Pages

March 26, 2010

சபாட்டிகல் விடுமுறை

நான் முதலில் வேலை பார்த்த நிறுவனத்தில் சபாட்டிக லீவு (Sabbatical) என்ற சலுகை இருந்தது. வேலை பார்க்கும் போது, மேலே படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் இந்தச் சலுகையை உபயோகப் படுத்திக்கொண்டு, இரண்டு மூன்று வருடங்கள் படித்து முடித்து விட்டு, மீண்டும் நாம் பிடுங்கிக் கொண்டிருந்த ஆணியை, ஐ ஆம் சாரி, பார்த்துக் கொண்டிருந்த அதே வேலையைத் தொடரலாம். ரிஸெஷ்ஷன், ஸ்லோடவுண் என்ற பெயர்களைத் தெரிந்திராத பொற்காலம் அது. சில பெண்கள் குழந்தை வளர்ப்புக்காகக் கூட சபாட்டிகல் எடுத்துக் கொண்டு போய் வந்திருக்கிறார்கள். வேறெந்த விஷயங்களுக்காகவெல்லாம் இச்சலுகையை உபயோகப் படுத்திக்கொள்ளலாம், தெரியவில்லை.

சொல்ல வந்ததைச் சொல்லாமல் வேறென்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன். விண்ணைத் தாண்டி வாருவாயா கூட்டிப் போகவில்லையென்றால், நான் வாசப்படி தாண்டிருவேன் என்று காயத்ரி பயமுறுத்தினாள். சிம்பு படங்கள் யாவும் திருட்டு வி.சி.டி.யில் கூடப் பார்க்க லாயக்கிலாதவை என்று நினைப்பவன் நான். விஜய் கூட ஜோடி சேர்ந்த பிறகே த்ரிஷா ரசிகர் மன்றத்தைக் கலைத்து விட்டேன். படத்தைத் தியேட்டரில் போய்ப் பார்ப்பதற்கு கௌதம் மேனனும் ரஹ்மானுமே ஒரு மாதிரியான மோடிவேஷன். தொழில் நுட்ப வளர்ச்சியின்மையால், கைபேசியில் பேசும் போது முகம் தெரியாததனால், முகத்தைச் சுளித்துக் கொண்டு “போகலாம்” என்றேன்.

கதையென்னவோ, ஹைதர் அலி காலத்துக்கும் பழமையான காதல் கதை தான். அம்பிகா அமராவதி, சலீம் அனார்கலி, ரோமியோ ஜூலியட் போல் வலி நிறைந்த காதல் கதை. வித்தியாசமாகச் சொல்லியிருக்கோம் என்று விளம்பரப் படுத்துகிறார்கள். ஆனால் என்ன வித்தியாசம் என்று நானும் கடைசி வரை தேடிப் பார்த்தேன். என் மூளைக்கு ஒன்றும் எட்ட வில்லை. ஆலப்புழை அழகாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ஆலப்புழை காட்சிகள் வரும்போது, காயத்ரியின் காதில் விழாமல், மனதுக்குள்ளேயே “வாவ்” சொல்லிக் கொள்வேன். உறக்கச் சொன்னால், “பார் எவ்வளவு அழகா இருக்கு. இன்றே, இல்லை இல்லை இந்த க்ஷணமே அங்கே போக வேண்டும்” என்பாள். அவள் சொந்த ஊர் ஆலப்புழை. மாயை எப்போதுமே அழகாகத் தானிருக்கும். அதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை கசக்கும் என்று பட்டினத்தார் சொன்னது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படத்தில் என்னைக் கவர்ந்தது கேமராவும், உடையலங்காரமும் தான். முகங்களை கிட்டத்தில் காட்டி, பின்னாலுள்ளனைத்தையும் டி-ஃபோகஸ் செய்து நிறைய டெப்த் ஆஃப் ஃபீல்டு கொடுத்திருக்கிறார் கேமரா மேன். அவருக்குப் பாராட்டுகள். கண்களைக் கூச வைக்காமல் காஷுவல் உடைகள். ஒரு குச்சிக்குப் புடவை கட்டிவிட்டால் கூட அழகாகத் தானிருக்கும். த்ரிஷா, கேட்க வேண்டுமா? அம்சமாகவே இருக்கிறது. விஜய், விஷால் போன்றவர்களின் படங்களுக்கு உடையலங்காரம் செய்பவர்கள் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.

