Pages

September 18, 2008

இந்நாள் அவ்வருடம்

செப்டம்பர் ௧௮ 1999. என் வாழ்க்கையில் அது வரை நான் செய்திராத நெடுந்தூரப் பயணம்
தொடங்கியது. கொல்கத்தா நோக்கி பயணப்பட்டேன். சுமார் 2300 கிலோ மீட்டர் தூரம். சென்னை போய் அங்கிருந்து கோரமண்டல் பிடித்து ஒண்ணரை நாள் பயணம் செய்த பிறகு கொல்கத்தா போய் இறங்கினேன். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணத்தின் போது என் கம்பார்ட்மென்டில் ஒருவர் கூட தமிழர் இல்லை. எனக்கு ஏதோ கொஞ்சம் ஹிந்தி தெரிந்திருந்தாலும் மற்றவரிடம் சம்பாஷணை செய்யும் அளவிற்கு தெரியாது. வாழ்க்கையில் 24 நான்கு மணி நேரத்திற்கு மேலாக நான் பேசாமலிருந்தது அன்று தான். அன்று தான் முதலும் கடைசியுமாக மௌன விரதம் அனுஷ்டித்தேன் என்று நினைக்கிறேன். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிரயாணம் ஒரு வித்தியாசமான அனுபவம். காலையில் 9 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறு நாள் மதியம் 2 மணிக்கு கொல்கத்தா சென்றடையும். முதல் நாள் ராத்திரி 11 மணிக்கு விஷாகப்பட்டினம் வரும். This is the last stop in which one can see some tracts of urban civilization. விழித்தெழுந்து பார்த்தால் ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள கட்டாக்கில் ரயில் நின்றுகொண்டிருந்தது.

ஏதோ 30 ஆண்டுகள் பின்னோக்கி பயணப்பட்ட ஓர் உணர்வு. கட்டாக் ஸ்டேஷன்
அழுக்கிலேயே மூழ்கியிருக்கிறது. சாய் (டீ) விற்பவரிடம் அதை வாங்கிக் குடித்தால் என்னென்ன நேரிடுமோ? கடவுளுக்கே வெளிச்சம். மருந்துக்குக்கூட காஃபி கிடைக்கவில்லை. சென்னையில் அக்கா வீட்டில் கட்டிக்கொடுத்த சாப்பாடெல்லாம் முதல் நாளே காலியாகிவிட, கட்டாக்கில் தான் காலை சிற்றுண்டி. நான் பேசும் ஹிந்தி பூரி விற்பவனுக்குப் புரியவில்லை. அவன் பேசும் ஒரியா என் மண்டைக்குள் நுழையவில்லை. என்னத்தையோ புரிந்து கொண்டு 50 ரூபாயை நீட்டினால் சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டான். விசாரித்தபோது தான் தெரிந்தது. அவன் கொடுத்த பூரி செட் வெறும் 4 ரூபாய் தான். ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று இன்னும் 2 பாக்கெட் பூரி வாங்கிக் கொண்டேன்.
கொல்கத்தாவில் இறங்கியவுடன், ஒரு சின்ன அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இவ்வளவு அழுக்காகவும் ஒரு ஊர் இருக்க முடியுமா? எங்கும் எல்லாவற்றிலும் அழுக்கு. அவ்வளவு
டப்பாவான பேரூந்தூக்களை அதற்கு முன் பார்த்ததே இல்லை. வாரத்தில் மனிதர்கள்
எத்தனை நாள் குளிப்பார்கள் எனத் தெரியவில்லை.

