Pages

May 24, 2009

பிரபாகரன் - என் பார்வையில்

கடந்த சில தினங்களாக பதிவுகளில் படித்ததில் சில என் மனதை நிறையவே மனதை நெருடச் செய்தன. இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு ஒரு கொலைக் குற்றவாளியான விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரனுக்கு இவ்வளவு அனுதாபிகளா? ஒரு இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமென்றும், பயங்கரவாதி இயக்கமென்பதும், பார்ப்பவர்களின் கண்களில் தானிருக்கிறது. ஆங்கிலேயர்களின் கண்களில் பகத் சின் ஒரு பயங்கரவாதி. நாமோ அவரை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியாக் கொண்டாடுகிறோம். காஷ்மிரில் பயங்கரவாதம் புரிபவர்கள் பாகிஸ்தானுக்கு விடுதலைப் போராளிகளாகத் தெரிகிறார்கள், நமக்கோ அவர்கள் பயங்கரவாதிகள். அதே போல் தான் பிரபாகரனும்.

இலங்கைத் தமிழரின் நலனுக்காக போராடும் ஒரு இயக்கத்தை வழி நடத்தி, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும், சம உரிமை பெற்று அந்த நாட்டின் மற்ற குடிமக்களின் உரிமைகளோடு வாழ வேண்டும் என்றெண்ணி ஒரு இயக்கத்தை வழி நடத்தியவர். அற வழியில் சென்றால் நியாயம் கிடைக்காது என்று போராளியாக உருவெடுத்தவர். இது வரை அவர் செய்ததில் எதிலுமே குற்றம் காண முடியாது. ஆனால், தன் இன மக்களுக்கு தான் மட்டுமே ஒரே தலைவனாக இருக்க வேண்டும். போராடிப் பெற்ற சுதந்திரத்தின் காப்பாளனாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்றெண்ணியது தான் அவர் செய்த முதல் குற்றம். ஆனால் அந்த முதல் குற்றத்தினால் விளைந்த செயல்கள் அவரை ஒரு பயங்கரவாதியாகத்தான் சித்தரிக்கிறது.

இலங்கை அரசோடு போராடிப் பெற்ற சுதந்திரத்தை தாமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு போலித்தனமான உணர்வு. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய காந்திக்கும் சுபாஷ் சந்திரபோசுக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், பெறும் சுதந்திரத்தில் யாருக்கு அதிக உரிமை உண்டு இருவரும் எண்ணியதில்லை. தன்னால் மட்டுமே சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணியதில்லை. இருவரும் எடுத்துக் கொண்ட பாதை வெவ்வேறாக இருந்தாலும், எண்ணம் ஒன்றாக இருந்தது. ஒருவரையொருவர் ஒழித்துக் கட்ட முயலவில்லை.

ஆனால் பிரபாகரன் விஷயத்தில் நடந்ததென்ன? “நான் தொடங்கிய போராட்டம் என்னால் மட்டுமே முடிய வேண்டும். போராடி பெறும் சுதந்திரத்தை நான் முன்னின்று மக்களுக்கு வழங்க வேண்டும். அப்படி யாராவது என்னை எதிர்க்க முயன்றால், அவர்கள் வாழ அறுகதையற்றவர்கள். இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலன் நான் ஒருவன் மட்டுமாகத் தான் இருக்க வேண்டும்” இது தான் அவர் சிந்தனை. இதனாலேயே பத்மநாபா, அமிர்தலிங்கம் போன்றவர்களை கருணையேயில்லாமல் கொலை செய்தார். விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க முக்கிய காரணமாக இருந்தது, ராஜீவ் காந்தியைக் கொன்றது தான். அவரைக் கொல்வதற்கு முன்னால் கூட விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசாங்கத்துக்கு கொஞ்சம் கருணை இருந்தது. ராஜீவ் கொலை, உள்ளது போனதடா நொள்ளகண்ணா கதையாகிவிட்டது.

இப்படி பிற தேசத்துத் தலைவர்களை கொலைபுரிந்ததனால், பாதகம் யருக்கு. அப்பாவி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை தான். வேறு வழியில்லாமல், பிரபாகரன் பின் இவர்கள் நின்றதால், அவர்களும் இலங்கை அரசால் மேற்கொள்ளப் பட்ட வன்முறையில் பலியானார்கள். அப்பாவி மக்களை கேடையங்களாக வைத்து, விடுதலைப் புலிகள் குளிர் காய்ந்தார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரே ஆள் இவர் தானென்றாலாவது, இவரைக் கொண்டாடுவதில் அர்த்தமுண்டு. தன்னைத் தவிர வேறு யாரும் தமது மக்களின் நலன் மீது அக்கரை இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு சர்வாதிகாரியை எப்படிப் பாராட்டுவது? இவரது சர்வாதிகாரத்தனப் போக்கால், இலங்கைத் தமிழர்களின் வரப்பிரசாதமாக இருந்திருக்க வேண்டியவர், அவர்களுக்கு ஒரு சாபமாகவே தான் இருந்தார் என்று தான் சொல்வேன்.

