Pages

June 17, 2008

மனைவி ஒரு Microsoft

'மனைவி' யை மையமாகக்கொண்டு தமிழிலே நிறைய படம் வந்திருக்கின்றன. "மனைவி ரெடி", "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "திருமதி ஒரு வெகுமதி", "சம்சாரம் அது மின்சாரம்", "பொண்டாட்டி தேவை" இப்படியாக இன்னும் பல. நான் ஒரு படம் எடுத்தால் இப்படித்தான் படத்துக்கு பெயர் வைப்பேன். 'மனைவி ஒரு Microsoft'. கேளிக்கை வரிவிலக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் ஏன் மனைவியை Microsoft'ஓடு ஒப்பிடுகிறேன் என்பதறுகு சில trailer காட்சிகள் இதோ!!


காட்சி - 1

"எனக்கு கிரிக்கெட்னா உயிர். எந்த ஒரு டீம் விளையாடினாலும் தவறாம பார்ப்பேன்."

"அப்படியா?! எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். நானும் கிரிக்கெட் பார்ப்பேன்"

"Oh Great!. (மனதுக்குள்) அப்பாடா கல்யாணத்துக்கப்பறம் சானல் சண்டை வராது"

சில வருடங்களுக்கு பிறகு!!!

"இந்த எழவெடுத்த கிரிக்கெட் ஓயவே ஓயாதா? எப்பப் பாரு, எவனாவது லொட்டு லொட்டுனு தட்டிண்டிருக்கானுங்க."

"ஏண்டி பொண்ணு பார்க்க வரச்ச நானும் கிரிக்கெட் பார்ப்பேன்னு சொன்னியேடி. இப்ப இப்படி பேசறே?"

"அன்னிக்கு சொன்னேன். இப்ப சொல்லறேன் பிடிக்கலை. எனக்கு கோலங்கள் பார்க்கணும். அபிக்கு பேரக்குழந்தை பொறந்தாச்சா இல்லையான்னு பார்க்கணும்"

Microsoft Windows'உம் டெமோவில் ஒழுங்காக வேலை செய்யும். ஆனால், நாட்கள் பல கடந்த பின்னர், தன் புத்தியைக் காட்டத் தொடங்கி விடும்.

காட்சி - 2

"இப்போ என்ன நடந்ததுன்னு முகத்தை தூக்கி வச்சுண்டிருக்கே"
"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை"
"இல்லையே, உன் முகம் என்ன காரணத்துக்காகவோ வாடியிருக்கே"
"ஒண்ணும் இல்லை"
"இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிண்டு இருந்தே. 10 மார்க் கேள்விக்கு பதில் சொல்லற மாதிரி பேசிண்டு இருந்துட்டு இப்போ எதுக்கு மணிரத்னம் படம் வசனம் மாதிரி பேசறே?"
"ஒண்ணும் இல்லைன்ன. ஒண்ணும் இல்லை. எனக்கு ஒண்ணும் பேசப்பிடிக்கலை"
இதற்குப்பிறகு, என்ன கேட்டாலும் மௌனம் தான் பதில். No response.

நீங்கள் விண்டோஸ் உபயோகிப்பவறாயின் இது ஒரு பழகிப்போன behavior. எல்லாம் ஒழுங்கா work பண்ணிக்கொண்டிருக்கும் போது, திடீர்னு எந்த response'um இல்லாமல் அப்படியே எல்லாம் ஸ்தம்பித்து
விடும்.

Solution: Wait Indefinitely for auto recover mode to take over. Remember there is no reboot here. If you can't want, use the "ctrl+alt+del" key combination to bring things back to normalcy. This key combination might change from model to model :)

காட்சி - 3

"நீ ஊர்ல இல்லையேன்னு, நானே சமைக்கலாம்னு முடிவு பண்ணினேன் தெரியுமா"

"இப்போ என்னத்துக்கு தானே சமைச்சு சாப்பிடணும். ஹோட்டல்ல சாப்பிட்டா உள்ளே போகாதா? நான் வரும் வரைக்கும் சமையல் கட்டுக்குள் போக வேண்டாம்"

எந்த ஒரு மனிவிக்கும், சமையலறை என்பது தன்னுடைய கோட்டை மாதிரி. தன்னைத்தவிர வேறு யாரும் அங்கு ஊடுருவுவதை விரும்ப மாட்டாள்.

Microsoft doesn't prefer other software vendors to support their products.

"இல்லை. இன்னிக்கு நானே(!) சமைத்து சாப்பிடப் போறேன்"

"என்னத்தயேன் பண்ணித் தொலைங்க"

இவ்வளவு வீராப்பா வசனமெல்லாம் பேசிட்டு சமையலறைக்குள் வந்தால், அரிசி பருப்பு உப்பு காரப்பொடி சாம்பார் பொடி இதெல்லாம் எதுவுமே எங்கெங்கே இருக்கென்றே தெரியாது. அட அடுப்பு பத்த வைக்கிற லைட்டர் கூட எங்கே இருக்குன்னு தெரியாது. காய்கறிகளை நறுக்க அறுமாமணை எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும். அட தேங்காய் சட்னி செய்யலாம் என்று புறப்பாட்டல் தேங்காய் உடைக்கும் சுத்தியல் கூட கைக்கு எட்டும் இடத்தில் இருக்காது.

Microsoft keeps everything so secretive. They don't share their code and designs. Everything is a closed world in Microsoft.

