Pages

April 07, 2005

திரையில் உலர்ந்த கவிதைகள்

சில அற்புதமான கவிதைகளுக்கு நல்ல இசை சேர்த்தால், அந்த இசை அதில் மறைந்திருக்கும் கவிதை வரிகளை வெகுவாகவே overshadow செய்த்துள்ளன. அப்படி இசையால் overshadow செய்யப்பட்ட சில கவிதைகள் இங்கே.

அதனால் இந்த blog'க்கு திரையில் மலராமல் உலர்ந்த கவிதைகள், என்று பெயரிட்டுள்ளேன்.


படம்: ஒரு தலை ராகம்

கவிஞர்: டி.ராஜேந்தர்


இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம்.


நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப்பார்க்கிறேன்,

வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்.


வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொட்டுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்,

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப்பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி, உலகை நான் வெறுக்கிறேன்.


உளமறிந்த பின் தானோ, அவளை நான் நினைத்தது,

உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக்கொண்டு, கவிதை நான் வடிப்பது

ஒரு தலையா காதலிலே, ஏத்தனை நாள் வாழ்வது.


அதே படத்திலே இடம் பெற்ற இன்னொரு பாடல். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாடல் hit ஆன அளவிற்கு, மேலே உள்ள பாடல் ஹிட் ஆக வில்லை.


வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது

வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத்தேடுது

ஏதேதோ ராகம், என்னாளும் பாடும்,

அழையாதார் வாசல் அலை வைத்து ஓடும்


பாட்டுக்கொரு ராகம், ஏற்றி வரும் புலவா,

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை,

உனக்கேன் ஆசை கலைமகள் மேலே


என்ன சுகம் கண்டாய் இன்று தொடர்ந்து,

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை என்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே.


மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட


வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது

வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத்தேடுது

ஏதேதோ ராகம், என்னாளும் பாடும்,

அழையாதார் வாசல் அலை வைத்து ஓடும்


நமக்கெல்லாம் டி.ராஜேந்தரை அடுக்கு மொழி வசனம் எழுதும் ஒரு வசன கர்த்தாவாகத்தான் தெரியும். அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மாபெரும் கவிஞனை நிறைய மக்களுக்கு தெரியாது.


இன்னும் சில பல உலர்ந்த கவிதைகள் அடுத்த blog'இல் பார்ப்போம்.

1 comment:

Unknown said...

இது குழந்தை பாடும் தாலாட்டு....பாடலைக் கேட்ட கவியரசு கண்ணதாசன் டி.ராஜேந்தர் அவர்களை அழைத்து” தம்பி இது போல ஒரு பாடலை என்னால் எழுத முடியாது. நான் இதுவரை எழுதிய எல்லா பாடல்களுமே இந்த உன் ஒரு பாட்டுக்கு ஈடாகாது” என்று பாராட்டினாராம்!!