அமைதி நிலவரம் திரும்ப நார்வே அரசு எடுத்துக் கொண்ட முயற்சியும், இவரது தனித் தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தால்(அதற்கும் தானே தலைவனாக இருக்க வேண்டும் என்ற பேராசை வேறு) இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவே விளைந்தது.

இலங்கையில் தமிழர்களின் மக்கள் தொகை 5 கோடி இருக்குமா? இவ்வளவு பேரை வைத்துக் கொண்டு எந்தவிதமான அரசாங்கத்தை அமைத்து விட முடியும்?ஒரு சர்வாதிகாரத்தனமான மனிதனால் மக்களுக்கு இன்னல் மட்டுமே கொடுக்க முடியும் என்பது சரித்திரம் நமக்குப் புகட்டும் பாடம். அப்படியே பிரபகரன் தலைமையில் அரசு அமைந்தால், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் எந்த வித உதவியும் புரிந்திருக்கப் போவதில்லை. அவர்களுக்கு உதவ பாகிஸ்தானும் சீனாவும் தான் வருவர்கள். பொருளதவியிலிருந்து ராணுவத்தளவாடங்கள் வரை எல்லாம் கொடுப்பார்கள். இந்தியாவிற்குப் பெறும் பாதுகாப்புப் பிரச்னை ஏற்படும். தனித் தமிழ் ஈழம் என்று முழங்குபவர்கள் இதை யோசித்துப் பார்த்தார்களா? இந்தியா எக்கேடுகெட்டாவது போகட்டும் என்பது தான் அவர்களது நிலைப்பாடா?

ஆக மொத்தத்தில் பிரபாகரன் தலைமையில் ஏற்பட்டிருக்கும் ஈழத்தால் ஒன்றும் பெரிதாக ஒன்றும் சாதகமாக முடிந்திருக்காது. இலங்கை அரசுக்கு பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதை விட வேறு வழியில்லை.

ஆனால், இனியாவது ராஜபக்க்ஷே அரசு, தமிழர்களுக்கு அவர்களுக்கு மறுக்கப் பட்ட உரிமைகளைக் கொடுக்க வேண்டும். சிங்களவர்களுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும் தரப்பட வேண்டும்.அதற்கு இந்தியா முழுவதுமாக டிப்ளோமேடிக் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். முடிந்தால் ஐ.நா. தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து மேற்பார்வையிட வலியுறுத்த வேண்டும்.

ஒரு இனத்தை அடிமையாக்குவதனால் கிளர்ச்சி தான் ஏற்படும் என்று மீண்டும் காலம் பாடம் புகட்டியிருக்கிறது.

டிஸ்கி 1: பிரபாகரன் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசு வெளியிடும் செய்தி நம்பும் படியாகவும் இருக்கிறது, அனால் வீடியோவில் அவரது கண்கள் முழித்துப் பார்ப்பதைப் பார்த்தால் மார்ஃபிங்க் செய்திருக்கிறார்களோ என்று சந்தேகமும் வருகிறது. ஆனால் நக்கீரன் வெளியிட்டிருக்கும் பிரபாகரனே அவர் இறந்தமாதிரிக் காட்டும் காட்சிகளைப் பார்த்துப் புன்னகைக்கும் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு.

டிஸ்கி 2: தமிழ் மக்களிடமிருந்து உரிமைகளைப் பறிக்கப்பட்டது இலங்கை அரசு செய்தது கொடுமையிலும் கொடுமை. இந்தியா போன்ற நாடுகள் இலங்கை மேல் டிப்ளோமேடிக் அழுத்தம் கொடுத்திருக்கணும். இந்தியாவிலேயே தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டவர்கள் இந்தத் தமிழர்கள், இவர்களது இனத்திற்கு ஏன் பரிந்து போக வேண்டும் என்று இந்திய அரசு நினைத்ததோ தெரியவில்லை.

டிஸ்கி 3: ஆனால் புலிகளுக்கெதிராகப் போர் நடத்துகிறோம் பேர்வழி என்று இலங்கை அரசு அப்பாவிப் பொது மக்களை கொன்று குவித்ததை மன்னிக்க முடியாது. இதற்காக இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து தண்டனை கொடுத்தால் கூடத்தகும்.

27 comments:

M Arunachalam said...

Vijay,

Excellant post & kudos for your GUTS.

Just now the news is coming that even the remnants of LTTE have officially admitted that Prabakaran is dead - almost a week after he was killed by SL Army.

Now, touts like Nakkeeran have to look for "other' pay-masters. I sympathise with them - after their first pay-master Veerappan was killed by Jayalalitha's police, they had to depend on LTTE money for their survival & sensationalism. Now that LTTE, as an organisation has been decimated and its leader also killed, Nakkeeran has to apply to Osama Bin Laden to become his agent or mouth-piece.

As far as Tn politicians are concerned, whether it is Nedumaran or Kuruma Kelavan or Vaigo or RowdyDas, all these people are LTTE touts who have been on LTTE's payroll to carry forward its propaganda in TN. Same is the case with many of Tamil film industry scoundrels like Seeman, Ameer, Barathi Raja, Porukki Thamizhan Sathya Raj, Cheran, etc etc. The people in the above list - all of them - can be easily branded as anti-Indians & put behind bars under POTA - if only the act is valid today & the powers that be had the courage of convictions to do so.

