Pages

February 09, 2009

கோவில் சினிமா நாவல் கிரிக்கெட்

என்னடா இது, சம்பந்தமில்லாத நாலு வார்த்தை எழுதியிருக்கானே என்று பார்க்கறீங்களா? இந்த வீக்கெண்ட் இந்த நாலும் தான் என்னை ஆக்கிரமித்திருந்தன.

சனிக்கிழமை பிரதோஷம். சனி பிரதோஷம் ரொம்ப விசேஷமாம். பிரதோஷம் பற்றி ஒரு சிறு தகவல். அமுதத்தைத் தேடி, தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலைக் கடைந்த போது, முதலில் ஆலகால விஷமே வந்தது. அந்த சூட்டைத் தாங்க முடியாமல், தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, சிவபெருமான் அந்த விஷத்தை விழுங்கினார். இது நடந்தது, துவாதேசி நாளன்று. அம்மாவாசை / பௌர்ணமியிலிருந்து பன்னிர்ண்டாவது நாள். விஷம் தாக்காமலிருக்க, பராசக்தி, சிவனின் கழுத்திலேயே விஷத்தை நிறுத்த, அவரது கழுத்து மட்டும் நீல நிறமானதும், அவருக்கு நீலகண்டன் என்ற பெயர் வரக்காரணமானதும் ஒரு தனிக்கதை. மீண்டும், பார்க்கடலுக்கே வருவோம். தேவர்களும் அசுரர்களும் மீண்டும் வாசுகியென்ற பாம்பை மத்தாக உபயோகித்து, பார்க்கடலைக் கடைய, திரயோதசியன்று அமுதம் கிடைத்தது. சிவபெருமான் மட்டும் விஷத்தை உண்டிரா விட்டால், தேவர்கள் எல்லோரும் எரிந்து சாம்பலாகிப் போயிருப்பார்கள். ஆனால், சிவபெருமானின் உதவியை மறந்து, அமுதம் கிடைத்த திகைப்பில் அவர்கள் கூத்தாட, சிவபெருமான் வெகுண்டெழுந்தார். தங்களது, தவறை உணர்ந்த தேவர்கள், தங்களை மன்னித்தருளுமாறு, சிவபெருமானை வேண்டி நின்றனர். தவறை உணர்ந்ததனால், சாந்தம் அடைந்த சிவபெருமான், இனி எல்லா திரயோதசி நாளன்று, மாலை 4.30 மணிக்கு மேல், 6 மணிக்குள் தன்னை வழிபடும்படி சொன்னார். இந்த நேரமே பிரதோஷ காலம். சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பக்கத்திலிருந்த சிவன் கோயில்க்கு போனோம். பெங்களூரில் கூட மக்கள் பிரதோஷம் என்று தெரிந்து கொண்டு நிறைய பேர் வந்திருந்தனர். இந்த சிவன் கோயில் மிகவும் புராதனமானதொன்று. 600-700 வருடங்களாக இருக்கிறது. கோரமங்களாவிலிருந்து சர்ஜாபூர் செல்லும் சாலையில் அகரா என்ற சிறு ஊரில்(இப்போது, இது பெங்களூருக்குள் வந்து விட்டது) தான் இந்த சிவன் கோவில் உள்ளது.


இந்த வார இறுதியில் மூன்று படம் பார்த்தேன். தமிழ், ஹிந்தி ஆங்கிலம் என தலா ஒவ்வொரு மொழிக்கும் ஒரு படம். முதலில் ஏற்கனவே பார்த்த அபியும் நானும் படத்தை அம்மாவுடன் சேர்ந்து, பிறகு காயத்ரியுடன் சேர்ந்து ஹிந்தி படம் தோஸ்தானா (இந்தப் படத்தை மீண்டும் தனியாகப் பார்க்க வேண்டும்), அப்புறம் தன்னந்தனியாக "Twelve Angry Men" என்ற ஆங்கிலப் படம்.

