சில வருடங்களுக்கு முன், “விஜய், அஜீத், விக்ரம்” இவர்களில் யாருடைய எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு “எனக்கென்னவோ குனிந்து கொண்டே ஒருவர் இவர்கள் எல்லோரையும் முந்தி விடுவார்” என்று மதன் ஆனந்தவிகடனில் பதிலளித்தார். அப்போது பேரழகன் ரிலி்ஸாகியிருந்தது. படத்துக்குப் படம் கெட்-அப் மாற்றம், பாடி லாங்குவேஜ் மாற்றம் என்று வித்தியாசம் காட்டிய சூர்யாவுக்கு யார் கண் பட்டதோ, சன் பிக்சர்ஸ் என்ற சனி திசை பிடித்ததா தெரியவில்லை, சிங்கம் படம் சூர்யாவின் கேரியி்ரில் ஒரு கரும்புள்ளி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
ஏனோ எல்லாத் தமிழ் ஹீரோக்களுக்கும் காக்கிச்சட்டை தரித்து ஒரு படமேனும் பண்ணிவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களது சினிமா வாழ்க்கை முழுமையடையாது. ஏற்கனவே காக்க காக்க செய்திருந்தாலும், தமிழ் நாட்டின் அதுவும் தென் தமிழ்நாட்டின் மக்களுக்குச் சென்றடையவில்லை என்று யோசித்தார்களா தெரியவில்லை, ஒரு சூ்ப்பர் டூப்பர் மசாலா கொடுத்திருக்கிறார்.
நல்ல தரமான படம் எடுக்கவே மாட்டோம் என்று சன் பிக்சர்ஸ் முடிவெடுத்திருக்கி்றார்களா தெரியவில்லை. குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று சூப்பர் ஃப்ளாப் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜயின் ரசிகர்கள் / நண்பர்கள், தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துக் கொண்டி்ருக்கும் சூர்யாவின் மார்க்கெட்டும் சரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களோ என்னவோ. யாமறியோம். சூர்யா, இத்தோடு ஹரி போன்ற இயக்குனர்களின் சகவாசத்தை முடித்துக் கொள்வது அவர் எதிர்காலத்துக்கு நல்லது.
படம் முழுவதையும் சூர்யாதான் தாங்குகிறார். எத்தனை நாட்களுக்குத் தான் ஃபார்முலாப் படங்களையே எடுப்பார்களோ? அனுஷ்கா இப்படியே இன்னும் இரண்டு படம் செய்தால் நமீதா லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். அம்மணி, கவர்ச்சியா நடிக்கலாம் தப்பில்லை. ஆனால் அது ஆபாசாமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
விவேக் - I think your days are over buddy. வேறெதுவும் சொல்லத் தெரியவில்லை. எதற்காக இந்த வடிவேல் வேலை உமக்கு? இரட்டை அர்த்த வசனங்களாக உமிழும் உமக்கு பத்மஸ்ரீ பட்டம் வேறு.
என்ன தான் ஹைதர் அலி காலத்துக் கதையாக இருந்தாலும் ஓரிரண்டு திருப்பங்களாவது வைத்திருக்கலாம். போலீஸ் என்றாலே அடிதடியில் தான் இறங்கி ரவுடிகளை அழிக்கவேண்டும் என்றில்லையே. கொஞ்சம் ஸ்ட்ராடஜிஸ்டிக்கா யோசித்து எடுத்திருக்கலாம்.
நல்ல வேளை ஹரி இந்தப் படத்தை விஜய்காந்த் விஷால் போன்றவர்களை வைத்து எடுக்கவில்லை. அப்படியிருந்தால் அரை மணிநேரம் கூட உட்கார்ந்திருக்க மு்டியாது.
மொத்தத்தில் சிங்கம் - உருமல் ஜாஸ்தி!
பி.கு: வேட்டைக்காரன், சுறா, சிங்கம் - இவைகள் தான் சன்பிக்சர்ஸின் சமீபத்திய படங்கள். கலாநிதி மாறன் அடுத்து டிஸ்கவரி சானலை வாங்காமல் இருக்க வேண்டும்.
8 comments:
நல்ல விமர்சனம் நண்பரே..
இரட்டை அர்த்த வசனங்களாக உமிழும் உமக்கு பத்மஸ்ரீ பட்டம் வேறு.
//
இதில் சின்ன கலைவாணர் என்று பட்டபெயர் வேறு..
supperrrrr
படம் நல்லா தான் இருந்துது அண்ணா... சூர்யா இப்படி நடிப்பதில் தவறேதும் இல்லை...
ஐந்து படங்களுக்கு ஒரு படம் இப்படி நடித்தால் ஒரு பிரச்சனையும் இல்லை... கமல்ஹாசனே ‘சகலகலாவல்லவன்’ போன்ற அக்மார்க் மசாலா படங்களில் நடித்துள்ளார்...
அவங்க ஏதோ ஐடியாவோட(நடிக்க வருவாங்களோ என்னமோ) தான் இப்படி படம் எடுக்கிறார்கள். மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை பேரையும் விரட்டிவிட்டால்... வேலை மிச்சம் தானே.
அஸின் இல்லாத ஊருக்கு அனுஷ்கா எல்லாம் சர்க்கரை. எகொ விஜய் இது?
சூர்யா இன்னும் பேரரசு படத்துல நடிக்கலையே ஏன்?
சன் பிக்சர்ஸ் பெண் சிங்கம் மாதிரி படம் ஏன் produce பண்றது இல்லே ?
நன்றி Mr. வெறும்பய
நன்றி அருண். எப்படி இருக்கீங்க?
\\ kanagu said...
படம் நல்லா தான் இருந்துது அண்ணா... சூர்யா இப்படி நடிப்பதில் தவறேதும் இல்லை... \\
இதெல்லாம் ரொம்ப பழைய ஃபார்முலா. ஒரு நல்ல கலைஞன் இப்படி ஃபார்முலா படங்கள் பண்ணுவது எனக்குப் பிடிக்கலை. இந்த மாதிரி படங்கள் பண்ணுவதற்கு விஜய் விஷால் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
\\ குந்தவை said...\\
நன்றி குந்தவை
\\ Karthik said...
அஸின் இல்லாத ஊருக்கு அனுஷ்கா எல்லாம் சர்க்கரை. எகொ விஜய் இது?\\
அஸின் சூர்யா கெமின்ஸ்ட்ரி நல்லாத்தான் இருக்கும். ஆனால் இந்த மாதிரி ஸ்கோப் இல்லாத ரோலுக்கெல்லாம் அஸினைப் போடாதது நல்லது தான் :) ஜோ சூர்யாவை இனி அஸினோடு நடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க’ன்னு ஒரு கொஸுறு செய்தி படித்தேன் :)
ஸ்மைலி போட்டதற்கு நன்றி, தாரணிப்ரியா :)
\\ Subbu said...
சூர்யா இன்னும் பேரரசு படத்துல நடிக்கலையே ஏன்?
சன் பிக்சர்ஸ் பெண் சிங்கம் மாதிரி படம் ஏன் produce பண்றது இல்லே ?\\
நல்ல வேளை பேரரசு கண்களில் இன்னும் சூர்யா விழவில்லை. அது வரை தமிழ் சினிமா உலகம் பிழைத்தது.
இந்த மாதிரி டப்பா படத்தையெல்லாம் தயாரித்து காசைக் கறியாக்காதேன்னு, கொலைஞரே கலாநிதி கிட்ட சொல்லியிருக்கலாம்.
Post a Comment