Bagat Singh or Netaji they never killed their own country-men. They only targetted the British. Even Hitler never killed his race. He wanted to decimate only the Jews.

But, LTTE and Prabakaran, are unique. They have killed MORE Tamils than even the Sri Lankan army. They have recruited even women, children - both boys & girls - forcibly & without either their own or their family's consent. They coereced people into donate them from abroad by black-mailing their relatives in SL. They indulged in drug and other illicit trade to obtain arms & ammunition.

Prabakaran can be described as a Maniacal animal or a Barbarian. He is NOT AT ALL a human. He killed all the other Tamil militant groups in a cunning way by inviting them for talks & mercilessly shooting them up.

Therefore, the fate has also correctly fixed his end. As per LTTE bloggers, he was called by his own people who were negotiating with Western countries to come for a ceasefire with SL Army & then army must have shot him dead at close range.

This goes to show that whereas all his recruits had to die either as suicde bombers or in war or by consuming cyanide, COWARD PRABAKARAN SURRENDERED TO SL ARMY to run away from fighting but met his end in the same cruel way he ended many other Tamils' lives.

Now that Prabakran & LTTE is removed from the scene, I am sure SL Tamils will slowly but surely start tasting freedom from LTTE & soon equality & dignity from SL Govt.

Once again I congratulate you on your courageous writing, when most of the Tamil bloggers are idiotically euloging the LTTE. Keep up your good work.

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

அப்போது அமைதி படை என ஒன்றை அனுப்பி நமது படைகள் நடத்திய வெறியாட்டங்களை மறந்துவிட சொல்கின்றிர்களா விஜய
அண்ணா???

sakthi said...

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் ஆனால் அங்கு நடந்த,
நடந்துகொண்டிருக்கின்ற கொடூரங்களுக்கு
வன்முறையாலாவ்து தீர்வு கிடைக்குமா
என உயிர் தியாகம் செய்யும் வீரர்கள்???
ஏனென்றால் ஈழ்த்தின் உண்மை கதை என்ன வென்று யாருக்கும் தெரியாது
அது 35 வருடங்களாய் பலரின் உயிர்களை காவு கொண்டும் முடியாத சோகம்
அஹிம்சைவழியில் போராடி மறைந்த தீலிபன்
கண்விழிகளை தோண்டி எடுத்து கொல்லப்பட்ட குட்டிமணி
ஜெகனாதன்
என அன்று தொடங்கி இன்று வரை நீளும் பட்டியல்

sakthi said...

இலங்கை அரசுக்கு பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதை விட வேறு வழியில்லை.

அவரோடு சேர்த்து ஈழத்தமிழினத்தையும்
அழித்தொழிக்கட்டும்

Divyapriya said...

//நக்கீரன் வெளியிட்டிருக்கும் பிரபாகரனே அவர் இறந்தமாதிரிக் காட்டும் காட்சிகளைப் பார்த்துப் புன்னகைக்கும் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு.
//

adha paatha udane therinjidichu...oru magazine la ippadai kooda aniyaayam pannuvaangalaa?

kanagu said...

anna.. enna than sonnalum prabakaran tamil makkalukku oru nambikkaiya irunthar.. avar senjathu thappu than.. correct nu solla varala... aana avar ilangai government ah vida mosamaanavar illa...

itharku appuramavathu ilangai la tamilargalukku sama urimai kidaikkum nu namburen

enoda article time irundha padinga na:

http://kanaguonline.wordpress.com/2009/05/20/is-it-the-end-or-the-dawn-of-new-tomorrow/

நட்புடன் ஜமால் said...

இப்படி ஒரு கண்ணோட்டம் உள்ளதா!


சரியோ தவறோ
இதை வெளியிட்ட உங்கள் துணிவு பாராட்டுக்குறியதே



நாம் நமது எண்ணங்களையும், உணர்வுகளையும் மட்டுமே வெளிப்படுத்துகிறோம் (எல்லோரும் அப்படித்தானே ...), ஆனாலும் அங்கே உள்ளவர்களின் நிலை?
அவர்களிடத்தில் அவர் எப்படி உணரப்படுகிறார், இவற்றை ஆராய்வது நமக்கு இயலாத விடயமாக இருக்கிறது.

எது எப்படியோ

அங்குள்ள மக்களுக்கு நல்லதொரு விடிவு காலம் வந்தால் சரிதான் ...

மேவி... said...

தமிழ் ல ஒரு பழமொழி உண்டு .....அரசனை நம்பி புருஷனை விட்ட கதை"...ன்னு
அந்த மாதிரி தான் இருக்கு இலங்கை தமிழர்களின் நிலைமையும்....

எனக்கும் புலிகள் மீது ஒரு வித கோவம் உண்டு....
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஒரு ஆண்டி ; ஒரு cold war யின் போக்கை மாற்றி விட்டார்கள் என்று தான் நானும் எண்ணுகிறேன்.

எனக்கு ஒரு சிங்கள நண்பன் இருக்கிறான் ; அவன் என்ன சொன்னான் என்றால் இலங்கை பொருளாதார நிலைமைக்கு ஏதோ எல்லா தமிழ் மக்கள் தான் காரணம் என்று நினைக்கும் அளவுக்கு அங்கே புலிகளின் செயல்பாடுகள் இருக்கிறதாம்.