அபியும் நானும் பற்றி நான் புதிதாக ஏதும் சொல்வத்ற்கில்லை. ஆனா மற்ற இரண்டு படங்கள் பற்றி சொல்லியே ஆகணும். முதலில் தோஸ்தானா. ப்ரியாங்கா சோப்ரா, அபிஷேக் பச்சன், ஜான் அப்ரஹம், மற்றும் பாபி தியோல் இடம் பெற்ற படம். இப்படியும் கூட திரைக் கதை அமைக்க முடியுமா? வடநாட்டில் எப்படியோ தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த மாதிரி படமெல்லாம் எடுத்தால் கலாசார பாதுகாவலர்கள் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க. ஒரு அழகான பெண் வசிக்கும் வீட்டின் இன்னொரு அறையில் வாடகைக்கு வருவதற்கு, தாங்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையைச் சார்ந்தவர்கள் என்றும், பெண்கள் அவ்வளவு ஈர்ப்பு கிடையாது என்று புளுகோ புளுகென்று புளுகித்தள்ளி அவளையே கரெக்ட் செய்ய மேற்கொண்டு, கடைசியில் பாப் தியோல் தட்டிக் கொண்டு போகிறார். படத்திற்கு இவ்வளவு செலவு செய்திருப்பவர்கள் ப்ரியாங்கா சோப்ரா உடை விஷயத்தில் ஏன் இவ்வளவு சிக்கனம் காடியிருக்காங்களோ. இப்ப புரியுதா, இந்தப் படத்தை இன்னொரு தடவை தனியாக ஏன் பார்க்கணும்னு ஏன் ஆசைப்படறேன்னு.

நான் பார்த்த இன்னொரு படம், 1957’ல் வெளிவந்த Twelve Angry Men என்ற ஆங்கிலப் படம். ஒரு கொலைக் குற்றவாளி நிஜமாகவே கொலை செய்திருப்பானா என்று 12 பேர் விவாதிக்கிறார். முதலில் ஒருவர் மட்டும், இவன் கொலை செய்திருக்க மாட்டான் என்று நம்புகிறார். எப்படி மற்ற 11 பேரையும், கொலைக் குற்றவாளி கொலை செய்திருக்க மாட்டான் என்ற தீர்மானத்திற்குக் கொண்டு வருகிறார் என்பதே கதை. ஆஃபீஸில் ஒரு Personal Effective Program என்ற பயிற்சி முகாமில் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கணும் என்று சொன்னார்கள். ரொம்ப நாள் இணையத்தில் தேடி, பதிவிறக்கம் செய்து பார்த்தேன். படத்தின் முக்கியமான கதாபாத்திரமான ஹென்ரி ஃபோண்டவின் நடிப்பு அபாரம். அதை நடிப்பு என்று கூட சொல்ல முடியாது. ரொம்ப ரொம்ப யதார்த்தமானதொரு performance. Why don't Indian film makers at least make an attempt to give such movies.மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டச்செய்யும் படம்.

இவ்வளவு படம் பார்த்தும் கொஞ்சம் நேரம் கிடைத்ததில் போன மாதம் வாங்கின நாவலில் ஒரு 100 பக்கம் படிக்க முடிந்தது. எனக்குப் பொதுவகவே ஒரு எழுத்தாளரின் படைப்புகளைத் தொடர்ந்து படிக்கும் பழக்கமுண்டு. அப்படித்தான், சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், சுஜாதா, கல்கி, டான் பிரௌன், என்று ஒரு தொடர். இப்போது சில நாட்களாக இர்விங்க் வேலஸின் நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். போன மாதம், ஜெய நகர் போயிருந்தபோது, “The Plot" என்ற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக விருவிருப்பாக எழுதும் இர்விங்க், இந்த நாவலில் கொஞ்சம் மந்தமான போக்கைக் கடைபிடித்திருக்கிறார். 900 பக்கங்கள் அட்னகிய புத்தகத்தில், 200 பக்கங்கள் தான் முடித்திருக்கிறேன். இன்னும் கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் அறிமுகமான பாடில்லை. இவரது, “The Second Lady", "Fan Club", "The R Document", "Guest of Honour" "The Man" போன்ற நாவலகள் நல்ல விருவிருப்பானவை. அதிலும், “The Man" is a real master piece. ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாகியிருக்கும் இந்தத் தருணத்தில் 20 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் ஒரு கறுப்பு இனத்தவர் ஜனாதிபதியானால், வெள்ளைக்காரர்கள் எப்படி நடந்து கொண்டு, அவரை எப்படி ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க திரை மறைவில் காய் நகர்த்துகிறார்கள் என்பது தான் கதை.
200 பக்கங்கள் படித்து முடிக்க ஒரு மாதம் ஆகியிருக்கு. இன்னும் மீதமுள்ள 700 பக்கங்களை இந்த வருடத்திற்குள் படித்து முடித்து விடுவேன் என நம்புகிறேன்.

