Pages

June 19, 2008

ஆழ்வார்க்கடியான் தசாவதாரம் பார்க்கிறான்

வைகுண்டத்திலே பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆழ்வார்க்கடியானிடம், யாரோ தசாவதாரம் பற்றி ஏதொ சொல்லித் தொலைக்க, மஹாவிஷ்ணுவிடம்கூட சொல்லிக்கொள்ளாமல் பூலோகம் வந்து விடுகிறான், தசாவதாரம் பார்க்க. (யாரிந்த ஆழ்வார்க்கடியான் என்று கேட்பவர்கள் முதலில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு இதைப் படிப்பது நல்லது)


நமது கதையின் நாயகன், "ஆழ்வார்க்கடியான்", பூலோகத்தில் தரையிறங்கிய இடம், சிங்காரச் சென்னை. நேரே தசாவதாரம் திரையிடப்பட்டிருக்கும் அரங்கம் நோக்கி விரைகிறாரன். சென்னை வாழ் மக்களுக்கெல்லாம் இவனைப் பார்த்தால் ஏதோ வேறொரு கிரகத்திலிருந்து வந்திருப்பவன் போல் எண்ணம். குட்டையாக தொந்தியுடன், முன் குடுமியும் கையில் தடியும் ஏந்தி நடந்தால் சென்னையில் யாருக்குத்தான் வியப்பு வராது?அதிலும் உடம்பு முழுக்க திருநாமப்பட்டை வேறு.


"ஓம் நமோ நாராயணாய!"

படம் ஆரம்பித்தவுடனேயே பெருமாளை பெயர்த்தெடுக்கும் பொழுது, "அடேய் பாதகர்களா! நாராயாணனைப் பெயர்த்தெடுக்கிறீர்களே! உங்கள் குலம் நாசமைடையும். நாராயாணனைக்காக்க பூலோகத்தில் எவருமே இல்லையா" வைணவத்தைக் காக்க ரங்கராஜன் நம்பி தோன்றியதும், "ஆஹா ஓர் மாவீரன் உதித்து விட்டான். அன்று இந்த திருமலை நம்பி இருந்தான். இன்று ரங்கராஜன் நம்பி. பெருமாளின் மஹிமையே மஹிமை"


குலோத்துங்கன் சோழன், "ரங்கராஜன் நம்பி, சிவனே முழு முதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டு ஓம் நமச்சிவாய என்று சொல் உன்னை விட்டுவிடுகிறேன்"
"அடேய் குலோத்துங்கா, உன் முப்பாட்டனாருக்கு முப்பாட்டன், மஹாசமுத்திரம்போல் அலையெழுப்பும் ஏரிக்கு வீரநாராயண ஏறி என்று பெயர் வைத்தாரே. சைவமும் வைணவமும் தழைக்க வேண்டும் இத்தவத்திருநாட்டிலே என்று ஆசைப்பாட்டரே. அவர் கீர்த்திக்குத் தீங்கு விளைவிக்காதேடா. உன் குலம் நாசமடையும். இது ஒரு வீர வைஷ்ணவனின் சாபம். ரங்க ராஜன் நம்பி எக்காலத்திலும் சைவத்திற்கு துணை போகாதே"

"யோ யாருய்யா அது படம் பாக்க வுடாம நொய் நொய்னு கத்திகினு. கம்முனு குந்துயா"


"பூலோகத்தில் வைணவம் அழிந்து விட்டதா? சைவர்களை எதிர்க்க ஒருவர் கூட இல்லையா? இப்படி வைணவத்தை எதிர்க்கும் இச்சித்திரத்தைப் பார்க்க வேண்டுமா?அடேய்! நாராயணனைப் பெயர்த்தெடுத்து கடலில் சேர்க்கிறார்கள். நீங்கள் என்னை இதெல்லாம் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கச் சொல்கிறீர்களா?" என்று சண்டைக்குச் செல்ல, அருகிலிருப்பவர்கள் அவனை சமாதனம் செய்து படத்தை பார்க்க வைக்கின்றனர்.