இன்னொரு இலங்கை தமிழ் நண்பன் என்ன சொன்னான் என்றால் யாரோ செய்த செயலுக்கு நாங்கள் பழிவாங்க படுகிறோம்.

இவர்கள் குற்றை கேட்ட பிறகு எனக்கு என்ன சொல்லவது என்று தெரியவில்லை. ..


இலங்கை தமிழர்கள் நல்ல படிய இருந்த போதும்.....

பிரபாகரன் முதலில் வேறொரு குழு வில் இருந்தாராம். பிறகு அங்கே சண்டை போட்டு கொண்டு வெளிய வந்து தனியாக ஆரமித்தது தான் புலிகள் இயக்கம்.

(பிறகு நாம ப்லோக் பக்கம் வாங்க பாஸ்.)

மேவி... said...

நாம் நாட்டில் அரசுக்கு சந்தன கடத்தல் வீரப்பன் மீது என்ன மாதிரியான பார்வை இருந்ததோ அதே மாதிரியான பார்வை தான் இருக்கிறது இலங்கை அரசுக்கு பிரபாகரன் மீதும் இருக்கிறது

S.A. நவாஸுதீன் said...

விஜய், பிரபாகரனைப் பற்றி நீங்க சொல்றதுல பல விஷயங்கள் உங்களின் யூகங்களாக எனக்கு படுகிறது. இருப்பினும் மனதில் பட்டதை (பிறர் மனம் புண்படாதவாறு) சொல்லவும் தைரியம் வேண்டும்.

Vijay said...

\\Blogger M Arunachalam said...
Vijay,
Excellant post & kudos for your GUTS.\\

Thanks for your encouragement Sir.

Vijay said...

\\ sakthi said...
அப்போது அமைதி படை என ஒன்றை அனுப்பி நமது படைகள் நடத்திய வெறியாட்டங்களை மறந்துவிட சொல்கின்றிர்களா விஜய அண்ணா???\\

ஷக்தி, நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது தான். ஆனால் அமைதிப் படையை அனுப்பியதே, ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என்று இலங்கை உறுதிமொழி அளித்ததனால் தான். அதைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அமைதிப் படை அனுப்பட்டது இலங்கைத் தமிழர்களை ஒழிக்கத்தான் என்பது போலுள்ளது. அமைதிப் படையின் நோக்க்த்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த சுட்டியைப் படிக்கவும்.
http://en.wikipedia.org/wiki/Indian_Peace_Keeping_Force

முடிந்தால் இதையும் படிக்கவும்:
http://en.wikipedia.org/wiki/Indo-Sri_Lankan_Accord

ஆனால் இந்தியாவின் முதுகில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சேர்ந்து குத்தியது தான் இதில் கொடுமை.

Vijay said...

\\Blogger kanagu said...
anna.. enna than sonnalum prabakaran tamil makkalukku oru nambikkaiya irunthar.. \\
முதலில் அப்படித்தான் இருந்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். ஆனால் தான் மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்றெண்ணியபோது தான் நம்பிக்கை அவநம்பிக்கையானது என்பது என் எண்ணம்.

\\avar senjathu thappu than.. correct nu solla varala... aana avar ilangai government ah vida mosamaanavar illa... \\
Of Course. I agree. ராவணனின் வம்சாவளியில் வந்த அரக்கர்கள் தானே இவர்கள் :-)

Vijay said...

\\ Divyapriya said...
adha paatha udane therinjidichu...oru magazine la ippadai kooda aniyaayam pannuvaangalaa?\\

தங்களது சர்குலேஷனை அதிகரிப்பதற்காக என்னவேணாலும் செய்வார்கள் :-)

Vijay said...

\\Blogger sakthi said...
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் ஆனால் அங்கு நடந்த,
நடந்துகொண்டிருக்கின்ற கொடூரங்களுக்கு வன்முறையாலாவ்து தீர்வு கிடைக்குமா
என உயிர் தியாகம் செய்யும் வீரர்கள்???
ஏனென்றால் ஈழ்த்தின் உண்மை கதை என்ன வென்று யாருக்கும் தெரியாது
அது 35 வருடங்களாய் பலரின் உயிர்களை காவு கொண்டும் முடியாத சோகம்
அஹிம்சைவழியில் போராடி மறைந்த தீலிபன் கண்விழிகளை தோண்டி எடுத்து கொல்லப்பட்ட குட்டிமணி
ஜெகனாதன் என அன்று தொடங்கி இன்று வரை நீளும் பட்டியல்\\

தமிழர்கள் மீது சிங்கள் இன வெறியர்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையையும் சொந்த மண்ணிலேயே அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டதை ஒரு காலும் மன்னிக்க முடியாது. ஆனால் ஒர் இனம் சிறுபான்மையாக இருக்கும் போது, பெரும்பான்மை இனம் அவர்கள் மீது இப்படி செய்வது உலகம் பூராவும் நிகழ்ந்து வரும் ஓர் கசப்பான உண்மை.
அறவழியில் மட்டுமே போராடினால் தான் நியாயம் கிடைக்கும் என்பதல்ல என் வாதம். கிளர்ச்சிகளாலும் நியாயம் கிடைத்திருக்கும். ஏன் தனி நாடே கிடைத்திருக்கும். ஆனால் அப்படிப் பட்ட ஒரு நாட்டிற்கு தானே தலைவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து மற்ற தமிழ்த்தலைவர்களையும் எதிர்த்து, எந்தவித சமாதான உடன்படிக்கைக்கும் ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக மாறியது தான் பெரும் தவறு என்பது தான் என் கருத்து.

