Pages

May 16, 2009

ஐ.பி.எல்'இன் உச்ச கட்டம்

ரு மாதமாக நடந்து கொண்டிருந்த ஐ.பி.எல் இன்று தான் உச்சத்தை எட்டியிருக்கிறது. என்னடா இவன் இன்னும் பத்து நாட்கள் நடக்க வேண்டியிருக்கும் ஐ.பி.எல் பற்றி இப்போதே பேசுகிறானே என்று முழி பிதுங்க வேண்டாம். நான் சொல்லும் ஐ.பி.எல் இந்தியன் பார்லிபென்டரி லீக் Indian Parliamentary League. காலையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் இன்னும் முடிந்தபாடில்லை. இருந்தாலும், சுவாரஸ்யத்திற்கு ஒரு குறைச்சலும் இல்லை. முதலில் முன்னணியில் இருப்பவர், பத்து நிமிடங்களில் பின் தங்குகிறார், பின்னணியில் இருப்பவர் முன்னணிக்கு வருகிறார். யப்பா, என்ன பரபரப்பு. சில இடங்களில் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை. பெறுத்த ஏமாற்றம், சில இடங்களில் எதிர்பார்ப்பை விட இன்னும் நல்ல முடிவுகள். ஒன்று மட்டும் உறுதி. மக்களின் எண்ண ஓட்டத்தை எந்த ஊடகத்தாலும் புரிந்து கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.

இன்னும் முன்னணி முடிவுகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கூட்டணி தான் மீண்டும் அரசு அமைக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்திய மக்கள் இந்த தடவை தொங்கு பாராளுமன்றத்துக்கு ஓட்டளிக்கவில்லை என்றெண்ணும் போது சற்று நிம்மதி. அரசியல்வாதிகள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள மட்டுமே யோசித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். நாடு என்றொன்று இருக்கிறது, அதில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் சில நேரம் செலவிடுவோமே என்று சிந்திக்கத்தோன்றுவார்கள்.

தேர்தல் முடிவுகளில் சில சந்தோஷங்கள் சில ஏமாற்றங்கள். ஷஷி தாரூர் போன்று படித்த நல்ல பண்புள்ளவர்கள் தேர்தலில் வென்று பாராளுமன்றத்துக்கு வருவது வரவேற்க்கத்தக்க விஷயமாக இருந்தாலும், அழகிரி போன்ற ரவுடிகளும் கூடவே வருகிறார்கள் என்று எண்ணும் போது, சற்று பயமாகவே இருக்கிறது.

மதுரை மக்களுக்கு அழகிரி போன்ற ரவுடிகளுக்கு ஒரு பாடம் புகட்ட நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதைக் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தான் எண்ணுகிறேன்.அழகிரி வென்றது ஒருவகையில் நல்லது தான். ஆனந்த விகடனில் வந்த ஜோக் ஒன்று தான் ஞாபகம் வருகிறது. இரண்டு பேர் பேசிக்க் கொள்வார்கள்.

"என்ன டா, இப்போ உங்க ஏரியா ரவுடி பக்கிரி தொல்லை குறைஞ்சிடிச்சாமே"
"ஆமாம் டா. நாங்க அவனுக்கு சரியான தண்டனை கொடுத்திட்டோம். வந்த இடைத்தேர்தல்'லெ அவனை எம்.எல்.ஏ ஆக்கி சென்னைக்கு அனுப்பிட்டோம்"

அழகிரிக்கும் இது மதுரை மக்கள் கொடுத்திருக்கும் தண்டனை மாதிரி தான் இருக்கிறது. மதுரையிலேயே இருந்து நமக்குத் தொல்லை கொடுப்பதை விட, இவரை டில்லிக்கு அனுப்பிவிட்டால், விட்டது பீடை என்று சில நாட்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணியிருப்பார்கள் போல. தான் ஒரு எம்.பி.'யாக கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் செலவழித்திருக்கும் ஒருவர், அதை விட பல மடங்கு சொத்து சேர்க்கத்தான் முனைவார். என்னவேணாலும் பண்ணித்தொலையட்டும். மக்களுக்கு நாலு நல்லது பண்ணினால் சரி தான்.

