Pages

July 29, 2009

ரீமேக் கலாசாரம்

ஆஃபீஸ் நண்பன் உபயத்தால் கம்பக்த் இஷ்க் என்ற ஹிந்தி படம் DivX வடிவில் கிடைத்தது. போதாக்குறைக்கு காயத்ரியை வேறு கூட உட்கார்ந்து பார்க்கும்படி சொல்லிவிட்டேன். பம்மல் .கே. சம்பதத்தின் கதையை அப்படியே அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போய் ஏன் எடுத்திருக்கிறார்களோ??? அரை மணி நேரம் கழிந்தும் நகருவேனா என்கிறது படம். காமெடி என்ற பெயரில் படம் முழுக்க வீசுகிறது காமநெடி. படத்தில் தென்படும் அனைத்து பெண்களுமே பிகினியில் காட்சியளிக்கிறார்கள். ஜோக் என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள். கம்லஹசனும் மௌலியும் பார்த்தால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் ள்வார்கள். பேசாமல் கமலே பம்மல் கே. சம்பத்ததையே டப்பிங் செய்திருக்கலாம்.

எனக்குத் தெரிந்து ஒரு படைப்பை மீண்டும் வேறொரு மொழியில் மீண்டும் அதை எடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை. ஏற்கனவே முதலில் வந்த படத்தைப் பார்த்து, அதன் பாதிப்பும் எதிர்பார்ப்பும் மீண்டும் எடுக்கப் பட்ட படத்தின் மீதும் ஏற்படும். ரீமேக் / டப்பிங் செய்கிறேன் பேர்வழி என்று சில அசல் படத்தை கொலை செய்கிறார்கள்.

என் நினைவில் முதலில் பார்த்த டப்பிங் படம் சங்கராபரணம். தமிழில் டப் செய்திருந்தார்கள். பாடல்களனைத்தும் ஏற்கனவே கேட்டுவிட்டிருந்ததால், தமிழில் கேட்கும் போது கேனத்தனமாக இருந்தது. இதற்கும் முதலில் தமிழ் பிரதையைத் தான் பார்த்தேன். பிற்பாடு தெலுங்கில் பார்த்தபோது தான் நிறைவு உண்டானது. இன்றும் சங்கராபரணத்தைப் பார்த்தால் சலிக்காது.

ஆனால் டப் செய்தாலும் அதன் அழகழியாமல் இருந்ததென்னவோ, சலங்கை ஒலி தான். உடைகள் மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தாலும் டப்பிங் வசனம், பாடல்கள், இசை, நாட்டியம் என எதிலுமே குறை சொல்ல முடியாது. எல்லோருமே தங்களது குரலிலேயே பேசியிருப்பது இன்னொரு காரணமாகக் கூட இருந்திருக்கலாம்.

ஹிந்தியிலிருந்து தமிழில் எடுக்கப்பட்ட வசூல் ராஜாவும் சரி, தமிழிலிருந்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட அலைபாயுதேவும் சரி, பார்க்கவே பிடிக்க்லை. சஞ்சய் தத் அப்படியே ஒரு தாதா போல் இருந்தார். கமலுக்கு என்ன தான் உடல் வாகு இருந்தாலும், ஒரு ரவுடியாகப் பார்க்க முடியவில்லை. முன்னாபாய்’இல், அந்த ஆஸ்பத்திரி டீனிடம் சஞ்சய் பேசும் அந்த casual dialogue delivery கமலிடம் மிஸ்ஸிங். என்னதான் சென்னைத்தமிழில் கலாய்த்தாலும், ஒரிஜினல் போல் வரவில்லை.

அலைபயுதேவின் பிளஸ்பாயிண்டே, இளமை ததும்பும் மாதவனின் சிரிப்பும், வசீகரிக்கும் ஷாலுவின் (அஜீத் மன்னிக்க. இப்படித் தான் ஷாலினியைக் கூப்பிடுவேன்) கண்களும் தான். விவேக் ஓபராய், ராணி முகர்ஜி, இருவரிடமும் அந்த இளமையும் வசீகரமும் சுத்தமாக இல்லை. அதிலும் நடராஜன் அடிக்கும் டைமிங் ஜோக்குகளை கொலை செய்திருப்பார்கள் ஹிந்தியில்.

அனில் கபூர் கிட்டத்தட்ட எல்லா பாக்யராஜ் படங்களையும் ரீமேக் செய்திருப்பார் என நினைக்கிறேன். பேடா மட்டுமே மாதுரி தீட்சித் உபயத்தில் பார்க்க முடிந்தது. மற்றதெல்லாம் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றுமில்லை.