கொல்கத்தா என்றதும், எல்லோருக்கும் நினைவு வருவது, ரஸகுல்லா. என்னிடம் கேட்டால் கம்யூனிசம் என்பேன். ரயில் நிலையத்திலேயே என்னை ஒரு 10 கூலிகள் சூழ்ந்து கொண்டார்கள். என் சாமான்களை நானே எடுத்துச் செல்லத் தடை.
सामान उठाना हमारा काम हैअगर आप सामान उठाएंगे तो हम क्या करेंगे ?
"சாமான் தூக்குவது எங்கள் வேலை. அதை நீங்களே செய்து விட்டால் நாங்க என்ன
செய்வோம்". ஆடிப் போயிட்டேன். ஆஃபீஸில் சேர்ந்த முதல் நாளே ஒருவர் என்னிடம், "நீங்க மத்ராஸிலேர்ந்து இங்கே வந்து வேலை பார்க்கறதுனால ஒரு பெங்காலியின் வேலையை அபகரித்துக் கொண்டாய்" என்றாரே பார்க்கலாம். "அடப்பாவிங்களா, என்னவோ நான் கொல்கத்தாவுல போய்த்தான் வேலை பார்ப்பேன் என்று அடம் பிடித்த மாதிரி சொல்லறீங்களே" என்று நினைத்துக்கொண்டேன். இப்படிப்பட்ட வங்காளத்தை விட்டு டாடா வெளியேறுவது ஒண்ணும் எனக்கு வியப்பாக இல்லை.

பெங்காலியில் 'வ'னாவும் 'அ'னாவும் கிடையாது. ஹிந்தியில் எல்லா 'வ'வையும் 'ப' என்றும், எல்லா 'அ'வையும் 'ஒ'வாக மாற்றிவிட்டால் பாதி பெங்காலியாகிவிடும். என் பெயரை பெங்காலி மக்கள் கொலை செய்த மாதிரி அயல்நாட்டவர் கூட கொலை செய்தது கிடையாது. என்னை பிஜோய் என்று தான் அழைப்பார்கள். இதைக் கேட்கவே நாராசமாக இருக்கும். என்ன செய்ய? ஏதாவது சொன்னால் "பிஜோய் டவுன் டவுன்" என்று கொடி பிடித்தாலும் பிடித்துவிடுவார்கள். அதேபோல் 'ச'னாவும் கிடையாது. எல்லாமே, "ஷா"னா தான். சாட்டர்ஜிக்களை ஷட்டொபாத்யாய் என்பார்கள். சென்குப்தாவை ஷென்குப்தோ
என்பார்கள். கங்குலி 50 அடித்தாலே ஆஃபீஸில் விஸில் அடிப்பார்கள்.

ஆனால் கொல்கத்தாவில் என் நண்பனுடன் அடித்த லூட்டி வேறெங்கும் அடிக்கவில்லை.
பின்னொரு முறை மீண்டும் கொசுவர்ர்த்தி ஏற்றுகிறேன்.

18 comments:

Divya said...

கொசுவர்த்தி பதிவு படிக்க இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது விஜய்!

Divya said...

\\அவ்வளவு
டப்பாவான பேரூந்தௌக்களை அதற்கு முன் பார்த்ததே இல்லை. \\


பேரூந்தௌக்களை=பேரூந்து[bus] correcta???

Divya said...

\\ஆனால் கொல்கத்தாவில் என் நண்பனுடன் அடித்த லூட்டி வேறெங்கும் அடிக்கவில்லை.
பின்னொரு முறை மீண்டும் கொசுவர்ர்த்தி ஏற்றுகிறேன்.\\

அந்த லூட்டீஸ் பதிவை சீக்கிரம் போடுங்க:)))

ஜியா said...

குட் கொசுவத்தி....

//சம்பாஷணை// //அனுஷ்டித்தேன் //
வடமொழி ஆர் பெங்காளி??

MSK / Saravana said...

நல்ல கொசு வர்த்தி பிஜோய்..
;)

Ramya Ramani said...

செம்ம இன்டரச்டிங்க் கொசுவத்தி :)

பெங்காலிகளுக்கு "ப" வராது சரிதான்.

என்னோட ஆபீஸ் ட்ரைனிங்க் பேட்ச்ல ஒரு பெங்காலி பையன் இருப்பான். அவன் ஒரு நாள் வாசுதேவன்கிற பையன கேபிடேரியா கிட்ட பார்த்து "ஹே பாசுதேவன் வை ஆர் யூ பான்டரிங்க இன் தி பரான்டா-கிறான்"!!

