Pages

May 28, 2009

படித்ததில் ரசித்தது

நான் படித்து ரசித்த சில புத்தகங்கள் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த திவ்யப்ரியாவிற்கு மனமார்ந்த நன்றி. நல்ல வேளை அந்தப் பகிர்தலும் எப்படி இருக்கணும் என்று ஒரு ரெடி மேட் டெம்பிளேட்டும் கொடுத்துவிட்டதால், நான் படித்து ரசித்த புத்தகங்களைப் பட்டியலிடுவது இன்னும் எளிதாகப் போய் விட்டது. சிந்து பைரவி படத்தில் ஒரு வசனம் வரும். நாமளா பாடறது ஒரு சுகம், சங்கீதம் கேக்கறது ஒரு சுகம். அதே மாதிரி சங்கீதத்தைப் பற்றி பேசுவதும் ஒரு சுகம் என்று சுஹாசினி சொல்லுவாங்க. அதே போல், புத்தகங்களைப் படிப்பது ஒரு சுகம், அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் ஒரு தனி சுகம். அதனால் தான் வெட்டிவம்பில் அவ்வப்போது என்னைக் கவர்ந்த சில புத்தகங்களைப் பற்றி இடுகைகள் எழுதியிருக்கிறேன். சரில்ல, ஓவரா பீத்திக்காதே. விஷயத்துக்கு வா’ன்னு சில பேர் கூவறாங்க.

One book that changed my life:
என் வாழ்க்கையை மாற்றிப் போட்டப் புத்தகம்:

என்னடா இது மேஜர் சுந்தர் ராஜன் மாதிரி ஆங்கிலத்தில் சொன்னதை இன்னொரு முறை தமிழிலே சொல்கிறானே என்று நினைக்கறீங்க. பரவாயில்லை, நினைத்துவிட்டுப் போங்கள் :-)

சரி என் வாழ்க்கையை அப்படியொன்றும் பெரிதாக மாற்றிப் போட்ட புத்தகம் என்று எதுவும் பெரிதாகச் சொல்ல முடியாது. ஆனால் சில புத்தகங்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கு ரொம்பவே உதவியாயிருந்திருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சுவாமி சுகபோகானந்தா எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம். வாழ்வின் மிகவும் விரக்தியான, தனிமைப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் மிகவும் தன்னம்பிக்கையூட்டிய புத்தகம். அதேபோல் காஞ்சி காமகோடி ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்களின் பேச்சுகளின் தொகுப்பான தெய்வத்தின் குரல்.

ஆனால் ஒரு புத்தகத்தைப் படித்து விட்டுப் பித்து பிடித்தவன் போல் அலைந்திருக்கிறேன். அது, பொன்னியின் செல்வன். அது பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள், நூலுக்குள் நுழந்தேன் - 1 நூலுக்குள் நுழைந்தேன் - 2 எழுதியிருக்கேன்.

The book you have read more than once:
ஒரு தடவைக்கு மேலாக ஒரு புத்தகத்தை வாசித்தது:

அதுவும் பொன்னியின் செல்வனே. மூன்று தடவை முழுவதுமாக படித்து முடித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், குந்தவை வரும் பாகங்களை மீண்டும் படிப்பேன்.

ஆங்கிலத்தில் மீண்டும் படிக்க வைத்த புத்தகம், டான் பிரவுணின் டிஜிடல் ஃபோர்ட்ரெஸ். விறுவிறுப்பாக இருந்ததால், விடிய விடிய படித்து விட்டு, முழுவதும் புரிவதற்காக மீண்டொருமுறை படித்தேன்.

One book you would want on dessert island:
ஒரு தனித்தீவில் நீங்கள் எடுத்துச் செல்ல நினைக்கும் புத்தகம்

சுஜாதாவின் எந்தவொரு நாவலானாலும் சரி. தமிழில் எழுதும் எவருக்கும் இவரே ஆசான். தைரியமாகச் சொல்லலாம்.

One book that made you laugh:
சிரிக்கவைத்தவொரு புத்தகம்:

ஆங்கிலத்தில் நகைச்சுவையான புத்தகம் என்றால், டிண்டின் காமிக்ஸ். அதுவும், கேப்டன் ஹேடக் எங்கேயாவது போய் அடிபட்டுக் கொண்டு, Billious of Blue Blistering Barnacles, Thundering Typhoons என்று கத்துவதைப் பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவேன்.

தமிழில் படித்ததில் சிரித்து வயிறு கிழிந்தது, கிரேஸி மகன் எழுதிய, கிச்சா. கிச்சா அடிக்கும் லூட்டியில் வயிறு அருந்தே போய்விட்டது. சாவி எழுதிய வாஷிங்கடன் திருமணமும் அதே ரகம். சில இடங்களில் மட்டும் கிச்சு கிச்சு ரகம்.

One book that made me cry:
அழவைத்த ஒரு புத்தகம்:

நல்லவேளை இது வரை அப்படியேதும் புத்தகம் படித்ததில்லை. தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா மட்டும் மனதை நெருடச் செய்தது. அங்கு நடந்த இனப் படுகொலைகளையெல்லாம் யாருமே கண்டுக்கவில்லை.