சந்திரமுகி கூட மணிச்சித்ரதாழ் போலில்லை, என்பாள் காயத்ரி. நல்ல வேளை ஏக் துஜெ கேலியே போன்ற படங்களை தமிழில் எடுக்கவில்லை. ஹிந்தியிலேயே தமிழகத்திலும் வெளியிட்டு வெற்றிநடை போட்டது. தெலுங்கில் மனோசரித்ரா என்று ரீமேக் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழிலேயே டப் செய்யப்பட்ட குரு பரவாயில்லை. அபிஷேக் முகம் தான் கொஞ்சம் அழுதமூன்ஞ்சியாக இருந்தது.

ஒரு படத்தை, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் எடுக்கும் போது, அந்தந்த மொழி கலாசாரம் என்பதற்கேற்ப கஸ்டமைஸ் செய்கிறார்கள். இந்தியாவில் வி்ற்பனையாகும் பீஸாவில் தந்தூரி சுவை கொண்டு வருவது மாதிரி. ஆனால் எனக்கென்னவோ, கஸ்டமைஸ் செய்யப்பட்ட பீஸாவும் பிடிக்கவில்லை, படங்களும் பிடிப்பதில்லை. அசலில் எடுக்கப்பட்ட படத்தை அப்படியே, அச்சு பிசகாமல் அப்படியே வேறொரு மொழியிலும் வெளியிட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

கன்னடத் திரைத்துறை வளரவேண்டும் என்பதற்காக பிற மொழிப்படங்கள் கன்னடத்தில் டப் செய்யக்கூடாது என்று கன்ண்ட ஃபிலிம் சேம்பர் தடை விதித்துள்ளதாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?? விளைவு, ஒரிஜினல் படம் என்பதே கிடையாது. எல்லாமே, மற்ற மொழிகளிலிருந்து கதையைத் திருடி எடுக்கப்படும் படங்கள் தான்.

திரைத்துரையினருக்கு சில வேண்டுகோள்கள். முடிந்தவரை ஒரிஜினல் படங்களை எடுங்கள். ரீமேக் செய்யும் போது அந்தந்த ஊருக்கு ஏற்ற மாதிரி கஸ்டமைஸ் செய்யாமல் முடிந்தவரை ஒரிஜினலை பின்பற்றப் பாருங்கள். படம் துவங்குவதற்கு முன், அசல் படத்தின் தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர்களுக்கு ஒரு நன்றி டைடில் போடுங்கள். ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள்.

14 comments:

நட்புடன் ஜமால் said...

35க்கும் மேற்பட்ட தடவைகள் பார்த்தேன் ‘சலங்கைஒலி’ இன்னும் பார்க்கனும் ...


உங்க பேர்ல உள்ளவரு படமெல்லாமே ரீமேக் தான்

என்னா டேஸ்ட்டோ ...

YUVA said...

yes Vijay, Jamaal, true. Salangai Oli is one of a movie that we can be proud of. SOme of the re-make movies are not getting proper rights as well from the original producers. Kanada, no need to ask, they are living in their own world.

மேவி... said...

remake padangal thaan inge irukkum makkalukku parkka vaippu kidai irukkirathu... orginal padam patri perupalum yaarukkum theriyathillai.

oru ordinary person yai yeduthu kondal avan orginal padam parthu irukkum vaippu romba kammi thaan. ithanal remake padam pannum directors kku innum responsibility jasthiya irukku.... ana yaarum athai patri kavalai patatha theriyala....

மேவி... said...

salangai oli..... nalla padam naanum niraiya vatti parthu irukkiren

Anonymous said...

ஏன் இதயத்தை திருடாதேவை விட்டுடீங்க?

Divyapriya said...

நானும் கம்பத் இஷ்க் பாத்துட்டேன்...மங்களம் மங்களம் பாட்டு மட்டும் செம சூப்பர் :) எனக்கு அந்த பாட்ட கேட்டாலே சிரிப்பா வந்துச்சு :)

M Arunachalam said...

//நல்ல வேளை ஏக் துஜெ கேலியே போன்ற படங்களை தமிழில் எடுக்கவில்லை. ஹிந்தியிலேயே தமிழகத்திலும் வெளியிட்டு வெற்றிநடை போட்டது. தெலுங்கில் மனோசரித்ரா என்று ரீமேக் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.//

Maro Charitra is the original movie which was a super hit not only in AP but also in TN. It ran for more than a year or two as Morning Show in Chennai's Safire theatre.

It was subsequently remade in Hindi as "Ek Duje Ke Liye" as the launch vehicle for Kamal in Hindi by his mentor KB. It was also a huge success.

Vijay said...

\\ நட்புடன் ஜமால் said...
உங்க பேர்ல உள்ளவரு படமெல்லாமே ரீமேக் தான்
என்னா டேஸ்ட்டோ ...\\

போக்கிரிக்குப் பிறகு எந்த விஜய் படமும், எதில போட்டால்லும் பாப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். போக்கிரிக்குப் போனதே அசினுக்காகத் தான்.

