Pages

October 25, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2

மஹான்கள் என்னப்படுபவர்கள் ரொம்பவும் மேன்மை பொருந்தியவர்கள் என்பதால், மக்களைச் சுரண்டுபவர்களை மஹான்கள் என்றழைக்க முடியாது. அதனால் இப்பதிவிற்கான தலைப்பை மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது.

ந்த செட்-டாப்-பாக்ஸ் செட்-டாப்-பாக்ஸ் என்கிறார்களே அது என்ன? ஒளி ஒலி அலைகள் அனலாக் அலைகளாகத்தான் முதன் முதலில் நம் தொலைக்காட்சிப்பெட்டிகளை வந்தடைந்து கொண்டிருந்தன. அனலாக் அலைகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் அலைவரிசை உண்டு. அதாவது Frequency. ஒவ்வொரு சானலுக்கும் இந்த அலைவரிசை எண் மாறுபடும். ஒரே அலைவரிசையில் இரண்டு சானல்களை ஒளிபரப்ப முடியாது. நூறு சானல்களை ஒளிபரப்ப வேண்டுமென்றால் நூறு அலைவரிசைகள் தேவை. அது மட்டுமல்லாமல், இரண்டு சானல்களுக்கு நடுவில் இவ்வளவு அலைவரிசை வித்தியாசம் இருந்தாக வேண்டும். ஆக நூறு சானல்களை ஒளிபரப்ப நிறைய அலைவரிசைகள் தேவை. இதைத் தான் ஆங்கிலத்தில் Bandwidth என்கிறார்கள். அதாவது அனலாக் சானல்களை ஒளிபரப்ப Bandwidth நிறைய தேவை.
சானல் ஒளிபரப்பாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அலைவரிசையைத் தேர்ந்தெடுத்து, ஒளிபரப்ப முடியாது. அவர்கள் அரசாங்கத்திடம் முறைப்படி விண்ணப்பம் செய்து, வேறு எவரும் உபயோகிக்காத அலைவரிசையை இவர்களுக்கு ஒதுக்குவார்கள். இதை ஆங்கிலத்தில் Spectrum Allocation என்பார்கள். இந்தியாவில் இந்தச் சேவையை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் செய்கிறது(Ministry of Information and Broadcasting). ஒரு அலைவரிசையை தங்களுக்கென உபயோகம் செய்வதற்கு இவர்கள் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு உரிமத் தொகையாக செலுத்தாகியாக வேண்டும்.
ஆக சன் டி.வி போன்ற ஒரு நிறுவனம், 10 சானல்களை ஒளிபரப்ப வேண்டுமெனில், அவர்கள் பத்து அலைவரிசைகளை தங்களுக்கென ஒதுக்கித்தர அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதற்கேற்ற வாறு உரிமத்தொகையும் அத்துணை மடங்கு கூடும். இதெல்லாம் போக, அனலாக் அலைகளில் சிக்னல் நஷ்டம் நிறைய. அதனால் நம் தொலைக்காட்சிக்கு வரும் அலைகளை படமாகப் பார்க்கும் போது துல்லியமாகத் தெரியாது. சரி இதற்கும் செட்-டாப்-பாக்ஸிற்கும் என்ன சம்பந்தம்?
அதற்குத்தான் வருகிறேன். அதற்கு முன்னால் இந்த டிஜிடல் அலைகள் பற்றி சொல்லிடட்டுமா? ஒளி ஒலி அலைகளை டிஜிடைஸ் செய்து அவைகளை எண்களாக மாற்றிடலாம். பயப்பட வேண்டாம். அந்த தொழில் நுட்பமெல்லாம் சொல்லவில்லை. இப்படி டிஜிடைஸ் செய்த எண்களை மாடுலேஷன் செய்து அலைகளாக மாற்றி ஒளிபரப்பலாம். இதற்கும் ஒரு அலைவரிசை உண்டு. அவைகளை ஒரு ஆன்டென்னா கொண்டு டி-மாடுலேட் செய்து மீண்டும் எண்களாக மாற்றிட முடியும். சரி இதனால் என்ன பயன் என்கிறீர்களா? ஒரு சானலில் உள்ள ஒளி மற்றும் ஒலியை இப்படி எண்களாக மாற்றி அலைபரப்ப முடியும். இதிலுள்ள விஷயம் என்னவென்றால், ஒன்றிற்கு