ரஹ்மான் இசை பற்றி சொல்லவே வேண்டாம். ஆரோமளே பாட்டில் வரும் மெட்டாலிக் கிடாருக்காகவே ரிபீட் மோடில் போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஏன் இப்படி யானை பிளிறும் சத்தத்தில் கத்த வைத்திருக்கிறார் தெரியவில்லை.

திரும்பத் திரும்ப “நான் ஏன் ஜெஸியைக் காதலிக்கணும்” என்று சிம்பு கேட்கும் போதெல்லாம், “ஏன்னா அவ தாண்டா ஹீரோயின்” என்று கத்த வேண்டும் போலிருந்தது.

சில விமர்சனங்கள் ஆஹா ஓஹோ’வென்று கொண்டாடுகின்றன. சில விமர்சனங்கள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்கின்றன. நாம் செய்யும், செய்ய நினைக்கும் காரியங்களை படத்தில் வரும் பாத்திரங்கள் செய்தால், அல்லது நம்முடைய குணங்களை ஒத்த ஒரு பாத்திரத்தைப் படத்தில் பார்த்தால் அப்படம் நம் மனதில் தங்கி விடும். எல்லோருக்கும் எப்படியோ, நான் ரசித்த படங்கள் அனைத்தும் இந்த ரகம் தான். ஆனால் வி.டி.வி’யில் அப்படியெந்த பாத்திரமும் என்னோடு ஒத்துப் போகவில்லை.

“வாழ்க்கையில் காதலின் வலியை உணர்ந்தவர்களால் தான் இப்படத்தை முழுமையாக ரசிக்க முடியும்” என்றொரு விமர்சனம் படித்தேன். படம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் போலுள்ளது. இரண்டாம் முறை பார்க்கும் போது, படம் பிடித்திருக்கணுமானால்..... மீண்டும் முதல் பாராவைப் படிக்கவும்.

ஏதாவது புரிகிறதா? புரிந்தால், பின்னூட்டத்தில் தயவு செய்து எழுத வேண்டாம்.

8 comments:

Subbu said...

டி-ஃபோகஸ், டெப்த் ஆஃப் ஃபீல்டு.. அப்படி-னா?? இன்னாது இது?? :)

Rajalakshmi Pakkirisamy said...

ha ha.. Good Review :)

Vijay said...

Arun Kumar has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

welcome back sir

வித்யா has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

\\திரும்பத் திரும்ப “நான் ஏன் ஜெஸியைக் காதலிக்கணும்” என்று சிம்பு கேட்கும் போதெல்லாம், “ஏன்னா அவ தாண்டா ஹீரோயின்” என்று கத்த வேண்டும் போலிருந்தது\\

ஹா ஹா. நாங்ன வேற யாரும் உன்னப் பார்க்க மாட்டா எனக் கத்தினோம். Nicely written:)

Pleas remove this word verification.

மயில் has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

திரும்பத் திரும்ப “நான் ஏன் ஜெஸியைக் காதலிக்கணும்” என்று சிம்பு கேட்கும் போதெல்லாம், “ //

எங்க தலையெழுத்துன்னு :))

Divyapriya has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

sabatical kum indha padathukkum enna samandham?? onnume puriyale!!!
enakku padam romba romba romba pidichudhu :) saw it two times in theatre n repeated no. of times in dvd :)got the telugu version too :)

டம்பி மேவீ has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

raittu..... enakku pala love gnabagam vanthuruchu antha padathai partha pin......oru velai ungalukku meendum college kku poi love pannanum nnu aasai vanthurucho ???

Karthik said...

ithu oru mokkai padam. gautham scene kattiruppan. vera onnum illa. :))

arr's music, manoj's cinematography were good though.

(Mis)Chief Editor said...

Romba naalaikku appuram vanthaa....

Nagaichuvaikkum kuraivillai...
Nakkalukkum kuraivillai!

Jamaainga Vijay!

-MCE

Vijay said...

\\ Subbu said...
டி-ஃபோகஸ், டெப்த் ஆஃப் ஃபீல்டு.. அப்படி-னா?? இன்னாது இது?? :)\\

டெக்னிகலா நாலு வார்த்தை சொன்னா பொறுக்காதே :)

\\Rajalakshmi Pakkirisamy said...
ha ha.. Good Review :)\\
ராஜலக்ஷ்மி, நான் ரிவியூ எழுதலியே. படம் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தானே எழுதியிருக்கேன். :) இருந்தாலும் வருகைக்கு நன்றி :)

\\Arun Kumar has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

welcome back sir \\
நன்றி அருண். என்னாச்சு உங்க தமிழ் எண்ணங்கள். இப்பல்லாம் எண்ணங்களே வரதில்லையா? :)

\\வித்யா has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

\\திரும்பத் திரும்ப “நான் ஏன் ஜெஸியைக் காதலிக்கணும்” என்று சிம்பு கேட்கும் போதெல்லாம், “ஏன்னா அவ தாண்டா ஹீரோயின்” என்று கத்த வேண்டும் போலிருந்தது\\

ஹா ஹா. நாங்ன வேற யாரும் உன்னப் பார்க்க மாட்டா எனக் கத்தினோம். Nicely written:)

Pleas remove this word verification. \\
நன்றி வித்யா. வோர்ட் வெரிஃபிகேஷன் ஒரு பாதுகாப்புக்குத்தான் வைத்தேன். அது ரொம்ப தொந்தரவா இருக்குன்னு நிறைய பேர் அடிக்காத குறையா சொல்லிட்டாங்க. அதுனால எடுத்துட்டேன் :)

\\மயில் has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

திரும்பத் திரும்ப “நான் ஏன் ஜெஸியைக் காதலிக்கணும்” என்று சிம்பு கேட்கும் போதெல்லாம், “ //

எங்க தலையெழுத்துன்னு :)) \\
ஹா ஹா :) வருகைக்கு நன்றி :) அடிக்கடி வாங்க

\\Divyapriya has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

sabatical kum indha padathukkum enna samandham?? onnume puriyale!!!
enakku padam romba romba romba pidichudhu :) saw it two times in theatre n repeated no. of times in dvd :)got the telugu version too :) \\
புரியலியா. நல்ல திரும்பத் திரும்பப் படிங்க. யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் புரியக்கூடாதுன்னு தானே இப்படி மொட்டையா எழுதியிருக்கேன் :)

\\டம்பி மேவீ has left a new comment on your post "சபாட்டிகல் விடுமுறை":

raittu..... enakku pala love gnabagam vanthuruchu antha padathai partha pin......oru velai ungalukku meendum college kku poi love pannanum nnu aasai vanthurucho ???\\
நீங்க ஒருத்தர் தான் நான் எழுதினதன் உள்குத்தைப் புரிஞ்சிருக்கீங்க :)

\\ Karthik said...
ithu oru mokkai padam. gautham scene kattiruppan. vera onnum illa. :))

arr's music, manoj's cinematography were good though.\\
ரொம்ப மொக்கையில்லை. ஓகே :)

\\ (Mis)Chief Editor said...
Romba naalaikku appuram vanthaa....

Nagaichuvaikkum kuraivillai...
Nakkalukkum kuraivillai!

Jamaainga Vijay!

-MCE\\
நன்றி, குறும்புகாரரே. அது தானே உங்க பெயரின் தமிழாக்கம் :)

Ravi said...

Dude.Ippo than Nee Oru Nalla Kamal Rasigan because you really dunno what are you speaking about.

Let me make my comment " Your wife is having more patience "

Adventurer said...

//ஆனால் ஏன் இப்படி யானை பிளிறும் சத்தத்தில் கத்த வைத்திருக்கிறார் தெரியவில்லை.//

Ultimate comment. Ippadi kooda oru comparison panna mudiyuma endru ninaithu ninaithu sirithome. Can't help laughing :)) - Hema.