Pages

June 03, 2008

மீண்டும் எங்கள் வீட்டில் அழுகை ஆரம்பம்

ஐ.பி.எல் மூலம் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ இல்லையோ, எனக்கு நிறைய லாபம். நிதமும் ஒரு த்ரில்லர் படம் பார்க்கும் எஃபெக்டோடு கிரிக்கெட் பார்க்க முடிந்தது. ஒருவழியாக அபியும் கலையரசியின் அழுகையும் இவ்வளவு நாள் இல்லாமலிருந்தது. ஏதோ திருவிழா முடிந்த ஊர் போல் கிரிக்கெட் இல்லாமலிருப்பது மனதை உறுத்தித் தள்ளுகிறது. இதாவது பரவாயில்லை, வீட்டில் மறுபடியும் கோலங்களும் அரசியும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
மெகா சீரியல் தயாரிப்பாவர்கள், ஐ.பி.எல்லால் ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள். அவர்களது டி.அர்.பி ரேட்டிங் எல்லாம் ரொம்பவே குறைந்து போயிருந்தது. இப்போது ஐ.பி.எல் முடிந்ததும், "எங்க சீரியலை இவ்வளவு நாள் பார்க்காம இருந்தீங்கள்லடா! இந்தா பிடி, அடுத்த சில எபிசோடுகளுக்கு அழுது குளியுங்கடா" என்று சாபம் விட்டுவிட்டார்கள்.
இனி, வீட்டுக்குள் நுழையும் போதே என்றுமே நிறைவடையாத கோலங்களையும், கதையே இல்லாமல் ஜௌ மிட்டாயாக நீளும் அரசியையும், பார்த்தாக வேண்டும்.
சீக்கிரமா அடுத்த ஐ.பி.எல் எபிசோடைக் கொண்டாங்கப்பா!!!

2 comments:

Divya said...

\\"எங்க சீரியலை இவ்வளவு நாள் பார்க்காம இருந்தீங்கள்லடா! இந்தா பிடி, அடுத்த சில எபிசோடுகளுக்கு அழுது குளியுங்கடா" என்று சாபம் விட்டுவிட்டார்கள்.\\

ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகிருக்கிறீங்க போலிருக்கு:)))

gayathre said...

unakku serial pudikatti nee parkathey.cricket evalo perukku(wives,moms,etc.,) allergy theriyuma.but veetla irukkara cricket "fans" tholai thangama,sakichukittuthan irukkanga.