Pages

December 07, 2009

போய் வருகிறேன் பெங்களூரு

நாலு கம்பெனிகள்
முப்பதினாயிரம் மென்பொருள் வரிகள்
அதில், ஆயிரம் குறைகள்
இருபது பணியாளர்
எட்டு வாடகை வீடுகள்
நாலு வீட்டுக்காரர்களிடம் சண்டை
பத்து ரூம் மேட்டுகள்
ஒரு சொந்த வீடு
பப் - டிஸ்கோதே ம்ஹும்
இரண்டு பைக்குகள் ஒரு கார்
வாரந்தோறும் ப்ரிகேட் ரோட்
ஞாயிறுகளில் பிருந்தாவன் ஹோட்டல்
எப்போதாவது கோயில்
பில்லியனில் கேர்ள் ஃப்ரண்டு என்ற கற்பனை
ஒரேயொரு திருமணம்
முன்று கடன்கள்
நான்கு கடன் அட்டைகள்
இதோ விரல் சொடுக்கும் நேரத்தில் கழிந்து விட்டன
புறப்புட்டு விட்டேன் இன்னொரு இடம் நோக்கி
போய் வருகிறேன் பெங்களூரு