Pages

April 15, 2009

சட்டத்துக்கு அறிவுமா இல்லை??

பாகிஸ்தான் தீவிரவாதியான ஆமீர் அஜ்மல் கஸாப் மீது இன்று ஒரு வழியாக விசாரணை ஆரம்பமாகவிருந்தது. மக்களை சரமாரியாக சுட்டுக் கொன்று குவிக்கும் ஒரு மிருகத்தை கையும் களவுமாகப் பிடிபட்டவன் மீது எந்த வித நடவடிக்கையும் இன்று வரை எடுத்தபாடில்லை. நாட்டின் பிரதமருக்கு ஒப்பான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு ஒரு ராஜ போக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அவனுக்காக ஆஜராக வழக்குறைஞர் யாரும் இல்லை என்கிறார்கள். என்ன கொடுமையடா இது? கேட்டால் இது தான் நாட்டின் சட்டமாம்.

இதை விட கேவலம் என்னவென்றால், இவனுக்காக ஆஜராக நீதிமன்றமே ஒரு வழக்குறைஞரை நியமிக்கிறது. இன்று அந்த வழக்குறைஞரையும் நீக்கி விட்டது. என்னவோ, அவர் Spirit of the Law படி நடக்க வில்லையாம். ஒரு வழியாக கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து ஆரம்பமான விசாரணை, அடியப்பிடிடா பாரத வட்டா என்று மீண்டும் அதே நிலைமைக்குப் போய் விட்டது. இதிலுள்ள கேலிக் கூத்தென்னவென்றால், இப்போது கஸாப் ஒரு பாகிஸ்தான் வழக்குறைஞரை நாடுகிறாராம்.

ஒன்று எனக்குப் புரியவில்லை. கஸாப் போன்ற தீவிரவாதிகள் செய்தது சாதாரண குற்றமில்லை. அது நமது நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர். இவர்களை எப்படி போலீஸ் பிடித்து, நீதிமன்றம் இவர்களை விசாரிக்கலாம். பிடிபட்ட தீவிரவாதிகளை ராணுவமல்லவா அவர்களை நீதிமன்றமத்தில் வைத்து விசாரிக்க வேண்டும். காஷ்மீரில் பிடிபடும் தீவிரவாதிகளையெல்லாம், ராணுவம் தானே விசாரித்து, அவர்களுக்கான தண்டனையை வழங்குகிறது. அவர்கள் எடுக்கும் முடிவை, எந்த நீதிமன்றமோ, மனித உரிமைக் கழகமோ ஒன்று புடுங்க முடியாது. பேசாமல் கஸாபையும் ராணுவத்திடம் ஒப்படைத்து விடலாம்.

கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தேச துரோகி மிருகத்துக்கு இவ்வளவு சலுகைகளா? கேட்டால் சட்டமாம், நியாயமாம். தீவிரவாதிகளை இப்படி அன்பாக நடத்தினால், ”எம்புட்டு பேரைக் கொன்னாலும், இவனுங்க ஒண்ணுமே பண்ண மாட்டாங்க, இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா”ன்னு நினைத்து, அடுத்த தாக்குதலுக்கு தேதி குறிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

கஸாபின் குற்றத்தை இன்னும் யார் வந்து நிரூபிக்க வேண்டும். நீதிபதி முன்னால் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டால், இவனுக்கு ஆயுள் தண்டனை கூட கொடுத்து விடுவார்கள். இல்லையென்றால், சுப்ரீம் கோர்டில் மேல் மனு கூட முலாயம் சிங் மாதிரி ஆட்கள் போடுவார்கள். சட்டம் தன் கண்களின் மீது கறுப்புத்துணி கட்டியிருப்பதால், சட்டம் குருடு என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது, அதற்கு மூளையும் கிடையாது என்று.

தான் உயிரைக் கொடுத்துப் பிடித்த தீவிரவாதிக்கு இவ்வளவு மரியாதை கிடைப்பது தெரிந்தால், அவனைப் பிடித்த, கான்ஸ்டபிள் துக்காராம் ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் வருகிறது. கஸாபுக்கு மரண தண்டனை விதித்து, அதை கூடிய சீக்கிரமே நிறைவேற்றுவது தான் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதிமன்றம் வழங்கும் நியாயமாகும். இவ்வளவு நாளாக நியாயம் கிடைக்காமல் செய்வதிருப்பதே பெரிய தவறாகும். Justice Delayed is Justice Denied. சட்டம் இப்படித்தான் முட்டாள்த் தனமாக செயல் படுமென்றால், அந்தச் சட்டத்தையே மாற்ற வேண்டியது தான்.

கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தீவிரவாதிக்கே, இவ்வளவு மரியாதை என்றால், கோடி கோடியாக மக்களை ஏமாற்றி பணம் செய்த அரசியல்வாதிகளையா, இந்த நீதிமன்றங்கள் தண்டிக்கப் போகின்றன?

22 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

RAMYA said...

உங்கள் கேள்விகள் மிகவும் நியாமானவைகள் தான்.

என்ன செய்ய யாரும் பதில் சொல்ல மாட்டங்க!!

//
கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தீவிரவாதிக்கே, இவ்வளவு மரியாதை என்றால், கோடி கோடியாக மக்களை ஏமாற்றி பணம் செய்த அரசியல்வாதிகளையா, இந்த நீதிமன்றங்கள் தண்டிக்கப் போகின்றன?
//

இவங்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது விஜய்
நம்ம மக்கள் யோசிக்கணும்.

ஒவ்வொரு தேர்தல் போதும் அவர்களின் நடவடிக்கைகளை
நாமதான் பகுத்துப் பார்க்கணும்.

சுயநலம் இல்லாத ஒரு அரசியல் கட்சி நாட்டை ஆளவேண்டும்.
இதெல்லாம் நடக்குமா? என்று விடியல் நமக்கு??

அதுதான் சோகமே, இன்று நமது நிலையின் அவலமும் அதுவே.

தாரணி பிரியா said...

நம்ம நாடு ஜனநாயக நாடாம் விஜய். இப்படி சொல்லியே கடுப்பேத்துவானுங்க.

தாரணி பிரியா said...

எல்லாரும் சேர்த்து யோசிக்கணும். தீர்வு நம்ம கையிலதான் இருக்கு. ஏதாவது செய்தாகணுமின்ற கோபம் வருது. ஆனா என்ன செய்ய போறோம் ?

தாரணி பிரியா said...

இவனுங்களை பிடிக்க உயிரை குடுத்தவங்ககளுக்கு நாம இதை விட துரோகம் செய்யவே முடியாதுன்னு எனக்கு தோணுது

Vidhya Chandrasekaran said...

பேசாம என்கவுண்ட்டர் பண்ணிடனும். சும்மா தண்டத்துக்கு நம்ம காச வேற செலவழிச்சிட்டிருக்கானுங்க.

Poornima Saravana kumar said...

கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தீவிரவாதிக்கே, இவ்வளவு மரியாதை என்றால், கோடி கோடியாக மக்களை ஏமாற்றி பணம் செய்த அரசியல்வாதிகளையா, இந்த நீதிமன்றங்கள் தண்டிக்கப் போகின்றன?
//

உண்மை தான் விஜய்..

Poornima Saravana kumar said...

உயிரைக் கொடுத்து பிடித்துக் கொடுத்தால் இவர்கள் அந்த கேடிக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிடுவார்கள் போல!

Poornima Saravana kumar said...

சட்டத்துக்கு அறிவுமா இல்லை??//

அது இருந்தால் எப்பவும் ஏன் இந்த அரசியல்வாதிகள் சும்மா உறவினர்கள் வீட்டுக்கு போவது போல் தான் செய்திருக்கும் தவறையும் மறந்து ஜாலியாக போவார்களா????

ஒரு பயம் என்பது வேண்டாம்?

kanagu said...

Anna.. namma sattam oru mokkayanathu than.. but still naamalum taliban maari nadanthuka mudiyathu.. sattathin mulama than thandikanum..

aana raanuva needhimandrathu opadaikaama ivanunga ipdi poranunga nu theriyala :(

but Kasab kum namma politician yaarukavathu kooda thodarbu irukalam

Anonymous said...

டென்சன் ஆகாதீங்கண்ணே...

லெஸ் டென்சன் மோர் வொர்க்...
மோர் வொர்க் லெஸ் டென்சன்...

Divyapriya said...

நூத்துக்கு நூறு உண்மை விஜய்...
இதுல அவன் கோர்ட்ல கெக்க பெக்கேன்னு சிரிச்சுட்டு வேற இருந்தானாம்!!! ஏன் சிரிக்க மாட்டான்? இப்படி லூசா இருக்கானுங்களேடான்னு நினைச்சு சிரிச்சிருப்பான்!

பட்டாம்பூச்சி said...

நியாயமான கேள்விதான்.
ஆனா பூனைக்கு யார் மணிகட்டுவதுங்கற கதைதான் இங்கயும்.

தமிழ். சரவணன் said...

//சட்டத்துக்கு அறிவுமா இல்லை??//

அருமையாண கேள்வி... இந்த கேள்விக்காக உங்களை சிறையில் அடைக்கவும் சட்டம் இருக்கின்றது...


சாதிக்கொரு சங்கம் உண்டு!!
வீதிக்கொரு கட்சி உண்டு!!

நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்ல...

குருட்டுச் சட்டங்களும் அதனால் பாதிப்படைந்தவர்களும் ஏராளம்...

அதுபோல் சட்டத்தால் பாதிக்கப்பட்டவன்...

தமிழ். சரவணன்

Ramya Ramani said...

நியாயமான கோபம்! ஆனா இவங்கள என்ன பண்ணலாம். அரசியல்வாதிங்க சம்பந்தப்பட்டிருக்கிற தால இப்படி பொறுமையா நகருது..

By the time he is punished, we will forget that case and be discussing about something more sensational.Pity of democracy !

தமிழ். சரவணன் said...

//அரசியல்வாதிங்க சம்பந்தப்பட்டிருக்கிற தால இப்படி பொறுமையா நகருது..//

யாருக்கு தெரியும் வைக்க சொன்னதே இந்த குள்ளநரி கூட்டமாக இருக்கும்...

மேவி... said...

ellam arasiyalvathigalin suyanalathirkkaga seiya padum velai...

ஜியா said...

Namma Indian law maathiri comedy engeyume irukaathunnu nenakiren... Vaatutha.. vaayuthaa nu sollliye kadaisila pala judge vaaya pozanthirupaanga...

Karthik said...

anne... ushaara irunagne... ippa la vanmuraiya thoondura maadhiri pesuraaga nu jaila poduraangya... adhulayum neenga paaka iyakunar SEEMAN maadhiri irukkel.. Venaam ne!! :)


//கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தீவிரவாதிக்கே, இவ்வளவு மரியாதை என்றால், கோடி கோடியாக மக்களை ஏமாற்றி பணம் செய்த அரசியல்வாதிகளையா, இந்த நீதிமன்றங்கள் தண்டிக்கப் போகின்றன?//


INDIA vil idhellam nadakira kadhaiya???

Vijay said...

\\RAMYA said...
ஒவ்வொரு தேர்தல் போதும் அவர்களின் நடவடிக்கைகளை
நாமதான் பகுத்துப் பார்க்கணும்.

சுயநலம் இல்லாத ஒரு அரசியல் கட்சி நாட்டை ஆளவேண்டும்.
இதெல்லாம் நடக்குமா? என்று விடியல் நமக்கு??\\
சுயநலம் இல்லாத கட்சி- அப்படின்னா என்ன? பேசாமல் நாட்டில் சில நாட்களுக்கு ராணுவம் ஆண்டதுன்னா நல்லா இருக்கும்.

\\தாரணி பிரியா said...
நம்ம நாடு ஜனநாயக நாடாம் விஜய். \\
இந்த அவல நிலைய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள் பார்த்தால், ஏந்தான் சுதந்திரம் வாங்கினோம் என்று பொறுமுவார்கள்.

\\ வித்யா said...
பேசாம என்கவுண்ட்டர் பண்ணிடனும். சும்மா தண்டத்துக்கு நம்ம காச வேற செலவழிச்சிட்டிருக்கானுங்க.\\
இப்படி தீவிரவாதிகள் மீது தீவிரம் காட்டாமல் சட்டம் அது இதுன்னு சொல்லியே கடுப்பேத்தறானுங்க.

\\ Poornima Saravana kumar said...
உயிரைக் கொடுத்து பிடித்துக் கொடுத்தால் இவர்கள் அந்த கேடிக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிடுவார்கள் போல!\\
இன்னிக்கு நாட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் மிகப் பெரிய பொக்கிஷம், கஸாப் என்னும் மிருகம்.

\\ kanagu said...
but Kasab kum namma politician yaarukavathu kooda thodarbu irukalam\\
அப்படி ஏதேன் அரசியல்வாதியின் தொடர்பு இருந்தால் அவன் குலத்தையே நாடு கடத்தி விட வேண்டும்.

\\ Sriram said...
டென்சன் ஆகாதீங்கண்ணே...
லெஸ் டென்சன் மோர் வொர்க்...
மோர் வொர்க் லெஸ் டென்சன்...\\
டென்ஷன் ஆகாம கூலா ஒரு பதிவு எழுதியிருக்கேனே பார்க்கலியா?

\\ Divyapriya said...
நூத்துக்கு நூறு உண்மை விஜய்...
இதுல அவன் கோர்ட்ல கெக்க பெக்கேன்னு சிரிச்சுட்டு வேற இருந்தானாம்!!! ஏன் சிரிக்க மாட்டான்? இப்படி லூசா இருக்கானுங்களேடான்னு நினைச்சு சிரிச்சிருப்பான்!\\
நாம இளிச்ச வாயனுங்க தான் உலகத்துக்கே தெரியுமே!!!

\\ பட்டாம்பூச்சி said...
நியாயமான கேள்விதான்.
ஆனா பூனைக்கு யார் மணிகட்டுவதுங்கற கதைதான் இங்கயும்.\\
மீண்டும் நாட்டில் ஒரு பெரிய புரட்சி வெடிக்க வேண்டும்.

\\தமிழ். சரவணன் said...
அருமையாண கேள்வி... இந்த கேள்விக்காக உங்களை சிறையில் அடைக்கவும் சட்டம் இருக்கின்றது... \\
வாங்க சரவணன். ஏதேது, நீங்களே போட்டுக் கொடுத்திடுவீங்க போலிருக்கே :-)

\\Ramya Ramani said...
By the time he is punished, we will forget that case and be discussing about something more sensational.Pity of democracy !\\
It is a pity that no media is talking anything about the slowness at which the court is handling the case. Shame on our Judiciary.

\\ MayVee said...
ellam arasiyalvathigalin suyanalathirkkaga seiya padum velai...\\

நேரு என்ற அரசியல்வாதியின் முட்டாள் தனத்தால் இன்றும் நாம் அவதிப் படுகிறோம்.

\\ ஜி said...

Namma Indian law maathiri comedy engeyume irukaathunnu nenakiren... Vaatutha.. vaayuthaa nu sollliye kadaisila pala judge vaaya pozanthirupaanga...\\

நிஜம். காசிருந்தா யார் வேணுமானாலும் என்ன வேணுமானாலும் செய்யலாம். மேல் அப்பீல் செய்திக்கிட்டே இருக்கலாம்.

\\Karthik said...
anne... ushaara irunagne... ippa la vanmuraiya thoondura maadhiri pesuraaga nu jaila poduraangya... adhulayum neenga paaka iyakunar SEEMAN maadhiri irukkel.. Venaam ne!! :)\\

ஆஹா, உனக்கு கம்பேர் செய்யறதுக்கு ஆளே இல்லையா? :-)

sakthi said...

தான் உயிரைக் கொடுத்துப் பிடித்த தீவிரவாதிக்கு இவ்வளவு மரியாதை கிடைப்பது தெரிந்தால், அவனைப் பிடித்த, கான்ஸ்டபிள் துக்காராம் ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம்

wat to do tat is great india

வாழவந்தான் said...

ஒய் பிளட்? சேம் பிளட்!!
இதை தவிர வேற என்னத்த நான் சொல்ல?