையவை. அவை பற்றி ஒரு நாயாவது பேசப் போகிறதா? இல்லை. கருணாநிதியும் திராவிட இயக்கமும் தமிழ் தமிழ் என்று அடித்துக் கொண்டதைப் பற்றித்தான் எல்லோரும் உளரப் போகிறார்கள்.
அப்படியே தமிழ் மீது தீராப் பற்றிருந்தால் கட்சி நிதியிலிருந்தோ அல்லது சொந்த நிதியிலிருந்து பணம் எடுத்து செலவழிக்க வேண்டியது தானே? நாம் கொடுக்கும் வரிப்பணத்தை இப்படி விரயம் செய்வது எப்படி நியாயமாகும்? கேள்விகேட்பாரில்லை. மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டிய சிலரை திருச்சியில் கைது செய்திருக்கிறார்கள். எவ்வளவு அராஜகம். ஜனநாயகத்தில் இதற்குக் கூடவா உரிமையில்லை.
மாநாட்டிற்காக சென்னையில் ஓடும் பல குளிர்சாதனை பேர்ருந்துக்களை கோவைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். சில நாட்களாக ஒரு ஏசி பேரூந்தைக் கூடக் காணமுடியவில்லை.
ஆனால் இந்த மாநாட்டிற்காக நான் பல நாட்களாகக் காத்துக் கிடந்ததென்னவோ உண்மை. “இந்த மாநாட்டோடு நான் அரசுப் பணியிலிருந்து விடைபெறப் போகிறேன். கட்சிக்கும் தமிழுக்கும் என் மீதி ஆயுளை அற்பணிக்கப் போகிறேன்” என்று சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை விடுத்தார். நி்ஜமாக செய்து காட்டப் போகிறாரா, அல்லது இதுவும் “சும்மா லுலுயாயிக்குத்தான் சொன்னேன்” என்று மழுப்பப் போகிறாரா, அடித்த சில நாட்களில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களைப் பார்க்க ஆவலாயுள்ளது.
ஒன்று மட்டும் உண்மையாகிறது. “பேய்கள் ஆட்சி செய்தால், சாத்திரங்கள் பிணம் தின்னும்” என்று பாரதி (பாரதி தானே??) சொன்னது மெய்யாகிக் கொண்டிருக்கிறது. மகான்களின் வாக்கு பொய்க்காது என்று சும்மாவா சொன்னார்கள்?
12 comments:
மிக அருமை
விஜய், உங்கள் கோபம் நியாயமானதே.. டாஸ்மாக் விற்பனை மேம்பாட்டு மாநாடு தான் ...வரபோகின்ர தேர்தல் கருத்தில் கொண்டு தான் இந்த ஏற்பாடு ..
“இந்த மாநாட்டோடு நான் அரசுப் பணியிலிருந்து விடைபெறப் போகிறேன். கட்சிக்கும் தமிழுக்கும் என் மீதி ஆயுளை அற்பணிக்கப் போகிறேன்” என்று சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை விடுத்தார். நி்ஜமாக செய்து காட்டப் போகிறாரா, அல்லது இதுவும் “சும்மா லுலுயாயிக்குத்தான் சொன்னேன்” என்று மழுப்பப் போகிறாரா, அடித்த சில நாட்களில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களைப் பார்க்க ஆவலாயுள்ளது."
ஹய் ஆசை தோசை அப்பளம் வடை - நல்லா இருக்குப்பா ஒங்க எண்ணம். என்ன விட்ட வேறு யாரு இருக்கா இந்த நாட்டை காப்பாத.
"ஔவையார் ஒரு பௌத்தத் துறவியா என்ற பெயரில் ஒருவர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் போகிறாராம். யாரப்பா அந்த அறிவுக்களஞ்சியம். தனது ஹிந்து தர்மக் காழ்ப்புணற்சியைக் காட்டிக் கொள்ள இப்படியெல்லாமா பேச வேண்டும்? விநாயகர் அகவல் எழுதிய ஔவையார் பாவம் நொந்து போயிருப்பார்."
அவர் ஒரு கிருஸ்துவர் அல்லது முஸ்லிம்னு சொல்லலாம், ஆனா முடியாம போச்சு. அதுதான் அவரை புத்த மடத்துல சேக்க சொல்லிட்டோம்
ஆனால் அவ்வை என்ற பெயரில் பலர் இருந்து இருக்க இடம் உள்ளது
அவிநாசி ரோட்டில் 100க்கும் மேற்பட்ட மரங்களை மாநாடு ஊர்வலம் நடத்துவதற்காக கொஞ்சம் கூட மூளையே இல்லாமல் வெட்டித் தள்ளியி்ருக்கிறார்கள்.
பா.ம.க சகவாசம் ?
யப்பா... பதிவு பயங்கர காட்டமாக இருக்குது. வாசிக்கும் போதே எனக்கு பி.பி. ஏறிவிட்டது. ஒட்டு மொத்த கோவத்தையும் வந்து கொட்டியிருக்கீங்க...
நல்லவிஷயங்கள் எல்லாம் மெதுவா தான் நடக்கும்.
ஓய்வு பெறபோகிறேன்னு எப்போ சொன்னேன்னு கேக்கறராம். EKSI.
he (karuna) should have died after reading this blog.. bloody begger.. He is one of major culprit in Indian History
he (karuna) should have died after reading this blog.. bloody begger.. He is one of major culprit in Indian History
He (Karuna) should have died after reading this blog.. Bloody begger.. He is one of hte major culprit we have in Indian Hisotry
நன்றி உலவு. அடிக்கடி வாருங்கள் :)
சுப்பு, வரப்போகின்ற தேர்தலில்லாவது மக்கள் நல்லதொரு முடிவெடுத்தால் நல்லது. ஆனால் தமிழக மக்களின் விதி, பேயை விட்டால் பூதத்தைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.
ஸ்ரீராம் அண்ணா, கொலைஞர் நான் பதவி விலகப் போவதில்லைன்னு எப்போ சொன்னேன்னு நேற்று கேட்டிருக்கார். பெரிசுக்கு செலக்டிவ் அம்னீஷியா போலிருக்கு
குந்தவை, நல்லது நடப்பதற்கு 26 வருடங்களா? டூ மச்.
ராமுடு, வயதானால் விவேகம் வரும் என்று சொல்வார்கள். பெரிசுக்கு அது எப்போ வருமோ? வருகைக்கு நன்றி.
கார்த்திக், பாவம் ஸ்டாலின். கைக்கெட்டினது வாய்க்கெட்டவில்லை.
தல
"பேய்கள் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் பிணம் தின்னும்" இதையே நம்ம எம். எஸ். பாஸ்கர் ஸ்டைல்ல சொன்ன " கேனபய ஊருல கிறுக்கு பய தலைவர் "நு. சொல்லலாம்...நாயன்மார்களை சித்தர்களை பற்றி மட்டுமல்ல ஆறு திருமுறைகள் ஆயிரகனக்கானா பாடல்களை பாடி தம்ழுக்கு தெய்வ தமிழ் என்று பெயர் வர காரணாமாக இருந்த வள்ளலாரேயே மறந்த இந்த மாநாட்டை எண்ணி நம் சந்தொசப்டவேனும்.. ஏனென்றால் இந்த கெடுகெட்ட ஆய்வரங்கத்தில் இவர்களை பற்றி பேசாதிருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச்சிறந்த சிறப்பு..
Post a Comment