லாலு, ராம்தாஸ், வைகோ, ராம் விலாஸ் பஸ்வான் போன்ற சந்தர்ப்ப வாதிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். பதவி சுகத்துக்காக மட்டுமே கூட்டணி வைத்துக் கொள்ளும் இம்மாதிரியான அரசியல்வாதிகளுக்கு இது சரியான சாட்டையடி. இனிமேலாவது நல்ல புத்தி வந்து திருந்தினால் சரி.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கருணாநிதியே எதிர்பாராத முடிவுகள். என்னைக்கேட்டால், விஜய்காந்துக்குத் தான் கருணாநிதி நன்றி சொல்ல வேண்டும். ஆன்டி-இன்கும்பென்ஸி (Anti-Incumbency)வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குப் போகாமல் இருக்கு, விஜயகாந்தே ஒரு பெரும் காரணம் என நினைக்கிறேன்.

அப்பாடா, தேர்தல் முடிந்தது, இனி நம்ம ராஜ்யம் தான் என்று காங்கிரஸ் மார் தட்டிக் கொள்ளாமல், இனி நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் என்று நினைக்கவேண்டும். பி.ஜே.பி தங்களுக்குள் தோல்வியை ஒப்புக் கொண்டாலும், வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரு நல்ல எதிர் கட்சியாகப் பணியாற்ற வேண்டும். சும்மா எல்லாவற்றிற்கும், பாராளுமன்றத்தின் நடுவுக்கு வந்து, வெளிநடப்பு செய்வது என்றிருக்காமல், உருப்படியாக ஏதாவது செய்தால், மாநிலத் தேர்தல்களில் ஏதாவது சாதிக்க முடியும்.

ஏதோ எழுத நினைத்து, ஆனந்த விகடன் தலையங்கம் போலாகிவிட்டது.

பாவம் அத்வானி தான். வாழ்நாளில் ஒரு நாளாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்றெண்ணியவரின் மனக்கோட்டை சுக்கு நூறாக உடைந்து விட்டது. இனிமேலாவது தனிமனித தாக்குதலை நிறுத்தி விட்டு, உருப்படியான எதிர்க் கட்சியாத் தலைவராக நடந்து கொள்வார் என்றெதிர்பார்ப்போம்.

கடைசியாக மன்மோகன் சின்ங்குக்கு. ஆய் போய்ட்டு அலம்பிக்கறதுக்கு கூட சோனியாகாந்தியின் கட்டளைக்குக் காத்திருக்காமல், தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க வேண்டும். மன்மோகன் சார், நீங்க 2004'ல நாடு உங்களிடத்தில் ஒப்படைக்கப் பட்டபோது நல்ல நிலைமையில் இருந்தது. இன்று நிலைமை தலைகீழ். உங்க அரசு உருப்படியாக பெரிதும் சாதிக்க வில்லை. இனிமேலாவது நாட்டை முன்னேற்றப் பாருங்கள். எல்லோரையும் எப்போதும், ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது.

8 comments:

kanagu said...

இது ரொம்பவே எனக்கு ஏமாற்றத்த்தை தந்த முடிவு அண்ணா... கங்கிரஸ் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் அல்ல...

மீ த ஃபர்ஸ்ட் :)

Divyapriya said...

exit poll results அ விட அதிகமா ஜெயிச்சிட்டாங்க!

விகடன் தலையங்கம் மாதிரி தான் இருக்கு :))

Vidhya Chandrasekaran said...

Even congress would hv not expected this. But in TN they deserve this:)

Poornima Saravana kumar said...

மதுரை மக்களுக்கு அழகிரி போன்ற ரவுடிகளுக்கு ஒரு பாடம் புகட்ட நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதைக் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தான் எண்ணுகிறேன்//

உண்மை தான்:(
இந்த மக்களை திருத்தவே முடியாதுங்க:((

Poornima Saravana kumar said...

"ஐ.பி.எல்'இன் உச்ச கட்டம்"//

நாங்க என்னவோனு இல்ல நினைச்சோம்:)

RAMYA said...

//மதுரை மக்களுக்கு அழகிரி போன்ற ரவுடிகளுக்கு ஒரு பாடம் புகட்ட நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதைக் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தான் எண்ணுகிறேன்//


சரியாச் சொன்னீங்க, என்ன செய்ய? மக்களின் தலை விதியை யாராலும் மாற்ற முடியாது.

RAMYA said...

//"ஐ.பி.எல்'இன் உச்ச கட்டம்"//


தலைப்பை மட்டும் படித்து கொஞ்சம் ஏமாந்துதான் போயிட்டேன்!

மேவி... said...

present sir