One book that you wish had never been written:
இந்த மாதிரி ஒரு புத்தகத்தை ஏன் எழுதினார்கள் என்றொரு புத்தகம்

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்து விட்டு, அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தபோது, அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆவல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம் அது. பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து, அதன் அடிப்படையில் யாராவது எழுதியிருக்கிறார்களா, என்று தேடியதில் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி பற்றி அறிந்து கொள்ள நேரிட்டது. அந்த நந்திபுரத்து நாயகி, குந்தவை என்றும் அவளை வைத்தே மூன்று பாகங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும், அந்தப் புத்தகத்தை தேடாத இடமில்லை. கடைசியில் ஆசிரியரின் முகவரியும் கிடைத்து. அவர் வீட்டுக்கே என் கசினை அனுப்பி, எப்படியாவது புத்தகம் வாங்கிவரச் சொல்லி, அன்றே கூரியர் செய்ய சொல்லி, படித்துப் பார்த்தால், புத்தகம் செம கடி. வாங்கி விட்டோமே என்ற எண்ணத்திற்காகவே படிக்க வேண்டியதாப்போச்சு.

One book you wish you had written:
நான் எழுதியிருக்க வேண்டும் என்றெண்ணிய புத்தகம்

சுஜாதாவின் சில நாவல்களைப் படிக்கும் போது, இப்படியொரு கதைகளத்தைக் கொண்டு நமக்கேன் கற்பனை வர மாட்டேங்குது என்ற ஏக்கம் மட்டுமே வரும்.

One book you are currently reading

இப்போது படித்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம்:

இப்போது மூன்று புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம், சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், ஜிம் கரி எழுதிய, Men are From Mars, Women Are From Venus. ஏற்கனவே சென்ற பதிவில் இதைப் பற்றி எழுதிவிட்டதால் மறு ஒளிபரப்பு செய்ய விரும்ப வில்லை.

One book you have been meaning to read:

நான் படிக்க விரும்பும் ஒரு புத்தகம்:

இரண்டு முறை படிக்க ஆரம்பித்து, 50 பக்கங்களோடு நின்று விட்ட, Fountain Head. ரொம்ப நாளாக காயத்ரி இதைப் படிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அவள் புதினம் படிக்க ஆரம்பித்த காலத்தில் முதலில் படித்த புதினமாம். அதே புத்தகத்தை, அட்டை பைண்ட் செய்யாத குறையாக பாதுகாத்து வைத்திருக்கிறாள்.

One book you’ll recommend

நான் பரிந்துரைக்கும் ஒரு புத்தகம்

எதைச் சொல்ல எதை விட? இது வரை பொன்னியின் செல்வன் படிக்கவில்லையென்றால் இனியாவது படியுங்கள். இல்லையென்றால் புத்தகம் படிப்பதில் அர்த்தமே இல்லை. ஆங்கிலத்தில் Irving Wallace எழுதிய The Man கண்டிப்பாகப் படிக்கச் சொல்வேன்.

சரி, கொடுத்த வேலையை செவ்வன செய்து முடிச்சாச்சு. யாரை கோர்த்து விட? அரிதான சில சினிமாக்கள் பற்றி அமோகமான தகவல்கள் பல கொடுக்கும் சரவண குமாரை, இந்தத் தொடருக்கு அன்புடன் அழைக்கிறேன்.

15 comments:

Subbu said...

Fountainhead thanu.. enge irunthu Mountainhead vanthathu??

மேவி... said...

நல்ல பகிர்வு விஜய்.


"சுவாமி சுகபோகானந்தா எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம். வாழ்வின் மிகவும் விரக்தியான, தனிமைப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் மிகவும் தன்னம்பிக்கையூட்டிய புத்தகம்."

எனக்கு ஒரு ஜெயகாந்தன் எழுதின கதை படித்த பிறகு வாழ்க்கை பற்றிய ஒரு புது வித பார்வை வந்தது........


"ஆனால் ஒரு புத்தகத்தைப் படித்து விட்டுப் பித்து பிடித்தவன் போல் அலைந்திருக்கிறேன். அது, பொன்னியின் செல்வன்."

same blood

தல... நீங்க நிறைய படிபிங்க போல் இருக்கு........
பெரிய ஆளு தான் நீங்க

மேவி... said...

romba freeya irukkingalo???
erndu naal ; erndu padivu


hmm
kalakkunga

Vijay said...

\\Subbu said...
Fountainhead thanu.. enge irunthu Mountainhead vanthathu??
\\

Spelling Mistake :-)
Actually I had thought of Fountain Head. But wrote it as Mountain head :-( Thanks for pinpointing the mistake.

Subbu, Why don't you share the list of the books you have read. You too are a horacious reader.

Vidhya Chandrasekaran said...

நல்ல பட்டியல்.

Arun Kumar said...

விஜய் நல்ல தேர்வுகள்.
அடுத்த முறை புத்தகம் வாங்க செல்ல போகும் போது இந்த பட்டியம் மிகவும் பயனாக இருக்கும்

M Arunachalam said...