நேற்று தைப்பூசத் திருநாள். காலையிலேயே அல்சூரிலுள்ள முருகன் கோவிலுக்குப் போய், முருகனை தரிசித்து விட்டு, 9 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடலாம் என்பது பிளான். அல்சூருக்குப் போய் கிட்டத்தட்ட 7 வருடங்களாகிவிட்டன. எல்லா சாலைகளும் ஒரு வழிப்பாதையாகி விட்டன. மேலும் நம்ம மெட்ரொவின் தயவல் சாலைகள் முழுவதையும் தோண்டிப் போட்டிருக்கிறார்கள். போய்ச்சேரவே 8.30 ஆகிவிட்டது. சுமாரான கூட்டம். முருகனுக்கு கும்பிடு போட்டு விட்டு, அடையார் ஆனந்த பவனில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவதற்கு 10.30 மணியாகிவிட்டது. ஏன் இவ்வளவு அவசரமென்றால், நேற்று ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மற்றும் இந்தியா - இலங்கை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள். ஆஸ்திரேலியா தோற்கணுமே, இந்தியா இலங்கைக்கு மீண்டும் ஆப்பு வைக்கணும் என்பது தான் முருகனிடம் இடப்பட்ட முக்கிய பிரார்த்தனை. இரண்டும் நிறைவேறவில்லை. இந்தியா இவ்வளவு சொதப்பலாக விளையாடும் என்றூ எதிர்பார்க்கவே இல்லை.

இந்தச் சொதப்பல் மேட்சைப் பார்க்கணும்னு தான் ஒழுங்கா சுவாமி கும்பிடாமல் இவ்வளவு அவசரப்படுத்தலா என்று அம்மாவும் காயத்ரியும் கடிந்து கொண்டார்கள், ஒரு மஹா கிரிக்கெட் ரசிகனின் ரசனையைப் புரிந்து கொள்ளாதவர்கள்.
30 comments:

நசரேயன் said...

ஒரு வார இறுதியிலே இவ்வளவு நடந்திருக்கா?

Divyapriya said...

ஒரு weekend ல இவ்ளோ பண்ணிட்டீங்களா? நான் தூங்கினேன்...தூங்கினேன்...தூங்கிட்டே இருந்தேன் :)

மேவி... said...

என்னக்கு நோவேல் எல்லாம் ஹோச்டேல் ஓட போகிவிட்டது.......
மேலும் தமிழும் நல்ல திரைகதை உள்ள படம்கள் நிறையே இருக்கு..... "தண்ணீர் தண்ணீர்" (பெயர் சரியா நியாபகம் இல்ல ) பாரதி ராஜா படம் சூப்பர் எ இருக்கும்

RAMYA said...

விஜய் ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லே!!

நாங்க நேரமே இல்லாமே சுத்திக்கிட்டு இருக்கோம் நீங்க என்னடாவென்றால், குடும்பத்த்தோடு படம், புத்தகங்கள், கோவில்.

ஒரு வாரத்தில் தூள் கிளப்பி இருக்கீங்க ?

பரவா இல்லை நண்பர் தானே
நீங்களாவது இதெல்லாம் அனுபவிங்க

ஆமா தனியா படம் பார்த்தா தங்க்ஸ்
அப்புறம் பூரி கட்டை..............

RAMYA said...

//
நசரேயன் said...
ஒரு வார இறுதியிலே இவ்வளவு நடந்திருக்கா?

//

இங்கனே காது வழியா புகை வருது
பாருங்க !!!

RAMYA said...

நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!!!

பெங்களூர் கோவில்கள் விவரம் எல்லாம் பிரமாதம்.

வழி தெரியாதவர்கள் கூட உங்கள் விபரம் தெரிந்ததினால் சுலபமாக சென்று விடுவார்கள்.

மேவி... said...

"ரம்யா said : ஆமா தனியா படம் பார்த்தா தங்க்ஸ்
அப்புறம் பூரி கட்டை.............."
மேடம் ஏன் இந்த கோல வேறி

மேவி... said...