என்ன சொல்றது நாங்க எல்லாரும் இப்ப கூட சிரிச்சுகிட்டே இருப்போம்

Vijay said...

divya said...
\\அவ்வளவு
டப்பாவான பேரூந்தௌக்களை அதற்கு முன் பார்த்ததே இல்லை. \\

தவறைச் சுட்டிக்காட்டியதற்கு ரொம்ப நன்றி. கண்ணுல வெளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு பார்த்தாலும் சில சமயம் இந்த மாதிரி பிழை ஏற்பட்டு விடுகிறது.

Vijay said...

\\divya said...

அந்த லூட்டீஸ் பதிவை சீக்கிரம் போடுங்க:)))\\

போட்டுருவோம்!!

Vijay said...

\\ ஜி said...
குட் கொசுவத்தி....

//சம்பாஷணை// //அனுஷ்டித்தேன் //
வடமொழி ஆர் பெங்காளி??\\
வடமொழியில் இந்த வார்த்தைகள் உபயோகத்தில் இருக்கிறதா எனத் தெரியலை. ஆனால் தமிழில் இன்னமும் வழக்கில் இருக்கிறது.

Vijay said...

\\saravana kumar msk said...
நல்ல கொசு வர்த்தி பிஜோய்..
;)\\

நன்றி ஷரபண குமார்!! :-)

Vijay said...

\\ ramya ramani said...
செம்ம இன்டரச்டிங்க் கொசுவத்தி :)
\\
நன்றி. என்னாச்சு உங்களுக்கு, திண்ணை எழுதினதுக்கப்புறம் ஆளே காணோன். ஆஃபீஸிலே வேலையெல்லாம் பண்ணச் சொல்லறாங்களா?

முகுந்தன் said...

தூள் தலைவா... லூட்டி பத்தி சீக்கரம் எழுதுங்க

Divyapriya said...

கல்கட்டா, இவ்ளோ அழுக்கு ஊரா? எனக்கு தெரியவே இல்லயே :-(
ஆனாலும் செம எக்ஸ்பீரியன்ஸ் தான் பிஜோய்!!!
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...அதெப்படி? உங்க அனுபவங்க எல்லாமே ஸ்வாரசியமா இருக்கு ;-)

Divyapriya said...

// விஜய் said...

நன்றி ஷரபண குமார்!! :-)//

அப்ப என் பேரு திப்யப்ரியா...கரெக்ட்டா?

Divyapriya said...

//விஜய் said...
\\ ramya ramani said...
செம்ம இன்டரச்டிங்க் கொசுவத்தி :)
\\
நன்றி. என்னாச்சு உங்களுக்கு, திண்ணை எழுதினதுக்கப்புறம் ஆளே காணோன். ஆஃபீஸிலே வேலையெல்லாம் பண்ணச் சொல்லறாங்களா?//

பாவம் பொண்ணு, மாடா உழைச்சு ஓடா தேஞ்சிடுச்சு :-(

Shwetha Robert said...

Intresting flow of writing BIJOY:)))

Vijay said...

\\ divyapriya said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...அதெப்படி? உங்க அனுபவங்க எல்லாமே ஸ்வாரசியமா இருக்கு ;-)\\

"பாவம் புள்ளை அழக்கூடாதேன்னு நாலு பேரு ஏத்தி விடறாங்க. அது கூடத் தெரியாமல், ஐயா என்னவோ இருபத்தியோறாம் நூற்றாண்டின் சுஜாதான்னு நினைச்சுக்கிட்டு ஏதோ கிறுக்கித் தள்ளுறாரு."
இப்படிச் சொல்வது யாராய் இருக்கும்??

Vijay said...

\\shwetha robert said...
Intresting flow of writing BIJOY:)))\\

Thanks a Zillion Sbetha!!