Vijay said...

\\நட்புடன் ஜமால் said...
நாம் நமது எண்ணங்களையும், உணர்வுகளையும் மட்டுமே வெளிப்படுத்துகிறோம் (எல்லோரும் அப்படித்தானே ...), ஆனாலும் அங்கே உள்ளவர்களின் நிலை?\\

அதை நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்குகிறது. இனிமேலாவது அங்குள்ள மக்கள் அமைதியாக வாழ இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Vijay said...

\\ MayVee said...
நாம் நாட்டில் அரசுக்கு சந்தன கடத்தல் வீரப்பன் மீது என்ன மாதிரியான பார்வை இருந்ததோ அதே மாதிரியான பார்வை தான் இருக்கிறது இலங்கை அரசுக்கு பிரபாகரன் மீதும் இருக்கிறது\\
சந்தன கடத்தல் வீரப்பனை அரசியல்வாதிகளே வளர்த்துவிட்டு, கடைசியில் அவனை வில்லனாக்கி விட்ட்டார்கள்.

உங்க பிளோக் பக்கம் தினமும் எட்டிப் பார்க்கிறேன். மறுமொழியெல்லாம் எழுதினேனே, பார்க்கலியா???

நான் said...

வணக்கம் விஜய்
முதலில் நீங்கள் இலங்கை தமிழர் போராட்டம் வரலாறை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் அப்புறம் உங்கள் பதிவை படித்து பாருங்கள் நீங்கள் எழுதியதில் எது சரி எது தவறு என்பது உங்களுக்கு தெரிஉம்
அதற்காக சில முகவரிகள்
Intervention in srilanka
The IPKF expeerience retold
Auth:MAJ GEN Harakirat singh (Land Mark Rs. 455)
பிரபாகரன் = கிழக்கு பதிப்பகம் (புத்தகம்)
http://aalamaram.blogspot.com/
ஆலமரம் பதிவில் பழைய பதிவுகளையும் படிக்கவும்
வாழ்த்துகள்
நன்றி

Vijay said...

\\ நான் said...
வணக்கம் விஜய்
முதலில் நீங்கள் இலங்கை தமிழர் போராட்டம் வரலாறை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் அப்புறம் உங்கள் பதிவை படித்து பாருங்கள் நீங்கள் எழுதியதில் எது சரி எது தவறு என்பது உங்களுக்கு தெரிஉம்
அதற்காக சில முகவரிகள்
Intervention in srilanka
The IPKF expeerience retold
Auth:MAJ GEN Harakirat singh (Land Mark Rs. 455)
பிரபாகரன் = கிழக்கு பதிப்பகம் (புத்தகம்)
http://aalamaram.blogspot.com/
ஆலமரம் பதிவில் பழைய பதிவுகளையும் படிக்கவும்
வாழ்த்துகள் நன்றி\\

நான் (அப்படித்தான் உங்களைக் கூப்பிடணும் :-) ),

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை பற்றி புத்தகங்கள் படிக்காவிட்டாலும், இணையத்தில் வரும் நிறைய இடுகைகளையும் புகைப் படங்களையும் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். சிங்கள இன வெறியர்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை ரொம்பவே கொடுமையானது. இதற்காகவே இலங்கை மீது போர் தொடுக்கலாம். ராவணன் ஆண்ட நாட்டு மக்கள் வேறெப்படி இருக்க முடியும்?

பிரபாகரன், சிங்களர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது தவறு என்று கூட நான் சொல்லவில்லை. அறவழியில் போராட்டமெல்லாம் நடத்தி சிங்களர்களை அடக்கியிருக்க முடியாது. ஆனால் தன்னைத் தவிர வேறு யாரும் தமிழர்களின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என்று அவர் எடுத்த முடிவைத் தான் விமர்சனம் செய்கிறேன்.

இந்திய அமைதிகாக்கும் படையில் பங்கு பெற்ற பலரின் நேர்காணலையும் இணையத்தில் படித்திருக்கிறேன். ராஜீவ் காந்தி தமிழர்களை அழிப்பதற்காகத்தான் அமைதிப் படையை அனுப்பினார் என்று சொல்பவர்கள், ஆபரேஷன் பூமாலைக்கு என்ன சொல்வார்கள்.
அது பற்றி, இங்கே தெரிந்து கொள்ளலாம்.
http://en.wikipedia.org/wiki/Operation_Poomalai

நீங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றி. முடிந்தால், அந்தப் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கிறேன்.

அன்புடன்,
விஜய்

Anonymous said...

யார் காரணம்? எதற்காக? எப்படி? என்று கேள்வி கேட்டு என்ன பயன். ஆனால் பிஞ்சி குழந்தைகள், பெண்கள், வாலிபவைதினர் என்று பாகுபாடில்லாமல் சிதறிய உடலோடு பார்க்கும் போது மனம் பதறுகிறது.
அவர்களுக்கு எது நல்லதோ அதை கடவுள் நடத்திகொடுக்க அவரிடம் பிராத்தனை செய்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை

முகுந்தன் said...