Hi Vijay,

Very interesting answers.

Happy to know that you too are a voracious reader like me. However, of late, I am not able to complete any book/novel.

I too am a fan of Kalki's Ponniyin Selvan, which I have read twice. His Sivagamiyin Sabatham is also a good novel. If you have not read it, you can try now.

I heard about Dan Brown's "Digital Fortress" from my nephew. Now that you are also corroborating its worth, I will definitely try to lay my hands on it soon.

My suggestion of novels, if you have not already read them, are:

1. The Eye Of The Needle by Ken Follet
2. Tiger by The Tail and
3. Hit and Run (both by James Hadly Chase)
4. The Day of The Jackal by Frederick Forsyth

In all the above novels, the story will move so fast that you won't feel like keeping the books away till you finish them. At least that is what I felt when I read them all in the 80s.

Subbu said...

Subbu, Why don't you share the list of the books you have read. You too are a horacious reader.
>> Again a mistake it is voracious (hihi )..நாங்க நக்கீரர் பரம்பரை இல்ல

My personal favs
Sujatha's Sirugathaigal collection
Katrathum Petrathum
Jeno

Fiction/Technical
1. Code Book by Simon Singh (More into cryptography .. but talks about the social aspects lead to discovery of Ciphers/secret messages)
2. Dan Brown's books
3. The Man Who Knew Infinity: A Life of the Genius Ramanujan
(I bought it in Amazon..if you need i can spare)

I am not a big fan of Pillow sized books..
ஒரு காலத்துல ஒண்ணுமே கிடைக்கலைனா "கூடு விட்டு கூடு" பாயிறது எப்படிங்கற புக் எல்லாம் படிச்சிருக்கேன்

Karthik said...

nice post. :)

Divyapriya said...

nice post vijay...நான் கரெக்ட்டா தான் tag பண்ணியிருக்கேன் ;)

kanagu said...

நல்ல பதிவு அண்ணா... ’மனசே ரிலாக்ஸ் பிளீஸ்’ எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். வாழ்க்கை பற்றிய என் எண்ணத்தை மாற்றிய புத்தகம்...

‘பொன்னியின் செல்வன்’ புத்தகம் படிக்க வேண்டும்.... அதை விட மகாபாரதம் படிக்க ஆவலாக உள்ளேன்.. :)

கிரேஸி மோகன் புத்தகம் எழுதி இருக்கார் என்று இப்போது தான் தெரியும்.. படிக்க வேண்டும் :)

Fountain head படிங்க.. நிறைய பேர் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

முகுந்தன் said...

//சுவாமி சுகபோகானந்தா எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம். வாழ்வின் மிகவும் விரக்தியான, தனிமைப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் மிகவும் தன்னம்பிக்கையூட்டிய புத்தகம். //


எனக்கும் ரொம்ப பிடித்த புத்தகம் இது.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

கள்ளிக்காட்டு இதிகாசம் படித்திருக்கிறீர்களா விஜய்.? just give a try. one of the nice novels in this decade. I have read it around some 23 to 24 times. சிவகாமியின் சபதமும் அப்படித்தான். அதில் வருகிற நாக நந்தி வில்லனாக இருந்தாலும் ஏனோ அந்த கதாபாத்திரத்தின் மீது ஒரு craze. அதை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் அதையும் படித்து பாருங்கள்..

Anonymous said...

அன்புள்ள விஜய், அதிஷ்டவசமாக உங்கள் ப்ளாக் தேடியதில் கிடைத்தது. நானும் உங்களை போல ஒரு புத்தக புழு. உங்களுடம் நட்பு கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு தனியாள். என் பெயர் கணேசன். ஒரு வணிகவியல் முதுகலை பட்டதாரி. தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறேன். பிறந்தது கடலூரில் - வளர்ந்தது,படித்தது மற்றும் என் தாய் தந்தையரை இழந்தது சிதம்பரத்தில் - தற்போது பிழைப்புக்காக மாரடிப்பது சென்னை மாநரகத்தில். என் அலை பேசி எண் 9444176342. உங்கள் தொடர்பை ஆவலுடன் எதிர் பார்க்கும் நடப்பு விரும்பி -
இரா. கணேசன்

Anonymous said...

அன்புள்ள விஜய், அதிஷ்டவசமாக உங்கள் ப்ளாக் தேடியதில் கிடைத்தது. நானும் உங்களை போல ஒரு புத்தக புழு. உங்களுடம் நட்பு கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு தனியாள். என் பெயர் கணேசன். ஒரு வணிகவியல் முதுகலை பட்டதாரி. தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறேன். பிறந்தது கடலூரில் - வளர்ந்தது,படித்தது மற்றும் என் தாய் தந்தையரை இழந்தது சிதம்பரத்தில் - தற்போது பிழைப்புக்காக மாரடிப்பது சென்னை மாநரகத்தில். என் அலை பேசி எண் 9444176342. உங்கள் தொடர்பை ஆவலுடன் எதிர் பார்க்கும் நடப்பு விரும்பி -
இரா. கணேசன்