சிவன் விஷத்தை உண்ட பிறகு.... சிறிது மயக்கம் வந்து பார்வதி மடி தலை வைத்து நிஷ்டி கொள்ள்கிறார்..... இந்த கோலத்தில் தஞ்சாவூர் பக்கத்தில் காட்சி தருகிறார்.... கோவில் நல்ல இருக்கும். நான் சின்ன வயசில் போனது ; எந்த ஊருநு சரியா நியாபகம் இல்லை. .....
இந்த கோவியில் வணங்கினால் ; வியாதிகள் வராது.....

Lancelot said...

ayya athu verra onnum illae romba nalla vilayadunna kannu patturum la athaan thokkura mathiri nadichaanga...next parunga eppadi vilayaduranganu (eppadi ellam manasa thethikka vendiyatha iruku pa...)

Vijay said...

\\ நசரேயன் said...
ஒரு வார இறுதியிலே இவ்வளவு நடந்திருக்கா?\\
இவ்வளவு தான் நடந்திருக்கு :-)

\\ Divyapriya said...
நான் தூங்கினேன்...தூங்கினேன்...தூங்கிட்டே இருந்தேன் :)\\
நீங்க கொடுத்து வச்சவங்க :-)

\\ MayVee said...
என்னக்கு நோவேல் எல்லாம் ஹோச்டேல் ஓட போகிவிட்டது.......
மேலும் தமிழும் நல்ல திரைகதை உள்ள படம்கள் நிறையே இருக்கு..... "தண்ணீர் தண்ணீர்" (பெயர் சரியா நியாபகம் இல்ல ) பாரதி ராஜா படம் சூப்பர் எ இருக்கும்\\
தண்ணீர் தண்ணீர் பார்த்திருக்கிறேன். அது பாலசந்தர் படம். நல்ல இருக்கும் :-)

\\ RAMYA said...
ஆமா தனியா படம் பார்த்தா தங்க்ஸ்
அப்புறம் பூரி கட்டை..............\\
காயத்ரி நான் படம் பார்க்கும் போது, என்னை கண்காணித்துக் கொண்டிருந்தாள். இரண்டு மூன்று பாட்டுக்களையும் Fast forward செய்யச் சொல்லிவிட்டாள் :-)

\\ MayVee said...
இந்த கோவியில் வணங்கினால் ; வியாதிகள் வராது.....\\
வைத்தீஸ்வரன் கோவிலா?

\\Lancelot said...
ayya athu verra onnum illae romba nalla vilayadunna kannu patturum la athaan thokkura mathiri nadichaanga...next parunga eppadi vilayaduranganu (eppadi ellam manasa thethikka vendiyatha iruku pa...)\\
ஹாஹா. பார்ப்போம் இன்னிக்குள்ள T20 மேட்சுல என்ன பண்ணறாங்கன்னு :-)
வருகைக்கு ரொம்ப நன்றி. நீங்க கார்த்திக் ஃப்ரெண்டு அருண் குமார் தானே?

Lancelot said...

amaanga anna antha appavi payanthaan

Anonymous said...

// இந்தச் சொதப்பல் மேட்சைப் பார்க்கணும்னு தான் ஒழுங்கா சுவாமி கும்பிடாமல் இவ்வளவு அவசரப்படுத்தலா என்று அம்மாவும் காயத்ரியும் கடிந்து கொண்டார்கள் //

ஒரு வேலை நீங்க பொறுமையாக முருகனிடம் வேண்டியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். அரைகுறை வேண்டலுக்கு ஆறுமுகம் கொடுத்த பரிசு இந்த இந்தியா மற்றும் நியுசீலாந்து தோல்விகள்.

Anonymous said...

அனுபவிங்க.....அண்ணாச்சி அனுபவிங்க.....
இந்த புக், சினிமா, டி.வி. எல்லாம் எனக்கு எப்பவோ எங்கேயோ கேட்ட சமாச்சாரம் போல் நினைவிருக்கிறது....எல்லாம் சின்ன மாமியார் வருகிறவரைக்கும் தான்.

மேவி... said...

"vijay said
வைத்தீஸ்வரன் கோவிலா?"இல்லை விஜய். அது சுருட்ட பள்ளி கோவில்மாம் ......

Vijay said...