ஆழ்வார்க்கடியானுக்கு ஆங்கிலம் புரியாதலால் அருகிலிருப்பவரிடம், அர்த்தம் கேட்க அவன் அமெரிக்காவில் நடப்பதின் சாராம்சம் சொல்கிறான். "இத்த பாருய்யா இந்தாருக்காருல்லா விஞ்ஞானி கோவிந்து, இந்தாளு தான் உலகத்தையே காப்பாற்றதுக்கொசரம், இவ்வளவு ஓட்டம் ஓடுதாரு"

"என்ன இந்தப் பையனின் பெயர் கோவிந்தனா? ஆஹா என் பெருமாள் காக்கும் கடவுள் அல்லவா. அதனால் தான் இந்தப் பையனும், காக்கும் தெய்வமைய்யா"

முகுந்தா முகுந்தா என்று அசின் உருகும் போது ஆழ்வார்க்கடியானின் மனமும் சேர்ந்து உருகுகிறது. பக்திப் பரவசத்தில் மூழ்கித் திளைக்கிறான். "யாரிந்தக் குமரி, கண்ணனை நினைத்து என்னமாய் உருகுகிறாள்! ஒரு சாயலில் குந்தவைபிராட்டியார் போலவே இருக்கிறாளே"

கிருஷ்ணவேணிப்பாட்டி கிறுமி டப்பாவை பெருமாள் சிலைக்குள் போடுவதைப்பார்த்து, "பெருமாளே நீர் தான் உலகை ரட்சிக்க வேண்டும்" என்று வேண்டுகிறான். கிறுமி டப்பாவை அபகரிக்க வரும் க்ரிஸ் ஃப்லெட்சர் குறி தவறி யானையின் காலிலே சுட, யானை மதம் பிடித்தோடுகிறது. ஆழ்வார்க்கடியானுக்கு இதைப்பார்த்து தன்னை ஈழத்திலே துரத்திய யானை நினைவுக்கு வர, "அய்யோ யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடுங்கள் ஓடுங்கள்" என்று அலறுகிறான். "அய்ய. இது படம்யா. தொண தொணங்காம குந்துய்யா.

பெருமாளைத் தூக்கிக்கொண்டு அசினும் கமலும் ஓடும் போது, "ஆண்டாளே பெருமாளைக் காப்பாற்று. உனக்குக் கோடி புண்ணியமுண்டாகும்"

அசினை மானபங்கப்படும் காட்சியில், "கிருஷ்ணா. திரௌபதியின் மானம் காத்த ரக்ஷகா, உன் திருவுருவச்சிலையைக் காப்பாற்ற முனையும் இந்த அபலயை நீ தான் காக்க வேண்டும்" என்று ஓலமிட, அங்கே காட்சி தரும் வின்சென்ட் பூவராகனைப் பார்த்ததும், "ஆஹா, எம்பெருமானின் லீலையே லீலை. ஷ்யாமள வர்ண கிருஷ்ணனல்லவா மார்வேடத்தில் வந்து இப்பெண்ணின் மானம் காத்த கடவுள்"

அவ்வப்போது கடவுள் பற்றி விஞ்ஞானி கமலுக்கு சந்தேகம் வரும் பொழுது, "கோவிந்தனென்று நாராயணனின் பெயர் வைத்துக்கொண்டு, பெருமாள் இருக்கிறாரா என்று கேட்கிறாயே"
இறுதிக்காட்சியில் உலகை கிறுமி ஆயுத்தத்திலிருந்து காப்பாற்ற ஷிங்கன் நரஹஷி அமெரிக்க வில்லனிடம் மோதும் போது, "ஹிரண்யகஷிப்பை வதம் செய்த நரசிம்மர் அல்லவா அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்".

"அவ்வப்போது கடவுள் இருக்கிறாரா இருக்கிறாரா என்று கேட்டாலும், நடக்கும் காட்சிகள் எல்லாமே எம்பெருமானின் லீலைகள் போன்றே இருக்கிறதே. கோவிந்தன் ஓட்டிச் சென்ற வாகனம் மட்டும் விபத்துக்குள்ளாகாவிட்டால், இந்த அசுரனிடம் அகப்பட்டிருப்பார்களே. உலகை அழிவிக்கும் ஆயுத்தத்திலிருந்து காப்பாற்ற உப்பு நிறைய தேவைப்படும் சமயத்தில், கடலே பொங்கியெழுந்து கிறுமிகளனைத்தையும் அழித்து, ஆஹா இதுவல்லவோ பெருமாளின் செயல். ஆஹா இதோ அவரும் மேலே வந்து விட்டாரே. பெருமாளே ஜகத்ரட்சகா, உன்னை கடலுக்குள் தள்ளியவர்களை தண்டித்து, முப்பிறவியில் உன் திருநாமத்தை ஜபித்தே மாண்ட ரங்கராஜனையும் அவன் மனைவியையும் இப்பிறவியில் உன் திருவடிகளிலேயே மீண்டும் இணைத்து விட்டாயே. உன் லீலைகள் எல்லாம் சாமான்னிய மனிதனுக்கு புரிவதில்லையப்பா. உலகம் பிழைக்க நீ மீண்டும் பத்து அவதாரங்களெடுத்து மக்களைக் காப்பாற்றினாயே. நீயல்லவோ வாழும் தெய்வம்.

ஓம் நமோ நாராயணாய!.

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.

கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்

ஞானக்கண்ணில் பார்த்தால் யாதும் சுற்றம் தான்

"ஹலோ என்ன இது, இன்னம் பாட்டை முணுமுணுக்கறத நிறுத்தலியா?என்னால தூங்கவே முடியலை. உங்களத் தான்"

"யாரடா அவன்? முட சைவனா. என்னை ஏன் இப்படி ஆட்டுகிறீர்கள்?"

"ஹ்ம்ம் யாரும் இங்க மூடனும் இல்லை சைவனும் இல்லை. தசாவதாரம் பார்த்துட்டு வந்து இப்படியா தூக்கத்துல புலம்பறது. எழுந்திருங்க. எழுந்திருங்க"

"நான் எங்கே இருக்கேன்? ஆழ்வார்க்கடியான் எங்கே?வைகுண்டம் போயிட்டானா"

"ஹ்ம்ம் நீங்க இப்படி பேசிண்டிருந்தா கீழ்ப்பாக்கம் போக வேண்டியது தான்.போதும் இந்த தசாவதாரப் பிராதபத்தை தூக்கத்திலும் புலம்பணுமா. பேசாம தூங்குங்க"

ஓ! நான் கண்டது கனவா. சரி சரி தூங்கு"

"ஆமாம், என் தூக்கத்தை கலச்சுட்டு இப்ப குரட்டை விடறதைப் பாரு"

"புலம்பாதே தூங்கு. நாளைக்கு மீண்டும் இன்னொரு தடவை பார்க்கணும்"

இன்னொரு தடவையா....


24 comments:

Ramya Ramani said...

திரு விஜய் அவர்களே! தசாவதாரம் பார்த்துவிட்டு, ஆழ்வார்க்கடியான் போல் உங்களை கற்பனை செய்து,பூரி கட்டை அடி வாங்கியதை அழகாக கூரியதற்காக பாராட்டபடவேண்டியது :P

முகுந்தன் said...

நீங்களாவது தூக்கத்தில் உளறுகிறீர்கள் . நான் .......

பட்டனை மட்டும் பிய்த்தால் சட்டை கிடையாது ,
சட்டையை மட்டும் பிய்த்தால் பட்டன் கிடையாது ,...


முகுந்தா.... முகுந்தா.....

Vijay said...

முகுந்தன்,
படம் பார்த்து விட்டு வந்த தாக்காம் இன்னும் தீரவில்லை. இன்னும் ஒரு 3- 4 தடவை கண்டிப்பாகப் பார்ப்பேன்.

Vijay said...

" Ramya Ramani said...
திரு விஜய் அவர்களே! தசாவதாரம் பார்த்துவிட்டு, ஆழ்வார்க்கடியான் போல் உங்களை கற்பனை செய்து,பூரி கட்டை அடி வாங்கியதை அழகாக கூரியதற்காக பாராட்டபடவேண்டியது :P"
என் மனைவியைப் பற்றி உங்களுக்கு இப்படியொரு அப்பிப்ராயம் இருக்கிறது என்று என் மனவிக்குத் தெரிந்தால் நிஜமாகவே பூரிகட்டையாவதாரம் எடுத்து விடுவாள்

முகுந்தன் said...

விஜய்,
எனக்கு கமல் ரொம்ப பிடிக்கும்...
ஆனால் இந்த படத்தில் எதோ குறை , என்னவென்று தெரியவில்லை...
தசாவதாரம் .... ஹ்ம்ம் ....

Ramya Ramani said...

:)) Sollidunga appa..edho ennala mudinja udhavi

Vijay said...

Mukundan, I don't see any logical flaw in this movie. I was riveted to my seat for the first half. The second half was a bit slow, until the Oh Sanam song. From there it again took off like anything and the ultimate substance was the Tsunami. Really amazing. The only disturbing aspect was the Kalifulla Khan and the Sardarji, who didn't fit into the actual line of story. But for that it was a too good a entertaining movie. I am definitely going to see this a few more times :)
At this is the last time, you could possibly see Asin in Tamil movies :(
Vijay

முகுந்தன் said...

Vijay,

I would not watch this movie...

Just for the sake of commercial elements or to prove wether god is there or not, these guys have
kindled the memories of Tsunami which is not acceptable to me.
just think how the people who were affected by this would feel.
I have a friend who has lost his relatives in tsunami and
i heard from him about his feelings.
it is unbearable....

முகுந்தன் said...

I would not watch it again...

Vijay said...

Hi Mukundan,
Your point is also Valid. Kamal has made use of Tsunami, which was such a destructive force to his use. If we look at the people who were worst affected with this Tsunami, then seeing this movie would re-kindle that nightmarrish day.
Vijay

ஜி said...