\\ YUVA said...
Kanada, no need to ask, they are living in their own world.\\
கன்னடத் திரைப்படத் துறையை ராஜ்குமார் குடும்பம் தான் கண்ட்ரோல் செய்கிறது சில கன்னட நண்பர்கள் அங்கலாய்க்கிறார்கள். இவர்கள் வைத்த சட்டத்தினால் தான் டப்பிங்க் படங்கள் வருவதில்லை. நிறைய பேர் தசாவதாரம் படத்தை தமிழில் பார்த்தார்கள்.

\\ MayVee said...
oru ordinary person yai yeduthu kondal avan orginal padam parthu irukkum vaippu romba kammi thaan. ithanal remake padam pannum directors kku innum responsibility jasthiya irukku.... ana yaarum athai patri kavalai patatha theriyala....\\
ஒரு மொழியில் ஹிட் ஆனதைத் தான் ரீமேக் செய்கிறார்கள். அப்படிச் செய்யும் போது ஒரிஜினலை விட நன்றாக வர வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டாமா?

\\mayil said...
ஏன் இதயத்தை திருடாதேவை விட்டுடீங்க?\\
மறந்தே போச்சு. பாட்டுக்கள் பரவலாக ஹிட் ஆனாலும் தமிழில் அவ்வளவாகப் போகவில்லை என்று தான் நினைக்கிறேன். மேலும் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை. அதனால் எழுதவில்லை.குசேலன் பற்றி எழுதணும் என்று நினைத்தேன். அதைப் பார்க்காததால் அதைப் பற்றியும் எழுதவில்லை.

\\Divyapriya said...
நானும் கம்பத் இஷ்க் பாத்துட்டேன்...மங்களம் மங்களம் பாட்டு மட்டும் செம சூப்பர் :) எனக்கு அந்த பாட்ட கேட்டாலே சிரிப்பா வந்துச்சு :)\\

ஒரு நல்ல சுலோகத்தை இப்படி கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருக்காங்க. தமிழில் கூட வக்கிரதுண்ட மஹாகாய சுலோகத்தை அசிங்கப் படுத்தியிருக்க மாட்டார்கள். எந்த மதமானாலும் சரி, வழிபாட்டு சுலோகங்களை கிண்டல் செய்வது ரொம்பத் தப்பு.

\\M Arunachalam said...
Maro Charitra is the original movie which was a super hit not only in AP but also in TN. It ran for more than a year or two as Morning Show in Chennai's Safire theatre.

It was subsequently remade in Hindi as "Ek Duje Ke Liye" as the launch vehicle for Kamal in Hindi by his mentor KB. It was also a huge success.\\

அதனால் தான் முன் ஜாக்கிரதையாக “நினைக்கிறேன்” என்று எழுதியிருந்தேன் :-)

Karthik said...

//கம்பக்த் இஷ்க்

எனக்கு அக்ஷய் குமாரே பிடிக்காது. அதிலும் இந்த படம் மகா கொடுமை. :-(

சந்திரமுகி தவிர நீங்கள் சொன்ன எந்த படத்தையும் பார்த்ததில்லை. எனிவே, சூப்பர்ப் பதிவு விஜய். வெல்கம் பேக்! :-)

Karthik said...

குரு, அலைபாயுதே போன கமென்ட்டில் மிஸ்ஸிங். :-(

kanagu said...

அண்ணா, போக்கிரி நல்லா தான்ணா இருந்துது... என்ன போலீஸ் வேஷம் கொஞ்சம்(ரொம்ப) காமெடியா இருந்தாலும்.. ப்டம் விறுவிறுப்பா போச்சு.. அதே மாறி சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், கில்லி.. எல்லாமே சூப்பர்..

தமிழ்நாட்டுக்கும், ஆந்திராக்கும் அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்ல-னு நினைக்கிறேன்..

ஆனா நீங்க சொன்ன மத்த படங்கள் எல்லாம் மொக்க தான்.. :( நிறைய படம் நான் பாத்ததும் இல்ல

kanagu said...

விருது வாங்க, வாங்க அண்ணா:

http://enadhu-ularalgal.blogspot.com/2009/08/blog-post.html

RAMYA said...

செம அலசல் விஜய். டப்பிங் சரியா வராது என்பது தெள்ள தெளிவான உண்மை , அனால் சில படங்கள் ஹிட் ஆகிவிடுகிறது.

//
தெலுங்கில் மனோசரித்ரா என்று ரீமேக் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.
//

அது "மனோசரித்ரா" இல்லே "மரோசரித்ரா" :))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே