Pages

January 17, 2009

ஹம் ஹோங்கே காம்யாப்

ந்த வருடத்தில் எப்படியாவது என் உடம்பு எடையைக் குறைப்பது என்ற தீர்மானத்தை, என்ன தான் காயத்ரி என் சம்மதமேயில்லாமல் அவளாக நிறைவேற்றிக் கொண்டாலும், நானே கோதாவில் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். என்ன தடை வந்தாலும் சரி, அடுத்த மூன்று மாதங்களில் இவ்வளவு எடை குறைத்திருக்க வேண்டும், இடுப்பு சுற்றளவு இவ்வளவு இருக்கணும் என்று எனக்கு நானே quarterly target செய்து கொண்டேன்.

நமக்கெல்லாம் நோகாமல் நூல் நூற்பது தான் பிடித்த விஷயம். இணையத்திலுள்ள வலைத்தளங்களில் ஒருமித்தமாக எல்லாரும் சொல்லும் முதல் விஷயம், வாயைக் கட்டுவடு தான். கொஞ்சம் கஷ்டமான விஷயம் தானென்றாலும், வேறு வழியில்லை. சரி இன்றிலிருந்து எண்ணெய்ப் பண்டங்கள், இனிப்பு வகைகளுக்குத் தடா, ஜன்க் உட்பொருள்களை கண் கொண்டே பார்க்கக் கூடாது, சாக்லேட் பிஸ்கட்டெல்லாம், ம்ஹூம் அந்தத் திசையிலேயே இருக்குக்கூடாது என்று சங்கல்பம் எடுத்தாயிற்று.

காலையில் ஓட்ஸ் கஞ்சி, மதியம் இரண்டு சப்பாத்தி ஒரு குவளை மோர் சாதம், மாலையில் ஏதாவது ஜூஸ், இரவில் இரண்டே இரண்டு சப்பாத்தி என diet அட்டவணையும் தயாராயி்ற்று. காயத்ரியிடமும் இதை சொல்லியாச்சு. “மறுநாளிலிருந்து இதைத் தவிர வேறெதுவும் கொடுக்காதே” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்.

ஆனால் காயத்ரி போட்டுக் கொடுக்கும் ஓட்ஸ் கஞ்சி, கஞ்சியாக இல்லாமல் ஓட்ஸ் பாயாசமாக இருப்பதால், ஒரு டம்ளரோடு எப்படி நிறுத்திக் கொள்ள? காயத்ரி ஒரு இருபத்தியோறாம் நூற்றாண்டு “சுடிதாரணிந்த சாவித்ரி”; பதி பக்தி ஜாஸ்தி. போனால் போகட்டும் என்று பரிதாபப் பட்டு, இன்னொரு டம்ளரும் கொடுப்பாள். அதிலே இரண்டு மூன்று பாதாமும் முந்திரியும் சேர்த்துப் போட்டுக் கொடுப்பதால் இன்னொரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி, சாரி பாயாசம் உள்ளே ஸ்வாஹா.

மதியம் டிஃபன் பாக்ஸைத் திறந்தால், இரண்டுக்குப் பதிலாக நாலு சப்பாத்தி, சாம்பார் சாதம், மோருக்குப் பதிலாக தயிர் விட்டு குழையக் குழைய தயிர் சாதமும் இருக்கும். இந்த பாழாப் போற ஆஃபீஸ் கேண்டீன்ல அன்னிக்குன்னு பார்த்து பன்னீர் பட்டர் மசாலாவும் செய்திருப்பார்கள். இந்த நாக்கு, தவளை நாக்கு போல் நீண்டு போய் விடும். லன்ச் diet program'உம் அவுட்.