Vijay,

Excellent post. I agree 100% on your views.

vinu said...

mannikanum ungal blog in nedunallaiya vasagan naan varugayum vasippum mattumea enn vazakkam indru gandhi and subash kuritha ungal karuthukkal ennai pinnootamida cheaithana

gandhi mattu suyanallamillathavar endru epadi koorugireergal naam annaivarum paditha varlatru puthagam eanbathu 50 aandu kangiras aatchiyin karanamaga marikkappatta unnmaigal idyea oru 5 aandu kaalam vajpaie aatchikku vantha piraguthaan Gotchea[gandhiyai suttukkondravarin vakkumoolam vellivanthathu eanpathu ninaivillirukkum] athuvarai arachin puthakkappatta unmaigal paza. innum sollapponal gandhi thanathu sunalathukkagavea subash'y athuvum agila indhiya congress thalaivaraga theartheadukkappata oruvarai 1943 m aandu katchiyillirunthu thanthiramaga velliyeattrinar eanbathi ariveergala. andru subash evlovu manakasappudan inthiyavai vitttu vealiyearinar eanpathu evarum ariyatha ondru.

Vijay said...

\\ vinu said...
mannikanum ungal blog in nedunallaiya vasagan naan varugayum vasippum mattumea enn vazakkam indru gandhi and subash kuritha ungal karuthukkal ennai pinnootamida cheaithana

gandhi mattu suyanallamillathavar endru epadi koorugireergal naam annaivarum paditha varlatru puthagam eanbathu 50 aandu kangiras aatchiyin karanamaga marikkappatta unnmaigal idyea oru 5 aandu kaalam vajpaie aatchikku vantha piraguthaan Gotchea[gandhiyai suttukkondravarin vakkumoolam vellivanthathu eanpathu ninaivillirukkum] athuvarai arachin puthakkappatta unmaigal paza. innum sollapponal gandhi thanathu sunalathukkagavea subash'y athuvum agila indhiya congress thalaivaraga theartheadukkappata oruvarai 1943 m aandu katchiyillirunthu thanthiramaga velliyeattrinar eanbathi ariveergala. andru subash evlovu manakasappudan inthiyavai vitttu vealiyearinar eanpathu evarum ariyatha ondru.

\\

அன்புள்ள வினு,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி. நான் காந்தியின் பெரிய விசிறி கிடையாது. அவர் தனது சுயநலத்துக்காக நிறைய அரசியல் விளையாட்டுகள் விளையாடினார் என்று படித்திருக்கிறேன். நீங்கள் சொன்ன மாதிரி நாம் படிக்கும் சரித்திரம், திரித்திரம். அதாவது திரித்து எழுதப்பட்டது.

நான் சொல்ல வந்ததென்னவென்றால், காந்தி சுபாஷ் இருவருக்கும் மனஸ்தாபம் இருந்திருக்கிறது. ஆனால், அது ஒருவரையொருவர் கொல்லும் அளவிற்குப் போகவில்லை என்று தான் சொல்ல வந்தேன்.
மேலும் திரு. ஜெயமோஹனின் இந்தக் கட்டுரையைப் படிக்கவும். அவர் காந்திக்காக வாதிடுகிறார்.

மீண்டும் மீண்டும் வருக. கருத்து பரிமாற்றம் செய்க :-)

http://jeyamohan.in/?p=2773

vinu said...

neengal koduthiruntha thodarbyum athiluruntha thiru "j" avargalin katturaiyum padithean. avarin karuthupadi bagathsing gandhi avargalin paarvaiyil oru kuttravaali karanam avar kolai cheaithu irrunthaar sari irukkattum. athea samayam gandhi irvin oppanthathin pothu archiyal kaithigal mariyathaiyaga nadathappada veandum endra korikaiyil sagum varai jailil unnaviratham irruntha [mannikavum avarin peyar maranthu vittean] subashin kollgaigalai pin thodarnthvaraiyum gandhi enna karanathikka niragarithaar ennbathu ?
itho sameebathil thamilaga mukkiya thalivar oruvar unnaviratham irruntha pothu indru paditha makkalin villupunarchi karranamaga ellithil villangikollapatathu thearthal nadagam endru.aanaal atheeaa gandhi avargalin kaalathin podhtu ivallvu villipunarvum mediakkalin valarchiyum irrunthatha ennbathum innumoru?
ivaigalai ellam parkum poluthu avarin unnavirathm kooda makkalaiyum congress uruppinargalayum miraata avar edutha oru aayuthamagavea enn paarvaiyil padugirathu.
neatru pirinthu pona enn munnal kathali addikadi naan "nee athai tharavidil naan sapidamattean" enndru sollumpotheallam suttikaatuval "enna blackmail pannuriya" nu naam unmayaga oruvarai neasikkum poluthu avargalai namm blackmail pannugira avachiyamea eartpaduvathllai.avvaru oruvar nadanthukollgirar endral paditha villipunarvu kondavargallukkea athu polithanam endrum eammatru vithai enbathum puriyum. ithu irrandumea illatha 1940 galai charntha namathu padiparivillatha thathaakkaliyum paatikalliyum eammatra gandhi eduthu eammatru vitthaiyea agimsai ennum padugulli. ennbathu ennathu karuthu.