காட்சி - 4

"எடி என் ஃப்ரெண்டு மனைவி ஊருக்குப் போயிருக்காளாம். அவனுக்கு இன்னிக்கு நம்ம வீட்டுல தான் டின்னர். எல்லருக்கும் சேர்த்து சமைத்து விடு"

"ஏன் உங்க அந்த பாழாப்போற ஃப்ரெண்டுக்கு ஊர் உலகத்துல இருக்கற எந்த ஹோட்டலும் கண்ணுல தென்படலியா. நான் என்ன இங்கே சத்திரமா வச்சு நடத்துறேன். வற்ரவன் போறவனுக்கெல்லாம் பொங்கிப்போட"

Microsoft develops applications only for Windows. MS applications don't run on any other Operating systems. No compliance with other Operating systems.

காட்சி - 5

"இப்போ என்ன தான் சொல்ல வற்ரீங்க. உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும். எனக்கு ஒண்ணுமே தெரியாது அவ்வளவுதானே."

"நான் அப்படிச் சொல்லவில்லைடி. உன்கிட்டயும் நிறைய குறைகள் இருக்கு. திருத்திக்கோன்னு சொல்லறேன்."

"போதும் போதும். என்னைப்பத்தி இவ்வளவு சொன்னப்பறம் நான் எதுக்கு இங்கே இருக்கணும். நான் அப்பா வீட்டுக்கு போகிறேன்"

"ஐயையோ கண்ணு. இப்படி கோவிச்சுக்காதேம்மா. நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை. எனக்கு அப்பறம் வாழவே பிடிக்காது. நான் சொன்னதெல்லாம் தப்பு. எனக்குத் தான் உன்னைப் புரிஞ்சுக்கத் தெரியலை"

"அப்படி வாங்க வழிக்கு"

No matter, how many people are disgusted with Windows, how many developers hate Microsoft, how many bugs exist with Microsoft products, how many times windows hangs, how many times your hard disk gets corrupted, how many times invaluable data gets lost, how many times your computer is infected with viruses, MICROSOFT IS IRREPLACEABLE. There isn't just no life without Microsoft. So is without a wife.

இப்போ சொல்லுங்க. மனைவி ஒரு Microsoft'ஆ இல்லையா??

17 comments:

முகுந்தன் said...

hahaha ...

same blood....

கார்த்திகா said...

Abstra thinking but fanciest.

கார்த்திகா said...

Know about Bharathi, no way, u should check again my blog.

Ramya Ramani said...

என்ன ஒரு comparison டா சாமி...பின்னிட்டேள்!உங்க Wife படிச்சிட்டாங்களா? Translate வேணா பன்னிதரேன் :P

Vijay said...

\\Ramya Ramani said...
என்ன ஒரு comparison டா சாமி...பின்னிட்டேள்!உங்க Wife படிச்சிட்டாங்களா? Translate வேணா பன்னிதரேன் :P\\
நான் என் மனைவிக்கு படிச்சுக் காட்டிட்டுத்தான் போஸ்ட் செய்தேன். :)

Ramya Ramani said...

Cool :))

Divya said...

superuuuuuuuuuuuuu,

அனுபவஸ்தர் ஒருத்தர் சொல்றப்போ எவ்வளவு உண்மைகள் எல்லாம் வெளில வருது:)))

Divya said...

Comparioson is ultimate Vijay:)))

Divya said...

\\நான் என் மனைவிக்கு படிச்சுக் காட்டிட்டுத்தான் போஸ்ட் செய்தேன். :)\\

இது....இது தான் நல்ல புள்ளைக்கு அழகு,

இப்படி ....இப்படிதான் இருக்கனும்:))

Vijay said...

\\Divya said... அனுபவஸ்தர் ஒருத்தர் சொல்றப்போ எவ்வளவு உண்மைகள் எல்லாம் வெளில வருது:)))\\
நான் முதலில் ஒரு DISCLAIMER ஒண்ணு போட்டிருக்கணும். இங்கு வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே. "என் வீட்டில் நடப்பவையோ நடந்தவையோ அல்ல" அப்படின்னு.

Shwetha Robert said...

the experience talkings, super:)))

Comparison is very correct in many ways, good one Vijay:))

Ramya Ramani said...

\\ \\Divya said... அனுபவஸ்தர் ஒருத்தர் சொல்றப்போ எவ்வளவு உண்மைகள் எல்லாம் வெளில வருது:)))\\
நான் முதலில் ஒரு DISCLAIMER ஒண்ணு போட்டிருக்கணும். இங்கு வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே. "என் வீட்டில் நடப்பவையோ நடந்தவையோ அல்ல" அப்படின்னு.\\

அப்படி இருந்திருந்தா இப்படி அனுபவிச்சு எழுதிருந்திருப்பீங்களா? LOL :)

Vijay said...

\\Ramya Ramani said...
அப்படி இருந்திருந்தா இப்படி அனுபவிச்சு எழுதிருந்திருப்பீங்களா? LOL :)\\
நான் அனுபவிச்சு எழுதிருக்கேன்னு எப்படி சொல்லறீங்க. அந்த மாதிரி feeling எல்லாம் வேற வெளிப்படறதா. பாவம் ஒரு கணவனோட கஷ்டத்தை சொன்னா, இந்த பொண்ணுங்களுக்கு அது காமெடியாப் படுது.

ஜி said...

:)))

//நான் என் மனைவிக்கு படிச்சுக் காட்டிட்டுத்தான் போஸ்ட் செய்தேன். :)//

Anni innum poori kattai gamela specialist aagala pola ;)))

Vijay said...

" ஜி said...
:)))

//நான் என் மனைவிக்கு படிச்சுக் காட்டிட்டுத்தான் போஸ்ட் செய்தேன். :)//

Anni innum poori kattai gamela specialist aagala pola ;)))"

ஜி, வருகைக்கு மிக்க நன்றி.
எனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி :)

Unknown said...

Good comparison. Me and my husband enjoyed it....

Vijay said...

Thanks a lot Lalitha.

Vijay