ஆஃபீஸில் டீ குடிக்கப் போனால், அருகே Bourbon பிஸ்கட்டும் வைத்திருந்தால், மேனகையைக் கண்ட விசுவாமித்திரர் போல் மனம் அல்லாடுகிறது. சரி இன்னிக்கு மட்டும் போனால் போறது என்று ஒன்றே ஒன்று மட்டும் எடுத்துக் கொள்ள முடிகிறதா. கை ஆடொமேடிக்காக இரண்டு மூன்றை அள்ளிக் கொள்கிறது. இந்த லக்‌ஷணத்துல யாராவாது பிறந்த நாள் வேற கொண்டாடி சாக்லேட் கேக்கேல்லாம் கொடுத்தால் எப்படி மறுக்க? அது நாகரீகமாகாதே!

சரி ராத்திரியாவது இரண்டு சப்பாத்திகள் மட்டும் போதும் என்று நிறுத்தினால், காயத்ரி செய்திருக்கும் சப்ஜி, “இரண்டோடு நிறுத்திக் கொள்வதா” என்று என்னை முறைத்துப் பார்ப்பது போல் இருக்கிறது. அதனால் கூட இரண்டு மூன்று போட்டுக் கொள்ள வேண்டியதாப் போறது.

சரி தான், இந்த நாக்கை அடக்கும் விஷயம் விவகாரமாகப் போவதால், அடுத்த நடவடிக்கை என்ன யோசித்த போது தான் ஐடியா வந்தது, யோகா. சில வருடங்களுக்கு முன் கற்றுக் கொண்ட யோகாசனங்களை செய்து உடம்பைக் குறைக்கலாம் என்று அதிகாலையில் எழுந்து யோகா செய்ய ஆயத்தமானேன். ரொம்ப யத்தினப் பட்டு தலை கீழாக சிரசாசனம் செய்கையில், கைக்கடியில் ஏதோ கடித்துத் தொலைக்க அப்படியே, மாட்டு வண்டி குடை சாய்வது போல் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே இருக்கும் இடுக்கில் விழுந்து தொலைக்க, சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது. எந்த நி்லையில் விழுந்திருக்கிறேன் என்று அறிந்து கொள்வதற்கே பத்து விநாடிகள் ஆகிவிட்டது.

சத்தம் கேட்டு அடிபிடித்து ஓடி வந்தாள் காயத்ரி. அங்குமிங்கும் நோட்டமிட்டு விட்டு, “அப்பாடா, எங்கப்பா வாங்கிக் கொடுத்த கட்டிலுக்கு ஒண்ணும் ஆகலை”ன்னு சொல்லிட்டு போயிட்டாள், கலியுலக சீதை.

ஒரு மாதிரி எழுந்த பிறகு தான் தெரிந்த கழுத்தில் ஆண்டவன் பொறுத்தியிருந்த swivel போன்ற தசைகள் 45 டிகிரிக்கு மேல் சுழல மறுக்கிறது. “அடிப்பாவி புருஷன் இங்கே அடிமைப் பெண் எம்.ஜி.ஆர் மாதிரி நிற்கிறேன். அப்பா வாங்கிக் கொடுத்த கட்டிலுக்கு என்ன ஆயிருக்குன்னு பார்க்கறியேன்னு” சொன்னா காதிலேயே வாங்கிக்கவில்லை. அடுத்த நாளிலிருந்து யோகாவுக்கு காலவரையற்ற ஓய்வு கொடுத்தாயிற்று.

சரி, அடுத்த வழி தான் என்ன என்று யோசித்த போது தான், ஆஃபீஸிலே நான் எட்டிக் கூடப் பார்க்காத ஒரு இடம் ஞாபகம் வந்தது. அது தான் ஆஃபீஸிலுள்ள ஜிம். என்ன அதிசயம், அது முற்றிலும் இலவசமாம். இந்த டம்பெல்ஸ், பஸ்கி, வெயிட்டெல்லாம் தூக்கிவிட்டு திடு திப்பென விட்டுட்டா, நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு விடுமாம். ஒரு நலம் விரும்பி சொன்னார். அதனால் இந்த விஷப் பயிற்சி கொண்ட உடற்பயிற்சியெல்லாம் வேண்டாம். Tread Mill மற்றும் சைக்கிள் ஓட்டலாம் என்று முடிவு செய்தால், இவ்விரண்டையும் உபயோகிக்க ஒரு நீண்ட பெரிய கியூ. “பேசும் பட”த்தில் காலைக் கடன் கழிக்க ஒரு கி்யூ நின்றிருக்குமே, அது போல் ஒரு கியூ. திருப்பதியில் கால் கடுக்க நின்று சுவாமியை தரிசித்தால் புண்ணியமாகப் போகும். இங்கு நின்றால் முட்டு வலி தான் மிச்சம்.

அப்படியே எல்லோரும் ஓடித் தேய்த்த பிறகு அதன் மீதேறினால், “Excuseme, I have already booked this slot" என்கி்றது பின்னாலிலிருந்து ஒரு குரல். ஏதேது, விட்டால் ஆஃபீஸ் இண்ட்ரா நெட்டில் இதற்காகவெல்லாம் புக்கிங்க் ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கே. அப்படியே, எல்லோரும் ஓடி முடித்த பிறகு ஏறினால், சுவிட்சைத் தட்டியதுமே, ஓடிக் கொண்டிருந்த இயந்திரம் தானாக அணைந்து கொள்கிறது. என்னவென்று பார்த்தால் இவ்வளவு பேர் இவ்வளவு நேரம் ஓடியதில் சூடாகஒ விட்டதாம் மோட்டார். ஒரு அரை மணி நேரம் அதற்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஜிம் உபயோகிக்கும் எண்ணமே போய் விட்டது.

இவங்க என்னடா எனக்கு ஓடுவதற்கு ஸ்லாட் கொடுப்பது, நானே அதிகாலயில் கோழி கூவுவதற்கு முன்னாடியே எழுந்து ஜாகிங்க் போகலாம் என்றால், பெங்களூர் குளிர் யாரை எழுந்திருக்க விடுகிறது. அப்படியே எழுந்து மஃப்ளர், குல்லாய், மங்கி கேப் எல்லாம் போட்டுக் கொண்டு ஓடினால் தெருவில் அலையும் நாய்கள் பயமுறுத்துகின்றன. அவை ஏதாவது மிரண்டு போய் என்னைத் துரத்த ஆரம்பித்து விட்டால்?

ஆக சூர்யா போல் இல்லாவிட்டாலும் ஒரு மாதவன் மாதிரியாவது உடம்பை மாற்ற இது வரை மேற்கண்ட முயற்சிகள் அனைத்தும் ஃபிளாப். ஆனாலும் மனம் தளர்ந்து விட வில்லை நான். இது நான் ஏற்றிருக்குமோர் வேள்வி. ஒரு நாள் வெற்றி பெருவேன்.
ஹம் ஹோங்கே காம்யாப்
ஹம் ஹோங்கே காம்யாப், ஏக் தின்
மன் மேம் ஹை விஷ்வாஸ்
பூராஹை விஷ்வாஸ்
ஹம் ஹோங்கே காம்யாப் ஏக் தின்
என்ற ஹிந்தி பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு என்னை போடிவேட் செய்து கொள்கிறேன். எனக்காகவே இந்த மாதிரிப் பாடல்களை எழுதியிருக்கிறார்களோ??

38 comments:

தாரணி பிரியா said...

ஆஹா இதை படிக்கும் போது எத்தனை சந்தோசமா இருக்கு தெரியுமா? நாங்களும் இதை எல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டுதானே இப்ப குண்டா இருக்கறதுதான் அழகுன்னு கேன்வாஸ் செஞ்சுகிட்டு வரோம் :)

ஒ.கே. சீரியஸா சொல்றேன். டெய்லி காலையில நைட்டுல சோம்பை (பெருஞ்சீரகம்) தண்ணியில போட்டு கொதிக்க வைச்சு அந்த தண்ணியை குடிங்க. அப்புறம் முட்டைகோஸ் சூப் மதியம் சாப்பாட்டுக்கு முன்னால (முடிஞ்சா அது மட்டுமே லன்ஞ்சா :) எடுத்துக்கோங்க. உங்க டார்கெட்ல ஒரளவுக்கு நிறைவேறும்.

மேவி... said...

ஒரே தமாசா இருந்துச்சு......
"ஆஃபீஸில் டீ குடிக்கப் போனால், அருகே Bourbon பிஸ்கட்டும் வைத்திருந்தால், மேனகையைக் கண்ட விசுவாமித்திரர் போல் மனம் அல்லாடுகிறது."
இதுக்கு இரு கோடுகள் டெக்னிக் use பண்ணுங்க...... பேசாம ஒரு onion ரவ தோசை, ஒரு வெண் பொங்கல் அப்புறம் ஒரு டி..... இப்படி ஒரு 10 நாள் eat பண்ணுன வர பில் யை பார்து .... சாப்பிடுற அசை போயிரும்.
“அடிப்பாவி புருஷன் இங்கே அடிமைப் பெண் எம்.ஜி.ஆர் மாதிரி நிற்கிறேன். அப்பா வாங்கிக் கொடுத்த கட்டிலுக்கு என்ன ஆயிருக்குன்னு பார்க்கறியேன்னு”
அவ்வளவு பயகரமான அடி யா???? :-))

"“Excuseme, I have already booked this slot" என்கி்றது பின்னாலிலிருந்து ஒரு குரல். ஏதேது, விட்டால் ஆஃபீஸ் இண்ட்ரா நெட்டில் இதற்காகவெல்லாம் புக்கிங்க் ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கே. "
ha ha ha :-))

"ஜிம் உபயோகிக்கும் எண்ணமே போய் விட்டது."
same blood ?

"அப்படியே எழுந்து மஃப்ளர், குல்லாய், மங்கி கேப் எல்லாம் போட்டுக் கொண்டு ஓடினால் தெருவில் அலையும் நாய்கள் பயமுறுத்துகின்றன. அவை ஏதாவது மிரண்டு போய் என்னைத் துரத்த ஆரம்பித்து விட்டால்? "
பெங்களூர் மட்டும் இந்த நிலைமை இல்லைங்க ..... சென்னைளும் தான். என்னை மொழி படம் ப்ரிவிதிராஜ் rangeக்கு எல்லா ஏரியா நாயும் attendance போடுது......

" ஹம் ஹோங்கே காம்யாப்
ஹம் ஹோங்கே காம்யாப், ஏக் தின்
மன் மேம் ஹை விஷ்வாஸ்
பூராஹை விஷ்வாஸ்
ஹம் ஹோங்கே காம்யாப் ஏக் தின்
என்ற ஹிந்தி பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு என்னை போடிவேட் செய்து கொள்கிறேன். எனக்காகவே இந்த மாதிரிப் பாடல்களை எழுதியிருக்கிறார்களோ??"
உங்களுக்கு மட்டும் இல்லைங்க.... என்னைக்கும் சேர்த்து தான்.

விஜய். நீங்கள் ஏன் கஜினி அமீர் கான் மாதிரி eight pac abs try பன்னுகளேன்......

மேவி... said...

உங்களக்கு எதவது usefull ல டிப்ஸ் கிடைச்சா... என்னக்கும் சொல்லுங்களேன்.....

முகுந்தன் said...

////அதிலே இரண்டு மூன்று பாதாமும் முந்திரியும் சேர்த்துப் போட்டுக் கொடுப்பதால் இன்னொரு டம்ளர் //

நீங்க எழுதற ப்ளாகுக்கே இது சரியா போய்டுமே :)


சிரித்து கொண்டே இருக்கிறேன் விஜய்...

Vijay said...

\\ தாரணி பிரியா said...
ஆஹா இதை படிக்கும் போது எத்தனை சந்தோசமா இருக்கு தெரியுமா? நாங்களும் இதை எல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டுதானே இப்ப குண்டா இருக்கறதுதான் அழகுன்னு கேன்வாஸ் செஞ்சுகிட்டு வரோம் :)\\

வருத்தப் படாத வாலிபர் சங்கம் மாதிரி நாமளும் ஒரு சங்கம் ஆரம்பித்திடுவோமா?

\\டெய்லி காலையில நைட்டுல சோம்பை (பெருஞ்சீரகம்) தண்ணியில போட்டு கொதிக்க வைச்சு அந்த தண்ணியை குடிங்க. \\
நல்ல டிப்ஸா இருக்கே. ட்ரை பண்ணிடுவோம்.

\\அப்புறம் முட்டைகோஸ் சூப் மதியம் சாப்பாட்டுக்கு முன்னால (முடிஞ்சா அது மட்டுமே லன்ஞ்சா :)\\
எது வெறும் சூப் மற்றும் லஞ்சா? என்னங்க இது? மேலும் காயத்ரிக்கு முட்டைக் கோஸ் பிடிக்காதே. முதலில் அவளை சரி கட்டணும் :-)

Thanks for visiting and commenting. Hope you enjoyed reading it.

Vijay said...

\\ MayVee said...
ஒரே தமாசா இருந்துச்சு...... \\

ரொம்ப சந்தோஷம்.


\\இதுக்கு இரு கோடுகள் டெக்னிக் use பண்ணுங்க...... பேசாம ஒரு onion ரவ தோசை, ஒரு வெண் பொங்கல் அப்புறம் ஒரு டி..... இப்படி ஒரு 10 நாள் eat பண்ணுன வர பில் யை பார்து .... சாப்பிடுற அசை போயிரும். \\

எனக்கு போர் அடிக்காத விஷயம் சாப்பாடு. அதுவும் வெண்பொங்கலும் ரவை தோசையும் ரொம்ப பிடிக்கும்.

\\விஜய். நீங்கள் ஏன் கஜினி அமீர் கான் மாதிரி eight pac abs try பன்னுகளேன்......\\
இப்போ மட்டும் என் உடம்புல என்ன இருக்காம்? :-)

Thanks for visiting and commenting.

\\ MayVee said...
உங்களக்கு எதவது usefull ல டிப்ஸ் கிடைச்சா... என்னக்கும் சொல்லுங்களேன்.....\\
தாரணி ப்ரியா பின்னூட்டத்தில் சொன்னதை கடைபிடித்துப் பார்க்கலாமே.

Vijay said...

\\ முகுந்தன் said...
நீங்க எழுதற ப்ளாகுக்கே இது சரியா போய்டுமே :)


சிரித்து கொண்டே இருக்கிறேன் விஜய்...\\

பிளாக் எழுதறதுக்கு அவ்வளவு தெம்பு வேணுமா. இல்லை நீங்க படிக்கறதுக்கு அவ்வளவு தெம்பு வேணுமா ;-) :-)

Thanks for visiting.

மேவி... said...

"Thanks for visiting and commenting."

என்ன இது புதுசா இருக்கு?????
ஏன் இந்த பச பொங்கல் ????

Vijay said...

சும்மா ஒரு சிக்னேசர் போட்டுப் பார்த்தேன் ;-). எடுத்துட்டேன்.

Divya said...

பதிவு படிச்சு முடிச்சும்.....இன்னும் சிரிச்சு முடிக்கலை விஜய்!!

\\இன்னொரு டம்ளரும் கொடுப்பாள். அதிலே இரண்டு மூன்று பாதாமும் முந்திரியும் சேர்த்துப் போட்டுக் கொடுப்பதால் இன்னொரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி, சாரி பாயாசம் உள்ளே ஸ்வாஹா.\\

LOL:))

Divya said...

வெது வெதுப்பான 1 கப் தண்ணீரில்,4 டீ ஸ்பூன் எலுமிச்சை சாரு, 2 டீ ஸ்பூன் தேன் கலந்து, டெய்லி மார்னிங் empty stomach ல குடிச்சா, வெயிட் கம்மி ஆகும்.

இது ட்ரை பண்ணி பாருங்க விஜய்:))

Divya said...

\\இந்த டம்பெல்ஸ், பஸ்கி, வெயிட்டெல்லாம் தூக்கிவிட்டு திடு திப்பென விட்டுட்டா, நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு விடுமாம். ஒரு நலம் விரும்பி சொன்னார்.\\

ada appadiyaa?

ithu vilaiyattuku sonatha......illa nejama??

Divya said...

\\ஆனாலும் மனம் தளர்ந்து விட வில்லை நான். இது நான் ஏற்றிருக்குமோர் வேள்வி. ஒரு நாள் வெற்றி பெருவேன்.\\


வெற்றி பெற வாழ்த்துக்கள் விஜய்!!

Divya said...

exercise bike vaangi unga veetu halla la orama potukonga vijay.......apdiyey TV parthutey cycling panlam:))

http://www.alibaba.com/product-free/218181766/Exercise_Bike.html

Vijay said...

\\ Divya said...
பதிவு படிச்சு முடிச்சும்.....இன்னும் சிரிச்சு முடிக்கலை விஜய்!!\\
சந்தோஷம். அது தானே வெட்டிவம்பின் mission statement :-)

\\வெது வெதுப்பான 1 கப் தண்ணீரில்,4 டீ ஸ்பூன் எலுமிச்சை சாரு, 2 டீ ஸ்பூன் தேன் கலந்து, டெய்லி மார்னிங் empty stomach ல குடிச்சா, வெயிட் கம்மி ஆகும்.\\

சில நாட்களாக அம்மா இதை செய்து தருகிறார். பார்ப்போம் எஃபக்ட் எப்படின்னு. :-)

\\ Divya said...
\\இந்த டம்பெல்ஸ், பஸ்கி, வெயிட்டெல்லாம் தூக்கிவிட்டு திடு திப்பென விட்டுட்டா, நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு விடுமாம். ஒரு நலம் விரும்பி சொன்னார்.\\

ada appadiyaa?

ithu vilaiyattuku sonatha......illa nejama??\\
கன்னா பின்னாவென்று ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து விட்டு திடீரென்று விட்டு விட்டால் இப்படியாகிடும்’னு விஜய் டி.வி. நீயா நானா நிகழ்ச்சில சொன்னாங்க. அதனால அளவோட வெயிட் தூக்கணும். அதை அப்படியே தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கணும்.

\\ Divya said...
exercise bike vaangi unga veetu halla la orama potukonga vijay.......apdiyey TV parthutey cycling panlam:))\\

இதெல்லாம் வாங்கி உபயோகப்படுத்திட்டு விற்றாச்சு :-)

Divyapriya said...

// சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது. எந்த நி்லையில் விழுந்திருக்கிறேன் என்று அறிந்து கொள்வதற்கே பத்து விநாடிகள் ஆகிவிட்டது//

ROTFL :D

செம போஸ்ட் விஜய்…நீங்க யோகா செஞ்ச கதை தான் டாப்பு :)

MSK / Saravana said...

//“அடிப்பாவி புருஷன் இங்கே அடிமைப் பெண் எம்.ஜி.ஆர் மாதிரி நிற்கிறேன். அப்பா வாங்கிக் கொடுத்த கட்டிலுக்கு என்ன ஆயிருக்குன்னு பார்க்கறியேன்னு”//

விடுங்க பாஸு.. கல்யாணமாயிட்டா இதெல்லாம் சகஜம்..

MSK / Saravana said...

எல்லோரும் ஒரே மாதிரியான உடல் கட்டோடு இருக்கவேண்டும் என்று இந்த சமூகம் நிர்பந்திபதே, ஒரு வகையில் இது ஒரு கட்டமைக்கப்பட்ட அழகியல் வன்முறை..

எல்லோரும் ஏன் 8 pack ஆமிர்கான் மாதிரி இருக்கணும்???

Vijay said...

\\ Divyapriya said...
// சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது. எந்த நி்லையில் விழுந்திருக்கிறேன் என்று அறிந்து கொள்வதற்கே பத்து விநாடிகள் ஆகிவிட்டது//

ROTFL :D

செம போஸ்ட் விஜய்…நீங்க யோகா செஞ்ச கதை தான் டாப்பு :)\\
ரொம்ப நன்றி :-)

Vijay said...

\\ Saravana Kumar MSK said...
எல்லோரும் ஒரே மாதிரியான உடல் கட்டோடு இருக்கவேண்டும் என்று இந்த சமூகம் நிர்பந்திபதே, ஒரு வகையில் இது ஒரு கட்டமைக்கப்பட்ட அழகியல் வன்முறை..

எல்லோரும் ஏன் 8 pack ஆமிர்கான் மாதிரி இருக்கணும்???\\

சரவணா, எல்லோருக்கும் 8 பேக் இருக்கணும் என்ற அவசியம் இல்லை. ஆனால் உடற்கட்டு கட்டுக்கடங்காமல் போய் விடக்கூடாது.

ஷாஜி said...

//“அப்பாடா, எங்கப்பா வாங்கிக் கொடுத்த கட்டிலுக்கு ஒண்ணும் ஆகலை”//

--நீங்க ரொம்ப டமாசு சார்...

//நாங்களும் இதை எல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டுதானே இப்ப குண்டா இருக்கறதுதான் அழகுன்னு கேன்வாஸ் செஞ்சுகிட்டு வரோம் :)//

--ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஷாஜி said...

சின்ன சந்தேகம்:

காலைல சோம்பு தண்ணீர் மற்றும் தேன்+எலுமிச்சை தண்ணீர் - இரண்டயும் எடுத்தக்கலாமா?

முட்டைகோஸ் சூப் - இரவில் எடுத்துக்க கூடாதா?

இன்னும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க - எப்டியாவது 2009 முடியறதுகுல்ல என் தொப்பைய கொறைச்சாகனும்..

புதியவன் said...

//சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது. //

இது யோகா முயற்சி மாதிரி இல்ல விஜய்
சர்க்கஸ் முயற்சி மாதிரி இருக்கு...

புதியவன் said...

//ஆக சூர்யா போல் இல்லாவிட்டாலும் ஒரு மாதவன் மாதிரியாவது உடம்பை மாற்ற இது வரை மேற்கண்ட முயற்சிகள் அனைத்தும் ஃபிளாப். ஆனாலும் மனம் தளர்ந்து விட வில்லை நான். இது நான் ஏற்றிருக்குமோர் வேள்வி.//

தொடர்ந்து முயற்சி செய்யுங்க குடியாமலா போய்விடும்...

Vijay said...

\\ஷாஜி said...

--நீங்க ரொம்ப டமாசு சார்...\\
அப்படியா :-)

//நாங்களும் இதை எல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டுதானே இப்ப குண்டா இருக்கறதுதான் அழகுன்னு கேன்வாஸ் செஞ்சுகிட்டு வரோம் :)//

--ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்\\

என்னைப் போல் ஒருவன்(ர்) !!! :-)

Vijay said...

\\புதியவன் said...
இது யோகா முயற்சி மாதிரி இல்ல விஜய்
சர்க்கஸ் முயற்சி மாதிரி இருக்கு...\\

ஹாஹா ஹா :-)

\\தொடர்ந்து முயற்சி செய்யுங்க குடியாமலா போய்விடும்...\\
ஊக்கம் கொடுத்ததற்கு நன்றி :-)

முகுந்தன் said...

//பிளாக் எழுதறதுக்கு அவ்வளவு தெம்பு வேணுமா. இல்லை நீங்க படிக்கறதுக்கு அவ்வளவு தெம்பு வேணுமா ;-) :-)


//

உங்க ப்ளாக் அவ்வளோ சிறப்பா இருக்கு விஜய்...

நான் படிக்க தெம்பு இருக்கு , நேரம் தான் கம்மி :(

முகுந்தன் said...

//Thanks for visiting.//

//என்ன இது புதுசா இருக்கு?????
ஏன் இந்த பச பொங்கல் ????//

Repeatt...

gayathri said...

சரி ராத்திரியாவது இரண்டு சப்பாத்திகள் மட்டும் போதும் என்று நிறுத்தினால், காயத்ரி செய்திருக்கும் சப்ஜி, “இரண்டோடு நிறுத்திக் கொள்வதா” என்று என்னை முறைத்துப் பார்ப்பது போல் இருக்கிறது.

ennathu சப்ஜி, ungakla muraikkutha .enna koduma vijai ithu

gayathri said...

me they 30

Vijay said...

\\gayathri said...
ennathu சப்ஜி, ungakla muraikkutha .enna koduma vijai ithu\\

இரண்டே இரண்டு தானா என்று முறைத்துப் பார்க்கும் என்று தானே எழுதியிருந்தேன் :-)

Poornima Saravana kumar said...

ஆஹா இதை படிக்கும் போது எத்தனை சந்தோசமா இருக்கு தெரியுமா!!

Anonymous said...

நல்ல சுவராஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் (விடுங்க பாஸ் வீட்டுக்கு வீட்டு வாசப்படி) . நன்றாக ரசித்தேன் சிரித்தேன்.

ஆனாலும் இது வேறு ஒன்றும் இல்லை பாஸ் , உள்நாட்டு சதி தான் காரணம்.
சாப்பிடும் பொது யாரையாவது நினைத்து கொண்டே சாப்பிட்டால், அவர்களுக்கு தான் பயன் போய் சேருமாம். என் வீட்டுக்காரர் என்னை நினைத்து கொண்டே சாப்பிடுவது (ஹி..ஹி..) மாதிரி காயத்திரியும் உங்களை நினைத்து கொண்டே சாப்பிடுகிறார்கள்.

சரி நீங்க பதிலுக்கு அவங்களை நினைக்க வேண்டியது தானே என்கிறீர்களா? அது தான் நீங்கள் சாப்பாட்டை வருணிக்கிறதிலெயிருந்து தெரியுதே?

இருந்தாலும் உங்களுக்கு ஒரு டிப்ஸ், நான் உங்களை அதை சாப்பிடக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது என்று தடை செய்யமாட்டேன். நன்றாக சாப்பிடுங்கள், ஆனால் சாப்பிடுவதற்கு முன்னால் என்ன காய் பிடிக்குமோ அதை ராவாக நிறைய சாப்பிடுங்கள்.

ஒரு பதிவு மாதிரி வந்துவிட்டதோ?

RAMYA said...

ரொம்ப தாமதமா படிச்சேன் விஜய்
எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.

இதில் எங்க அக்காவை வேறே இழுத்து
பிடித்து படித்து காண்பிப்பதாக கூறி
ஒழுங்கா படிக்காமே அவங்களக்கு
கோவம் வந்து என்னைய திட்டி
பிறகு அவங்களே இந்த பதிவே மொதல்லையே படிச்சுட்டங்களாம்.

என்னோட லிங்கேலே நீங்க கமெண்ட் போடரீங்கள்ளே. அதுலே போயி படிச்சாங்களாம். சிரிச்சு சிரிச்சு ஒரே அமர்க்களம்தான் போங்க.

RAMYA said...

ஆமா அதென்ன் ஒரு குவளை மோர் சாதம் குவளை எவ்வளவு பெரிசு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

சரி இப்போ வெயிட் குறைஞ்சுதா இல்லையா.

நான் ஒரு ஐடியா சொல்லறேன் கேளுங்க ஒரு மதத்திற்கு மதியம் சாப்படை மறந்துடுங்க.

ஹா ஹா ஹா ஹா ஹா

Anonymous said...

குந்தவை அக்கா சொல்றது புரிஞ்சுதுங்களா அண்ணா "அப்படியே ராவாக நிறைய சாப்பிடுங்கள். " ஒ.கே .

Unknown said...

:-))))))))))))))))))))))