\\ Sriram said...
ஒரு வேலை நீங்க பொறுமையாக முருகனிடம் வேண்டியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். அரைகுறை வேண்டலுக்கு ஆறுமுகம் கொடுத்த பரிசு இந்த இந்தியா மற்றும் நியுசீலாந்து தோல்விகள்.\\

ஓ! அப்படிக் கூட இருக்கலாமோ :-(


\\ kunthavai said...
அனுபவிங்க.....அண்ணாச்சி அனுபவிங்க.....
இந்த புக், சினிமா, டி.வி. எல்லாம் எனக்கு எப்பவோ எங்கேயோ கேட்ட சமாச்சாரம் போல் நினைவிருக்கிறது....எல்லாம் சின்ன மாமியார் வருகிறவரைக்கும் தான்.\\
இதுக்குப் பேரு தான் கற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதா??? !!!!

Karthik said...

//அமுதத்தைத் தேடி, தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலைக் கடைந்த போது...

எஸ்கேப்........................!
:)

//பொதுவகவே ஒரு எழுத்தாளரின் படைப்புகளைத் தொடர்ந்து படிக்கும் பழக்கமுண்டு

ஹை, நானும் அப்படித்தான். ஆனால் இப்ப நான் - பிக் ஷன் அதிகம் படிக்கிறதால, அதை கண்டினியு பண்ன முடிவதில்லை.

//ஒரு மஹா கிரிக்கெட் ரசிகனின் ரசனையைப் புரிந்து கொள்ளாதவர்கள்.

அது ஏன் பொண்ணுங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கறது இல்லை? கொஞ்சம் பேருக்கு பிடிக்கலாம். ஆனால் மோஸ்ட்லி ம்ஹும். எங்க வீட்டிலும் இப்படித்தான். :)

எனிவே, T20 என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்.

தாரணி பிரியா said...

ரெண்டு நாளுல இத்தனை செய்யலாமா :). பிரதோஷம் அம்மா சொல்லுவாங்க. காதுல வாங்குனாதானே கோயிலுக்கு போக முடியும் :(

இன்னும் கொஞ்ச நாளைக்கு எந்த படமும் பாக்கறமாதிரி இல்லை .

புக் அது வேணுமின்னா ஒ.கேதான்

கிரிக்கெட் :)

Rajalakshmi Pakkirisamy said...

Final one day கு பதிலா தான் 20-20 அசத்திட்டாங்கள்ள................ Pathan Brothers கலக்கிட்டாங்க :)

kanagu said...

Last para Nach....
Prathosam pathi nalla thagaval kodutharku nandri... :) :)
Novel ah.. epdi andha 1000.... pages ah padikkreenga.. enaku romba kastam...
padam paakurathuna ok... :)

Vijay said...

\\ Karthik said...
எஸ்கேப்........................!
:)\\
ஏன் அமுதம் பிடிக்காதா? :-)


\\ஹை, நானும் அப்படித்தான். ஆனால் இப்ப நான் - பிக் ஷன் அதிகம் படிக்கிறதால, அதை கண்டினியு பண்ன முடிவதில்லை.\\
ஏன்? ஃபிக்‌ஷனிலும் ஒரு எழுத்தாளர் எழுதினதையே அழகா படிக்கலாமே. நான் அப்படித்தான் படிப்பேன்.

\\கொஞ்சம் பேருக்கு பிடிக்கலாம். ஆனால் மோஸ்ட்லி ம்ஹும். எங்க வீட்டிலும் இப்படித்தான். :)\\

எல்லா வீட்டுலயும் இப்படித்தான்.

\\எனிவே, T20 என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்.\\
நாம் டி.20’ல சிங்கம்லா. கலக்கிப்புட்டோம்லா :-)

Vijay said...

\\ தாரணி பிரியா said...
ரெண்டு நாளுல இத்தனை செய்யலாமா :). பிரதோஷம் அம்மா சொல்லுவாங்க. காதுல வாங்குனாதானே கோயிலுக்கு போக முடியும் :(\\

விடுமுறை நாள்’ல போகலாமே. சில கோவிலுக்குப் போய்ட்டு வந்தா, மனசு ரொம்ப அமைதியா இருக்கும். அது ஏன்னு தெரியலை.

\\இன்னும் கொஞ்ச நாளைக்கு எந்த படமும் பாக்கறமாதிரி இல்லை .\\

இன்னும் வில்லு எஃபெக்டுலேர்ந்து விடுபடலியா?


கிரிக்கெட் :)\\

என்னுடைய கிரிக்கெட் பிளாக் படிங்க. உங்களுக்கும் பிடிக்க ஆரம்பிச்சுடும் :-)

Vijay said...