மேலாக உள்ள சானல்களின் ஒளி ஒலியை டிஜிடைஸ் செய்து, ஒரே அலைவரிசையில் அலைபரப்பலாம். ஒவ்வொரு சானலுக்கும் ஒரு அலைவரிசை என்ற நிலமை போய் ஒன்றிற்கு மேலாக நிறைய சானல்களை ஒரே அலைவரிசையில் அலைபரப்பலாம் என்றால் லாபம் தானே? அதனால் டிஜிடல் சிக்னல்களை அலைபரப்பத் தேவையான Bandwidth'உம் அனலாகை விட சிறியது தான். மேலும் டிஜிடல் சிக்னலில் சிக்னல் நஷ்டம் குறைவு. அதனால் துல்லியமான படங்களைப் பார்க்கலாம்.
நம் வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அனலாக் சிக்னல்களைத்தான் டிகோட் செய்ய முடியும். இந்த டிஜிடல் அலைகளை டிகோட் செய்யும் திறன் செட்-டாப்-பாக்ஸிற்குத்தான் உண்டு. டி.வி செட்டிற்கு மேல் இதை சுலபமாக வைக்கலாம் என்பதால் இதற்குப் பெயர் செட்-டாப்-பாக்ஸ் என்றமைந்தது. இதுவே இதன் பெயர்க்காரணம்.
எல வெண்ணெய், "செட் டாப் பாக்ஸ் வச்சிருந்தாலும் ஏன் எல்லா எளவு சானலும் வருதுன்னு" இந்தப் பதிவுல சொல்லுதேன் சொல்லிப்புட்டு என்னமோ பாடம் எடுக்குதியேல்லா, வெண்ண?
அந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ளத்தான் இவ்வளவு தொண்டைத் தண்ணி வற்ற சொல்லவேண்டியதாப்போச்சு?
டிஜிடல் சிக்னல்களை கேபிள் ஆபரேடர் இந்த இந்த வீட்டுக்கு இந்த இந்த சானல்களை கொடுக்க முடியும். இந்த மாதிரி, நமக்கு வேண்டிய சானல்களுக்கு மட்டும் செலுத்த வேண்டிய தவணையை செலுத்திப் பார்ப்பதற்குப் பெயர், Pay Per View.
ஆனால், பெரும்பாலான கேபிள் ஆபரேடர்கள் இந்த செட்-டாப்-பாக்ஸை மட்டும் கொடுத்து விட்டு, எல்லா சானல்களையும் சப்ளை செய்து விட்டு, நாம் பார்க்காமலிருக்கும் சானல்களுக்கும் சேர்த்தே சந்தா வசூலிக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யக் காரணமென்ன? இந்த Pay Per View என்ற தொழில் நுட்பத்தை நடைமுறைப் படுத்த இவர்கள் கணிசமான அளவு மென்பொருளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த மென்பொருளை வழங்கும் நிறுவனங்கள் நிறைய ஆய்வு செய்து, இந்த மென்பொருளை கொடுக்கிறார்கள். அதனால் இந்த மென்பொருளின் விலையும் சற்றே அதிகம். இந்தக் காசை மிச்சப் படுத்தத்தான் இவர்கள் நமக்கென்ன வந்தது என்று எல்லா சானல்களையும் கொடுத்து விட்டு, எவ்வளவு செட்-டாப்-பாக்ஸ் விற்றிருக்கிறதோ அவ்வளவு சந்தா தாரர்கள் என்ற கணக்கில் கட்டண சானல்காரர்களுக்கு சந்தா செலுத்துகிறார்கள். அரசாங்கமும் கேபிள் ஆபரேடர்களின் இந்தத் தில்லு முல்லு தெரியாமல் CAS நடைமுறையாக்கப்பட்டுவிட்டது என்று நம்பிக் கொண்டிருக்கிறது? ஆனால் உண்மையில் கேபிள் ஆபரேடர்கள் மக்களை சுரண்டுவதை இதன் மூலம் நிறுத்தவில்லை.
இதனாலெல்லாம், கேபிள் ஆபரேடர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட மக்களின் பரிதாமான நிலை மாறி விட்டதா என்றால், அதான் இல்லை. இதை ஓரளவு போக்கத்தான் புதிதாக வந்திருக்கிறது, DTH முறை. அதாவது Direct To Home. சாடிலைட் வழியாக நேராக வீட்டுக்கே சிக்னல்களை கொண்டு வரும் தொழில் நுட்பம். அது பற்றி அடுத்த பதிவில்.

[தொடரும்]

12 comments:

Divyapriya said...

sema explanation...konja naal lecture raa irundheengalo :P
waiting for the next part...btw, unga veetla epdi? DTH aa illa cable aa?

Vijay said...

\\divyapriya said...
sema explanation...konja naal lecture raa irundheengalo :P\\
நன்றி. லெக்சரர்கள் நிறைய பேரை கடுப்பேத்திருக்கேன். அதனாலயே செக்சரர் ஆகலை.

\\btw, unga veetla epdi? DTH aa illa cable aa?\\
Firs Analog Cable, then switched to Digital Cable and now DTH from Tata Sky :)

Thamira said...

ஸ்கிரீனை விடவும் மிக அகலமாக டெக்ஸ்ட் இருப்பதால் இடது வலது என அலைந்து ஒவ்வொரு வரியையும் படிக்கவேண்டியுள்ளது. டெம்பிளேட் மாற்றவோ/ சரி செய்யவோ செய்தால் வசதியாக இருக்கும். இது ஆலோசனைதான்.

Vijay said...

தாமிரா,
எவ்வளவொ R&D செய்து, இப்போதுள்ள லே அவுட் வைத்திருக்கிறேன். நீங்க ரொம்ப சிரமம் எடுத்துக் கொண்டு படித்ததற்கு நன்றி அன்ட் சாரி. என்னிடம் இருப்பது அகலமான மானிடர் கொண்ட மடிக்கணினி. அதனால், இந்த லே அவுட்டை வடிவமைத்த போது, எல்லாவற்றையும் சுண்டெலியை நகர்த்தாமல் படிக்க முடிந்தது.
லே அவுட்டை மாற்ற முயற்சிக்கிறேன்.

நன்றி,
விஜய்

Divya said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் விஜய்!!

Vijay said...

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி!!

Subbu said...

Thalaiva,
Enna SetTopBox 101 ethavathu Book ezhutha porengala..
Good start..keep going

Vijay said...

\\subbu said...
Thalaiva,
Enna SetTopBox 101 ethavathu Book ezhutha porengala..
Good start..keep going\\

இது வந்து set-top-box பற்றி இல்லை. ஆனால், இந்த set-top-box வைத்து மக்களிடமிருந்து எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கறாங்க என்பது பற்றித் தான். செட் டாப் பாக்ஸ் நல்லதொரு தொழில் நுட்பம் தான். ஆனால், இந்த middlemen படுத்தும் பாடு பற்றிச் சொல்லத்தான் இந்தத் தொடர். தொடர்ந்து படியுங்கள்.!!!

முகுந்தன் said...

ஒரு மாசமா வேலை ஜாஸ்தி.(ஸ்பெயின் மாதிரி இல்லை சிங்கப்பூர்:)) )
அதான் லேட்...
மிக மிக அற்புதமாக (எனக்கு கூட புரியுது!!)எழுதி இருக்கீங்க . ஏதாவது தமிழ் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள் நிறைய பேர் படிப்பார்கள்.

Vijay said...

முகுந்தன்,
கருத்துக்கு நன்றி. பத்திரிகைக்கெல்லாம் அனுப்பும் அளவிற்கு அவ்வளவு professional'ஆவா இருக்கு?

முகுந்தன் said...

அமாம் விஜய், நெஜமாவே நல்லா இருக்கு.....

Anonymous said...

//ஸ்கிரீனை விடவும் மிக அகலமாக டெக்ஸ்ட் இருப்பதால் இடது வலது என அலைந்து ஒவ்வொரு வரியையும் படிக்கவேண்டியுள்ளது. //

நானும் ரெம்ப நாளா இதச்சொல்லணும் என்று நினைத்திருக்கிறேன் விஜய். கோர்வையாக படிக்கமுடியவில்லை.

பெரிய R&D பண்ணிட்டிருக்கீங்க. முகுந்தன் சொன்ன மாதிரி பத்திரிகைக்கு அனுப்புங்க , எல்லோருக்கும் பயன்படும்.