Anonymous said...

பிரபாகரனைப் பற்றி நீங்க சொல்றதுல பல விஷயங்கள் உங்களின் யூகங்கள் மட்டுமே... அவர் வாழும் பூமியில் 2006 இறுதி வரை வாழ்ந்த எனக்கு தெரிந்த அளவு உங்கள் யாருக்கும் தெரியாது.

தான் தான் அரசாள வேண்டும் என்றால், தன் 24 வயது மகனையும் 23 வயது மகளையும் ஆயுதம் ஏந்த விட்டா இருப்பார். இருவரும் என்னுடன் பாடசாலையில் படித்த மாணவர்களே. அவர்களைப் போல் அற்புதமான செல்வங்களைப் பார்க்க முடியாது. அமைதியான சுபாவமும், எப்போதும் புன்னகைக்கும் கண்களும், மற்ற மாணவர்கள் மீது காட்டும் மரியாதையும் அக்கறையும் நீங்கள் சொல்லும் பிரபாகரனுக்கு பிறந்த பிள்ளைகளிடம் இருக்குமா?

எதையும் பார்க்காமல் கதைக்கக் கூடாது. நீங்கள் சொல்லும் தமிழ் துரோகிகளைக் கொன்றது நியாயமே. தன் இனப் பெண்களையே படுக்கைக்கு இழுத்துச் சென்ற ரெலோ புளொட் போன்றவர்களை கொல்வது நியாயமில்லையா?

தன் சகோதரிகளை கற்பழிக்க வந்தவனின் ஆண் குறியை வெட்டியவர் பிரபாகரன்., நீங்களும் ஞானியைப் போல் உங்கள் மனைவி மற்றும் சகோதரிகளை ஏன் தாயையும் கற்பழிக்க வரும் காடயனுக்கு கொன்டம் (CONDOM) போட்டு விடுமளவுக்கு தாராள மனது உடையவர்களாக இருப்பதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது,

இதோ ஒரு உதாரணம். நான் பார்த்த பிரபாகரன். ஒரு நாள் பாடசாலை முடிந்து சைக்கிளில் வீடு சென்று கொண்டிருந்த போது வீதி ஓரத்தில் ஒரு நிறை மாத கர்ப்பிணி உட்கார்ந்திருந்தார். அருகில், சைக்கிளில் அவரின் கணவன். அந்த கர்ப்பிணியால் சைக்கிளில் உட்கார முடியவில்லை. நிலத்தில் உட்கார்ந்து புரண்டு கொண்டிருந்தார். நானும் எனது நண்பியும் சைக்கிளால் இறங்கி, எங்களிடம் இருந்த தண்ணீரையும் பிஸ்கட்டையும் உண்ணக் கொடுத்தோம்.

அப்போது ஒரு வாகனம் எம்மைக் கடந்து வேகமாகச் சென்றது. மறு நிமிடம் ரிவர்ஸ் போட்டு வந்த வாகனத்தில் இருந்து இறங்கியவர் பிரபாகரனே. இவர்களைக் கொண்டு போய் கொஸ்பிட்டலில் விட்டுவிட்டு வாங்கோ என்று தந்து மெய்ப் பாதுகாவலரிடம் கூறினார். அவர்களோ இல்லை அண்ணை நீங்கள் ஏறுங்கோ நாங்கள் வேற வாகனத்தைக் கூப்பிட்டு இவர்களை அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். பிரபாகரன் அவர்களின் முகம் இறுகியது. இந்த நிலைமையில் இருக்கும் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வலியை விட எனக்கு என் பாதுகாப்பைப் பற்றிக் கவலை இல்லை என்று அவர்களை தன் வாகனத்தில் ஏறச் சொன்னார்.

அந்த தம்பதியினரோ, ஐயோ வேண்டாம் ஐயா, உங்கள் உயிருக்கு ஊறு விளையக்கூடாது. உங்கள் பாதுகாப்பு முக்கியம். எங்களால் சமாளிக்க முடியும். நீங்கள் போங்கள் என்று கூறினர்.

தலைவரோ, நீங்கள் ஏறாவிடின் நான் இந்த இடததை விட்டு அசையப் போவதில்லை. ஏனெனில், உங்கள் வயிற்றில் உள்ள சிசுவையும் காப்பாற்றும் கடமை எனக்குண்டு என்று அவர்களை ஏற்றி அனுப்பினார்.

அதற்கிடையில் மிகவும் வேகமாக வந்தது 5 மோட்டார் சைக்கிள்கள், 10 பாதுகாவலர்களுடன்.

எங்களைப் போகச் சொன்னார்கள். நானும் நண்பியும் நீங்கள் பத்திரமாகப் போகும் வரை நாங்கள் அசைய மாட்டோம் என்றோம்.

மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர், ஏற்கனவே அவருடன் வந்த 6 பாதுகாவலர்கள் என 16 பேர் நிற்கும் போது, வெற்றுக் கைகளுடன் நிற்கும் சிறுமிகளால் என்னதான் செய்ய முடியும். ஆனாலும், அந்த இடத்தை விட்டு நாங்கள் நகரவில்லை.