\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
Final one day கு பதிலா தான் 20-20 அசத்திட்டாங்கள்ள................ Pathan Brothers கலக்கிட்டாங்க :)\\

ஆமாம்ல, நான் மேட்ச் பூராவுன் இர்ஃபான் பதானைத் திட்டித் தீர்த்தேன். ஆனால், கடைசியில அவர் தான் வந்து காப்பாற்றினார். The game of cricket is a great leveller’னு பெரியவங்கள்லாம் சும்மாவா சொல்லறாங்க ? :-)

By the way, வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. அடிக்கடி வந்து கும்மி போட்டுட்டு போங்க :-)

Vijay said...

\\ kanagu said...
Last para Nach....
Prathosam pathi nalla thagaval kodutharku nandri... :) :)
Novel ah.. epdi andha 1000.... pages ah padikkreenga.. enaku romba kastam...
padam paakurathuna ok... :)\\

ஏதோ ஆர்வக்கோளறுல வாங்கிட்டேன். நம்ம இர்விங் வேலஸ் தானே ஏமாற்ற மாட்டார்னு ஒரு நம்பிக்கை. பார்ப்போம், எப்போது படித்து முடிக்கறேன்னு :-)

Anonymous said...

// இன்னும் வில்லு எஃபெக்டுலேர்ந்து விடுபடலியா? //

மறுபடியுமா அவ்வ்வ்வ்வ் ....

gayathri said...

இப்ப புரியுதா, இந்தப் படத்தை இன்னொரு தடவை தனியாக ஏன் பார்க்கணும்னு ஏன் ஆசைப்படறேன்னு.

naane kekanumnu nenachen neengale sollitenga.

Mathu said...

//200 பக்கங்கள் படித்து முடிக்க ஒரு மாதம் ஆகியிருக்கு. இன்னும் மீதமுள்ள 700 பக்கங்களை இந்த வருடத்திற்குள் படித்து முடித்து விடுவேன் என நம்புகிறேன்.//

Hehehehehe :D

Mathu said...

பிரதோஷம் பற்றி எழுதியதற்கு நன்றி :) I have gained a knowledge from this post of urs. So leaving with something, which is good and thanks for that.
ரெண்டு நாள்ல இவளவு செய்திருக்கீங்க......வார இறுதி எனக்கு எப்பிடி போகுது என்றே தெரியாமல் போய்விடும். கண் மூடித்திறந்தால் திங்கள் ஆகிவிடும்....PHEW!

முகுந்தன் said...

உங்களுக்கு இவ்வளவு நேரம் இருக்கா விஜய்?
இங்க வேலை,வேலை, வேலை மட்டுமே :(

Vijay said...

\\ gayathri said...
இப்ப புரியுதா, இந்தப் படத்தை இன்னொரு தடவை தனியாக ஏன் பார்க்கணும்னு ஏன் ஆசைப்படறேன்னு.

naane kekanumnu nenachen neengale sollitenga.\\

பெண்கள் பார்த்துட்டு ஏண்டா, சாரி ஏண்டீ இந்தப் படத்தைப் போய்ப் பார்த்தோம்னு நினைக்கலாம்’னு ஒரு வரி போட்டிருக்கணும் :-)


\\ Mathu said...
பிரதோஷம் பற்றி எழுதியதற்கு நன்றி :) I have gained a knowledge from this post of urs. So leaving with something, which is good and thanks for that.\\
விஜய்குமாரா, லே ஆஃப் ஆனாலும் கதாகாலக்ஷேபம் பண்ணி காலத்தை ஓட்டிடலாம்’டா :-)

\\ரெண்டு நாள்ல இவளவு செய்திருக்கீங்க......வார இறுதி எனக்கு எப்பிடி போகுது என்றே தெரியாமல் போய்விடும். கண் மூடித்திறந்தால் திங்கள் ஆகிவிடும்....PHEW!\\

காயத்ரியிடம் (என் மனைவி) கேட்டால் ஒரு பதிவாவது வீட்டுக்கு உருப்படியா என்ன எழுதச்சொல்லுங்க பார்ப்போம் என்று மல்லுக்கு நி்ற்பாள் :-)


\\முகுந்தன் said...
உங்களுக்கு இவ்வளவு நேரம் இருக்கா விஜய்?
இங்க வேலை,வேலை, வேலை மட்டுமே :(\\
Mukunthan, I wish I were you. மாங்கு மாங்குன்னு வேலை செய்து ஆறேழு மாசமாச்சு :-)

sa said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.