Ungaludaiya Ponniyin selvan paththuna posta munnaalaiye Ramya koduthirunthaanga... appave padichirunthen... Nice novel... will read it again... :))

About this post.... nice one... I also saw Azvarkadiyaan in my imagination while watching this movie :))

And this movie is a gud entertainer... but couldn't watch for the second time :(((

Vijay said...

\\ஜி said...
About this post.... nice one... I also saw Azvarkadiyaan in my imagination while watching this movie :)) \\
ஜி, வருகைக்கு நன்றி.
நிஜமாகவே ஆழ்கார்க்கடியான் இப்படத்தைப் பார்த்தல் எப்படியிருந்திருக்கும்!!

Shwetha Robert said...

you have given link to my Blog in your side bar????
anna konjam unga kaalu katunga :)))
remba nanri Vijay:-)

முகுந்தன் said...

I too noticed the link for my blog.
Thanks Vijay..

Vijay said...

Shwetha and Mukundan,
யாம் பெற்ற இன்பம் பெற வேண்டாம இவ்வையகம்? அதான் நான் படிக்கும் பதிவுகளை மற்றவரும் படிக்கத்தான் இந்த லின்க்

Vijay

ஜெபா said...

hi friends..

jebamail.blogspot.com

this is my blog...

visit...

keep touch with me....

thank you...

கார்த்திகா said...

கற்பனை என்கிற பேர்-ல கதையையே சொல்லிட்டீங்களே. நல்லா இருக்கு. அது சரி. உங்க மனைவி கிட்ட இன்னொரு தடவை பார்க்கணும்-னு சொன்னது படத்தையா? கனவையா?

Ramya Ramani said...

விஜய் ப்ளொக்ரோல் எல்லாம் பண்ணிடீங்க..தாங்க்ஸ். நான் உங்கள Refer பண்ணிருந்த Link பெயரையே மாத்திட்டேன்!

தாரணி பிரியா said...

நன்றி விஜய் என்னோட வலைப்பூவும் கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கு சொன்ன முதல் ஆளு நீங்கதான் மிக்க நன்றி

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

//முகுந்தன் said...
நீங்களாவது தூக்கத்தில் உளறுகிறீர்கள் . நான் .......

பட்டனை மட்டும் பிய்த்தால் சட்டை கிடையாது ,
சட்டையை மட்டும் பிய்த்தால் பட்டன் கிடையாது ,...


முகுந்தா.... முகுந்தா.....//

முகுந்தா முகுந்தா அப்படின்னு அசின் உளறதால நீங்க இப்படி ஆயிட்டங்கீளா? \\


//விஜய் said...
முகுந்தன்,
படம் பார்த்து விட்டு வந்த தாக்காம் இன்னும் தீரவில்லை. இன்னும் ஒரு 3- 4 தடவை கண்டிப்பாகப் பார்ப்பேன்.//


யெஸ். 10 கமலை பார்க்க ஒரு 2 தடவை. முதல் 10 நிமிடங்களுக்காக 1 தடவை. தொழில்நுட்பத்தை ஆராய ஒரு தடவை. அப்புறம் நம்ம அசினக்கா, மல்லிகாக்கா, ஜெயபிரதாக்கா இவங்களுக்காக ஒரு தடவை. இப்படி பாத்துகிட்டேயிருக்கலாமே

முகுந்தன் said...

//முகுந்தா.... முகுந்தா.....//

முகுந்தா முகுந்தா அப்படின்னு அசின் உளறதால நீங்க இப்படி ஆயிட்டங்கீளா? //

என்னது.... ? சிருபிள்ளையட்டமா...?


நிச்சயமா இல்லைங்க ...
அந்த பாட்டு கேட்கும்போது
எனக்கு நல்ல பஜன் கேட்பது
மாதிரி தான் இருக்கு :-)

Vijay said...

ஹலோ தாரணிபிரியா,
வருகைக்கு ரொம்ப நன்றி.
நானும் முகுந்தா முகுந்தா பாட்டை பஜனை பாட்டு லிஸ்டில் சேர்த்துவிட்டேன். இந்த வருட மார்கழி மாத பஜனைப் பாட்டில் இந்தப் பாட்டு இடம் பெற்றால் கூட அச்சரியம் இல்லை.
ஆனால் ஒரு பக்திப் பரவசத்தில் பாடும் பாட்டை நாம் பஜனைப் பாட்டு லிஸ்டில் சேர்ப்பதே இந்தப் பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தான். ஏற்கனவே பெண்களுரில் லகானில் வரும் ஓஹ் பாலனுஹாரே பாட்டை கோவில் ஒலி பெருக்கிகளில் கேட்க முடிகிறது :)

Subbu said...

Vijay,
Your description can be well taken for Lollu Sabha spoof ;)
or Crazy mohan's next drama.

Subbu