எங்களிடம் பெயர் மற்றும் எங்கு படிக்கிறோம் என்று கேட்டார் தலைவர்.

உங்களைப் போல் சிறுமிகள் மற்றவர்களுக்காக உதவ நின்றதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள், உங்களைப் போன்றவர்களின் கையில் நாட்டை மீட்டுக் கொடுத்துவிட்டு நிம்மதியாக உறங்குவேன் என்று கூறினார்.

எங்களுக்கோ பெருமையாக இருந்தது. 15 நிமிடத்தில் அவரிற்காக ஒரு வாகனம் வந்தது. ஏறும் போது அவர் எங்களைப் பார்த்து சல்யூட் அடித்துவிட்டு பத்திரமாகப் போய்ச் சேருங்கள் என்று கூறிவிட்டுப் போனார்.

தான் போராடும் மக்களின் நலனைத் தன் பாதுகாப்பை விட மேலாக எண்ணிய பிரபாகரனைப் பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எதுவும் தெரியாவிட்டால் "பொத்திக்கொண்டு இருக்க வேண்டுமே தவிர குடிகாரன் மாதிரி உளரக்கூடாது".

உங்களை மாதிரி ஏசி ரூமில் இருக்கவில்லை எங்கள் தலைவர். அவரைப் பற்றி பேசுவதற்கு எந்த நாயுக்கும் அருகதை இல்லை.

Anonymous said...

பகத் சிங்கைக் காப்பாற்றச் சந்தர்ப்பம் காந்தியுக்கு இருந்தும் காப்பாற்றவில்லை என்று அப்போது வந்த ஆனந்த விகடன் குற்றம் சாட்டியது.. ஏன் தெரியுமா? தன் கருத்தை பகத் சிங் ஏற்கவில்லை என்ற கோபத்தில் பகத்சிங்கைக் காப்பாற்றாது விட்டார் காந்தி என குறிப்பிட்டு இருந்தார்கள். ஏன் உங்களுக்கு சுதந்திரம் தந்த போது, அல்பிரட் சொன்னதை மறந்து விட்டீர்களா? சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு மிகவும் குறைவு என்றதை.

என் பதிவு ஒன்று இதோ:
உலகில் பிடிக்காத / இவர்கள் போல வாழவே கூடாது என்று நான் நினைக்கும் இருவரில் காந்தியும் ஒருவர். மற்றவர் புத்தர். எங்கள் வீட்டில் முதன் முதலில் வந்த ஆனந்த விகடனில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் வரை வந்த ஆனந்த விகடன்கள் எங்கள் வீட்டு லைபிரரியில் உண்டு. அதில் ஒன்றில், பகத் சிங்கின் சாவு பற்றி இருந்தது. அதாவது, காந்தி தான் காட்டிய அகிம்சையில் போராடாது ஆயுதம் ஏந்தியது பகத் சிங் போராடியதில் அதிருப்தி அடைந்ததால், பகத் சிங்கை காப்பாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தும் காப்பாற்றாது விட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்கள். 21 வயதில் பகத் சிங் சாவதற்கு காந்தியும் ஒரு காரணமே.

யுத்தத்தினால், எல்லா புத்தகங்களும் அழிந்துவிட்டன. முடிந்தால், ஆனந்த விகடனிடம் அவர்களின் பழைய புத்தங்களை வாங்கிப் பாருங்கள்.

சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் போன்றவர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை, காந்தி பெற்றது போல் நினைத்து தேச பிதா என்று அவரைக் கூப்பிடும் முட்டாள்களுக்கு எப்போது தான் புத்தி வருமோ தெரியாது... எப்படி ஐயா காந்தியை மாகான் என்கிறீர்கள். தன் சுய கட்டுப்பாடைப் பரிசோதிப்பதற்காக, தன் மனைவியை வெற்றுடலுடன் இருக்கும் படி கூறி அந்த அறையில் அவரைத் தொடாது இரண்டு மூன்று நாட்கள் இருந்து காட்டினாராம். நான் கஸ்தூரி பாயாக இருந்து இருந்தால், செருப்பாலேயே அடித்திருப்பேன். தன் மனைவி ஒரு உயிருள்ள பெண் என்பதை மறந்து இப்படி அறையில் வைத்து தன் சுய கட்டுப்பாட்டை சோதித்த இராட்சதன் தேச பிதாவா?

நீண்டகாலம் தான் வாழ என்று தன் சலத்தை தானே குடித்த மாகான் அல்லவா காந்தி... எப்படி ஐயா அந்த அற்ப மனிதனை தேச பிதா என்று கூறுகிறீர்கள்.

ஞானம் பெற போகும் போது மனைவியிடமோ யாரிடமோ கூறாது திருட்டுத்தனமாக மாளிகையை விட்டு ஓடிய கோழையை கடவுள் என்று துதிக்கும் மூடர்களைக் காணும் போது எனக்கு வரும் கோபம் கட்டுக்கடங்காதது. கோழையை புத்தர் என்று போற்றுவதை எப்போதய்யா நிறுத்தப் போகிறீர்கள்.

இந்தியாவும் இலங்கையும் சாபப்பட்ட பூமி. என்ன செய்வது தலை விதி.. வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான்... .